இடுகைகள்

சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் நீக்கம்- வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகம் - விலக்கப்பட்ட தகவல்கள்

படம்
  1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படை சட்டம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில் சில மாவட்டங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. அசாம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள், இதன் பயனைப் பெறுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாந்தில் சிறப்பு ஆயுதப்படையினரால் 13 மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்பற்றி எழுதிய தமிழ் ஊடகங்கள் தொட்டு தடவிக்கொடுத்தது போல தலைப்பிட்டு அரசுக்கு கோபம் வராதது போல செய்தியை தலைப்பை உருவாக்கின. அந்த சம்பவம்தான் ஆயுதப்படை விலக்கத்திற்கு முக்கியமான காரணம். அங்கு ராணுவ ரீதியான பிரச்னைகள் 74 சதவீதம் குறைந்துள்ளன என ஆதாரத்தையும் மத்திய அரசு தனது முடிவுக்கு காரணமாக சுட்டியுள்ளது.  சிறப்பு ஆயுதப்படை சட்டம் ஜம்மு காஷ்மீரில் இன்னும் அமலில்தான் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 3 அன்று, மூன்று அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது.  அசாம் இங்குள்ள 23 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை சட்டம் விலக்கப்படுகிறது. பக்சா, பெர்பெட்டா, பிஸ்வநாத், போன்கைகாவோன், சிராங், தர்ராங் என நீண்டுகொண்டே செல்க