ஹெயர் வெற்றிக்கதை!
ஹெயர் வெற்றிக்கதை
1949ஆம் ஆண்டு பிறந்தவர் ஸான் ருய்மின். இவர் பிறந்த ஆண்டில்தான் சீனாவில் மக்கள் சீன குடியரசு உருவானது. இவர் வளர்ந்து வந்த காலத்தில்தான் சீனாவில் கலாசார புரட்சி, மிகப்பெரிய முன்னேற்ற பாய்ச்சல் நடவடிக்கைகள் நடைபெற்றன. இவை அவரின் கல்வி, சமூகத்தைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை பாதித்திருக்கலாம்.
ருய்மினுக்கு நிறுவனத்தை நடத்தும் மேலாண்மை திறன் எப்படி வந்தது என ஒருவர் சந்தேகம் கொள்ளலாம். அவருக்கு இந்த வகையில் ஆதர்சம், ஜப்பானிய நூல்கள். ஜப்பானிய மேலாண்மை நூல்களை படித்தே தனது நிர்வாக அறிவை பெருமளவு வளர்த்துக்கொண்டார். அவையெல்லாம் குயிங்டாவோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலைக்கு அரசு அனுப்பி பணியாற்றச் சொன்னபோது பயன்பட்டது. தொடக்கத்தில் அங்கு ருய்மின் சென்றபோது, குளிர்பதனப்பெட்டிகளை தயாரித்தாலும் அதில் நிறைய தவறுகள் இருந்தன. மோசமான வடிவமைப்பு காரணமாக அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்றனர். மக்களுக்கு அதை வாங்கினாலும், குளிர்பதனப்பெட்டி அடிக்கடி பழுதானதால், விரக்தி அடைந்தனர்.
ருய்மின், தொழிலாளர்களிடம் குளிர்பதனப்பெட்டி பற்றி கேட்டார். செய்யும் போது பிழை ஏற்பட்டாலும், குறைபாடாக இருந்தாலும் அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்றுவிடுவதாக சொன்னார்.
ருய்மின், குறைபாடு உள்ள 76 குளிர்பதனப்பெட்டிகள் மக்களுக்கு விற்கப்பட இருப்பதை அறிந்தார். அங்கு சென்று, ஒரு குளிர்பதனப்பெட்டியை தனது கையால் உடைத்து எறிந்தார். மீதியுள்ளவற்றை தொழிலாளர்கள் உடைத்தெறிய உத்தரவிட்டார். பிறகு, குறைபாடுள்ள பொருட்களை இனி மக்களுக்கு குறைந்தவிலைக்கும் விற்க கூடாது என்று சொன்னார்.
தொழிலாளர்களை ஜப்பானிய மேலாண்மை முறைக்கு ஏற்ப பயிற்றுவித்தார். தரமான குளிர்பதனப் பெட்டிகளை உருவாக்க முயற்சித்தார். அப்போது, குயிங்டாவோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலையோடு ஜெர்மன் நாட்டு குளிர்பதனப்பெட்டி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து பணியாற்றியது. எளிமையாக சொன்னால் கூட்டு தொழிற்சாலை. பின்னாளில் குயிங்டாமோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலை ஹெயர் என பெயர் மாறியது. ஷாங்காய் பங்குச்சந்தையில் குளிர்பதனப்பெட்டி உற்பத்தி நிறுவனம் பட்டியலிடப்பட்டது. அதன் வழியாக திரட்டிய நிதியில் நிறைய தொழிற்சாலைகளை ஹெயர் அமைத்தது.
அரசியல் அடிப்படையில் டெங் ஷியோபிங் காலத்தில் ஹெயர் நிறுவனம் வளர்ச்சி பெற்றது. உள்நாட்டில் உள்ள பதினெட்டு நிறுவனங்களை கையகப்படுத்தியது. இதன் மூலம், சீனாவில் முன்னணி குளிர்பதனப்பட்டி நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. இன்றும் ஹெயர் வலைத்தளத்தில் குளிர்பதனப்பெட்டி, சலவைப் பெட்டி, டிவி என்றே வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். தொண்ணூறுகளுக்கு பிறகு ஹெயர் நிறுவனம், உலகளவில் பல்வேறு நாடுகளில் கால்பதிக்கத் தொடங்கியது. தெற்காசியாவில் தொழிற்சாலைகளை உருவாக்கியது. ஜப்பானின் சான்யோ எலக்ட்ரிக், பிரான்சின் பக்யால் ஆகிய முன்னனி நிறுவனங்களை கையகப்படுத்தியது.
பார்ச்சூன் 500 பட்டியலில் சிறந்த நிறுவனமாக இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. சீன நிறுவனம் என்றால் போலியானது, பொருட்கள் தரமில்லை என்றெல்லாம் வன்மத்தோடு கூறிய மேற்கு நாடுகள், இன்று அப்பொருட்கள் இல்லையென்றால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். பொருட்களின் தரத்திற்கேற்ப சரியான விலை சமரசமில்லாத தரம், புதிய தொழில்நுட்பங்கள் என ஹெயர் அசத்தி வருகிறது. எலிகள் கடிக்க முடியாதபடி வயர்கள், நூறு மணிநேரம் மின்சாரம் இல்லாதபோதும் குளிர்ச்சி குறையாத ஃப்ரீசர் என குளிர்பதனப்பெட்டியில் ஹெயர் உருவாக்கிய சாதனை எளிதானது அல்ல.
ஹூவெய் நிறுவனம் சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு துறையில் சாதனை படைத்துவருகிறது. என்றால் ஹெயர் சமையல் பயன்பாடு, வீட்டு உபயோக பொருட்களில் உலகளவில் சிறந்து விளங்குகிறது.
Haier has acquired several brands, including GE Appliances, Fisher &
Paykel, Candy, and Carrier Commercial Refrigeration. These acquisitions
have helped Haier expand its product offerings and market reach in the
home appliance sector.


கருத்துகள்
கருத்துரையிடுக