இடுகைகள்

படுகைத் தழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அநீதிக்கு எதிராக விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் எரியும் நெருப்பு - படுகைத் தழல் - புலியூர் முருகேசன்

படம்
  படுகைத் தழல் புலியூர் முருகேசன் நாவல் படுகைத் தழல் நாவல் பரிசோதனை முயற்சியான பல்வேறு விஷயங்களை தீர்க்கமான தன்மையில் பேசுகிறது.  சமகாலத்தில் இருந்து சோழகாலம் வரை பயணிக்கும் நூல் அந்தந்த காலகட்டத்தில் எளிய மனிதர்கள் மீது அதிகாரம் எப்படி பாய்ந்து அவர்களது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என விளக்கமாக பேசுகிறது.  கதையின் தொடக்கத்தில் கலியமூர்த்தி என்பவர் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு சில நாட்களாக அடிவயிற்றில் வலி உள்ளது. அதை சரிசெய்ய அவரது பெரியப்பா மகன் அவரை இரண்டு ரூபாய் மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறான். அவர் ஹோமியோபதி மருத்துவர். பல்வேறு சோதனைகளை செய்தவர், அடிவயிற்று வலிக்கு காரணம் வேறு எங்கோ உள்ளது என கலியமூர்த்தியை அவரது நினைவுகளின் வழியாக பேச வைக்கிறார்.  கதை தொடங்குகிறது. ராசன் எனும் புலையக்குடி ஆள் எப்படி வேளாளர், பிராமணர் உள்ளிட்ட மேல் சாதிகளால் வதைபட்டு தனது நிலத்தை இழந்து பசியால் அவர் மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமே வதை பட்டு அழிகிறது. ஏறத்தாழ நாவல் முழுக்க வரும் எளிய விளிம்புநிலை மனிதர்கள் அனைவருமே இதேபோல மரணத்தை அல்லது மரணத்தையொத்