ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி
ஆன்லைன் வணிகத்தில் முதலை
சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம்.
இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது.
அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்ள வங்கிகளில் அலிபாபாவிற்கென கணக்குகள் தொடங்கப்பட்டன. பொருட்களை வாங்குபவர் செலுத்தும் பணம் தாவோ வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். அதுபற்றிய தகவலை தாவோ, விற்பனையாளருக்கு கூறும். பொருள், பயனருக்கு சென்று சேர்ந்ததை உறுதிபடுத்தியபிறகு பணம் விற்பனையாளருக்கு அனுப்பிவைக்கப்படும். இதுதான் வியாபார முறை.
அலிபாபாவின் தாவோ இணையதளம், எழுபது சதவீத சந்தையை பிடித்துவிட இபே தோல்வியுற்று தனது வணிகத்தை நிறுத்திக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியது. கடலில் சுறாவாக இருந்த இபே, யாங்கிட்ஸ் ஆற்று முதலையான மாவிடம் தோற்றுப்போன கதை இதுதான். அலிபாபா வலைத்தளம் 240 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. தாவோபாவோ, டிமால் என வேறு வலைத்தளங்களும் மாவுக்கு வருமானத்தை ஈட்டித் தருகின்றன.
உலக வணிக கழகத்தில் 2001ஆம் ஆண்டு சீனா இணைந்தது. இதற்குப்பிறகு அலிபாபாவின் வளர்ச்சி வேகம் பிடித்தது. அதில் கோல்ட்மேன் சாக்ஸ், சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்தன. 2008ஆம் ஆண்டு அலிபாபா, நிதிச்சேவைகளை சிறுகுறு வணிகர்களுக்கு வழங்கத் தொடங்கியது. யூபாவோ இப்படியான நிறுவனம். வங்கிகள் வழங்குவதை விட அதிக வட்டியைக் கொடுத்தது. இந்த தளத்தில் இயங்க, அலிபே கணக்கு இருந்தால் போதுமானது. ஆர்டி,எப்டி கணக்குகளை தொடங்குகிறார்கள் அல்லவா, அதே ஐடியாதான் யூபாவோ. அலிபாபாவின் ஐடியாவை காப்பியடித்து பைடு, டென்சென்ட் ஆகிய நிறுவனங்களும் நிதிச்சேவையில் குதித்தன.
இன்றைய தொழிலதிபர்கள் பெருமை, பேராசை, கலாசாரம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டிருக்கிறார்கள்.



கருத்துகள்
கருத்துரையிடுக