இடுகைகள்

பத்திரிகையாளர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் சுற்றும் பத்திரிகையாளர்!

படம்
உலகம் சுற்றும் பத்திரிகையாளர் ! பதினேழு நாடுகள் , பதினெட்டாயிரம் கி . மீ தொலைவு கடந்திருக்கிறார் பத்திரிகையாளர் பால் சலோபெக் . ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு நடந்து சென்றதை விளக்கும் நேஷனல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான முயற்சி இது .  " கார்கள் , விமானங்கள் மூலம் செய்தி சேகரிப்பது ஒருவகை என்றால் நடைபயணத்தின் மூலம் மனிதர்களை சந்தித்து அவர்களின் வாழ்வை அறிவது புதிதாக உள்ளது " என்கிறார் இருமுறை புலிட்ஸர் விருது வென்ற பத்திரிகையாளர் பால் சால்பெக் . பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் வழியே நடந்துசென்றுகொண்டிருக்கிறார் . டீ குடித்துவிட்டு நடக்கும் பால் , தாபாவில் உணவருந்திவிட்டு தினசரி நாற்பது கி . மீ நடக்கிறார் . இரவில் ஏதேனும் சாலையோரமுள்ள குடும்பங்களோடு தங்கி இளைப்பாறி பயணிக்கிறார் . " இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் செழுமையாக வளர்ந்துள்ள கோதுமைகளைப் பார்க்கிறேன் . எனக்கு எந்தவேறுபாடுகளும் தெரியவில்லை . சீக்கியர் , பாகிஸ்தானியர் இருவரையும் சந்தித்து பேசியுள்ளேன் . இணையத்தில் இதுபோல கட்டுரைகளை தயாரிக்கலாம் . ஆனால் அவை அனுபவத்திற்கு நிகராகாது