இடுகைகள்

வீடியோசாட். மூளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அழியும் நிலையிலுள்ள மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை! - பதில் சொல்லுங்க ப்ரோ

படம்
            வீடியோ சாட்டிங் செய்யும்போது மூளையில் என்ன நடக்கிறது ? பொதுவாக ஒருவருடன் நடைபெறும் உரையாடலில் 80 சதவீதம் முகத்திலுள்ள உணர்ச்சிகள் மூலமாகத்தான் நடக்கிறது . ஒருவருடன் பேசும்போது புன்னகை , இமைகளை உயர்த்துவது , உதடுகளில் ஏற்படும் மாற்றம் , கண்கள் பெரிதாவது ஆகிய விஷயங்கள் நடக்கும் . 2013 இல் நடைபெற்ற ஆய்வில் , வீடியோ சாட்டிங்கில் ஒருவர் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது தெரியவந்துள்ளது . இதனை சைபர்சைக்காலஜி பத்திரிகை வெளியிட்டுள்ளது . பொதுவாக பேசுவது , குறுஞ்செய்திகளை அனுப்புவது ஆகியவற்றை விட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இதில் அதிகம் நடக்கிறது . நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் எங்கே போகின்றன ? பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 8 சதவீதம் மட்டுமே மறுசுழற்சியாகின்றன . மற்றவை எல்லாம் கழிவாகவே தேங்குகின்றன . அமெரிக்காவில் இருந்து சீன நிறுவனங்கள் 7 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன . இதனால் அமெரிக்காவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதில்லை . சீன நிறுவனங்கள் இதனை இருபது ஆண்டுகளாக செய்து வருகின்றன . 20