இடுகைகள்

கனடா ஸ்பெஷல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனடாவின் பெயர் சொல்லும் படைப்புகள்!

படம்
கனடா ஸ்பெஷல் ! CANADIAN MILK CHOCOLATE கிரிஸ்பியாக அடுத்தவர் கையிலிருப்பதை கூட பிடுங்கி தின்னும் ஆசை தோன்றச்செய்வது கனடா மில்க் சாக்லெட் . அமெரிக்கா சாக்லெட் போல கசப்பில் திளைக்காமல் தித்திப்பாகவும் க்ரீம் சுவையிலும் அசத்தும் சுதேசி கனடா சாக்லெட்டுகள் அமெரிக்காவிலும் விற்பனையில் பின்னிபெடலெடுக்கின்றன . BUTTER TARTS சோள சிரப் , சர்க்கரை , வெண்ணெய் கலந்து செய்யப்படும் அருமையான உணவு . பிரான்சிலிருந்து 1600 களிலேயே கனடாவுக்கு வந்துவிட்ட உணவு என்கிறது உணவு சர்வே . கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு உணவான பட்டர் டார்ட்ஸ் கனடா நாட்டு பேக்கரிகளில் கிடைக்கும் நல்லுணவு . MILK BY THE BAG நம்புங்கள் . பாக்கெட்டில் அல்ல ; பிளாஸ்டிக் பேக்கிலுள்ள பாலை வாங்கி தோளில்போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடலாம் . ஒன்டாரியோ , க்யூபெக் , கிழக்கு கனடா ஆகியவற்றில் பால் பேக் மிக பிரபலமானவை . நிறைய பேருக்கு தேவையான பாலை இம்முறையில் பர்சேஸ் செய்யலாம் . RED RIVER CEREAL கோதுமை , கம்பு ஆகியவற்றால் செய்யப்படும் அற்புத சுவைகொண்ட உணவுவகை . 1924 ஆம் ஆண்டிலிருந்து உலகை ஆண்டுவரும