இடுகைகள்

டாக்டர் ககன்தீப் கங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராயல் சொசைட்டியில் இந்தியப் பெண்மணி!

படம்
ராயல் சொசைட்டியில் இந்தியப் பெண்! டாக்டர் ககன்தீப் கங், நானூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ராயல் சொசைட்டியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தடுப்பூசி திட்டங்களை மேம்படுத்திய பணிகளின் சாதனைக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரோட்டோ வைரஸ், டைபாய்டு காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி பெருமைக்குரியவர் டாக்டர் கங். தன்னார்வலர்களை தொற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தும் சிம் எனும் முறையை இந்தியாவில் செயல்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார். மருத்துவத்துறையில் மருந்துகளை மனிதர்களுக்கு வழங்கும் முன்பு விலங்குகளிடம் சோதித்துப் பார்ப்பார்கள். இதற்கு மனிதர்களைப் போன்றே உடல் அமைப்பு கொண்ட விலங்குகளை தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் எலி இதற்கு பயன்படுத்தப்படும். சிம் சோதனையில் நல்ல உடல் தகுதி கொண்ட மனிதர்கள் பயன்படுத்தப்படுவார்கள். முழு ஆற்றல் கொண்ட கிருமி இம்முறையில் உடலில் செலுத்தப்பட மாட்டாது. குறைந்த ஆற்றல் கொண்ட கிருமியை உடலில் செலுத்து தொடர்ச்சியாக கண்காணித்து நோயின் தன்மையைக் குறித்து கொள்வார்