இடுகைகள்

பாட்காஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

படம்
  ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹூயூபெர்மன் நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி? மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.   உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்   உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று. பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

இந்திய மாணவர்களுக்கு உதவும் இ கல்வித்திட்டங்கள்!

படம்
  அரசின் இணையவழி கல்வித் திட்டங்கள் பிஎம் இ வித்யா 2020ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். தீக்ஷா அறிவை டிஜிட்டல் வழியில் பகிர்ந்துகொள்வதற்கான வலைத்தளம் என திட்டத்தை மொழிபெயர்க்கலாம். 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வசதி. பாடநூல்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் போதும். உடனே என்சிஇஆர்டி பாடநூல்களை படிக்க முடியும். இதனை 18 மொழிகளில் அணுக முடியும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம்.  நிஷ்த்தா இது ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம். தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தலாம்.  ஸ்வயம் 9ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரையிலான பல்வேறு பாடங்களை ஆன்லைன் வழியாக கற்கலாம். இதனை யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகி பாடங்களை கற்க முடியும் என்பது முக்கியமான அம்சம். பாடங்கள் அனைத்தும் இன்டராக்டிவானவை என்பதோடு இலவசம் என்பதையும் மனதில் குறித்துக்கொள்ளுங்கள்.   கடந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இதில் இணைந்தன

சர்ச்சையான விஷயங்களை கலந்து பேசுவோம் வாங்க! - வீனா பாட்காஸ்ட்

படம்
  வீனா பாட்காஸ்ட்  வீனா பாட்காஸ்டைக் கேட்கும்போது தோன்றுவது, இரண்டு நெருங்கிய நண்பர்கள் தங்களுக்குள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஜாலியாக பேசிக்கொள்ளும் முறைதான். அதில் ஒருவர் என்ன பெறுகிறார் என்பது கேட்பவரின் விருப்பம் சார்ந்தது.  வீனா பாட்காஸ்ட் ஐடியா சென்னையில் ஐடி வேலை பார்க்கும் வினுஷ்குமாரின் மூளையில்தான் உதித்திருக்கிறது. இவரும் இவரது நண்பரான நவீனும் போனிலேயே ஏராளமான விஷயங்களை பேசி தீர்த்திருக்கிறார்கள். இப்படி பேசுவதை நாம் ஏன் பாட்காஸ்ட் வழியாக செய்யக்கூடாது என யோசித்து 2020 இல் தொடங்கியதுதான் வீனா பாட்காஸ்ட்.  பொதுவாக, பொது இடங்களில் சில விஷயங்களைப் பேசக்கூடாது என நாம் நினைப்போம். சிலர் அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட விஷயங்களைத் தேடி தேடி பேசுகிறார்கள் இரு நண்பர்களும். வினுஷ்குமார் சென்னையில் இருக்கிறார். நவீன் ஜெர்மனியில் வாழ்கிறார். இணையத்தில் கலந்துகொண்டு பாட்காஸ்ட் நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்கள்.  வினுஷ்குமார், நவீன் பேசிய  இன்னும் யார் சார் சாதி பாக்குறா என்ற பாட்காஸ்டைக் கேட்டோம். அதில் வினுஷ்குமார், சாதி சார்ந்த தனது சொந்த அனுபவங்க

அவசியம் கேட்க வேண்டிய பாட்காஸ்டுகள்- ரீடர்ஜ் டைஜெஸ்ட் பரிந்துரை

படம்
                      கேட்க வேண்டிய பாட்காஸ்ட்கள் வைல்ட் திங் அயல் கிரக மனிதர்கள் , அவர்களைப் பற்றிய சுவாரசியமான ஏராளமான செய்திகளை சொல்லுகிறார்கள் . இதுதொடர்பான வெளியான புகைப்படங்கள் , செய்திகள் , வினோதமான வெளிச்சத்தை பார்த்த விமானிகள் என பல்வேறு செய்திகள் கேட்க வினோத ரச மஞ்சரியாக மனதை மயக்குகின்றன . த்ரில்லிங் டேல்ஸ் ஆப் மாடர்ன் கேபிடலிசம் வணிக நிறுவனங்கள் எப்படி வளர்ந்தன , பெற்ற வெற்றி , அடைந்த தோல்வி ஆகியவற்றை பற்றி பேசுகின்றனர் . வணிகம் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பாட்காஸ்டை காதுகொடுத்து கேட்கலாம் . கிட்னாப்டு அண்ட் டிராப்டு பெலோ கிரவுண்ட் மைக் பாக்கம் என்பவர் கடத்தப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர் . இவர் எப்படி மரப்பெட்டியில் இருந்து உயிர்பிழைத்து தப்பித்து வந்தார் என்பதை சுவாரசியமாக சொல்லுகிறார்கள் . சாகச அனுபவத்தை பெற நீங்கள் இதனை கேட்கலாம் . பேரிடேல்ஸ் எவரி சைல்ட் ஷூட் நோ உலகம் முழுக்க புகழ்பெற்ற அலாவுதீன் , அராபிய இரவுகள் உள்பட ஏராளமான கதைளளை சொல்லுகிறார்கள் . குழந்தைகளுக்கான கதைகள் என்றாலும் பெரியவர்களும் கேட்கலாம் . கதை

மனதிலுள்ள விரக்தியை இசையாக மாற்றுவதுதான் பலம்! இசையமைப்பாளர் அங்கூர் திவாரி

படம்
              அங்கூர் திவாரி இசையமைப்பாளர் இசைக்கலைஞராக இருப்பதன் நல்ல அம்சம் என்ன ? உங்கள் மனதிலுள்ள அனைத்து விரக்திகளையும் இசையாக மாற்றிவிட முடியும் . தனியிசை பாடல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பயமின்மை . உங்களை நீங்களே கிண்டல் செய்துகொள்வதாக ஏதாவது சம்பவத்தை கூறுங்கள் . கோல்கத்தாவில் ஹலோ சென்னை என்ற இசைப்பயணத்தை தொடங்கினோம் . பின்னாளில் இந்த திட்டம் தனது கான்செப்டை இழந்துவிட்டதாக உணர்ந்த அந்த நேரத்தை இப்படி சொல்லலாம் . தூங்கப்போகும் முன்பு என்ன புத்தகத்தை படிப்பீர்கள் ? புத்தகத்தின் இடத்தை இப்போது பாட்காஸ்ட் பிடித்துக்கொண்டுவிட்டது . அரியா கோட் என்ற பாட்காஸ்டை இரவுகளில் கேட்டு வருகிறேன் . முதல் டேட்டில் கடைப்பிடி ஏதாவது யோசனை சொல்லுங்கள் . சிறப்பான உரையாடல் நேரத்தை மறக்க வைக்கும் . உறவுகளை கையாள்வதற்காக எந்த விதியை பின்பற்றுகிறார்கள் ? அவரவருக்கான இடத்தை இருவரும் புரிந்துகொள்ளவேண்டு்ம் . ஆரோக்கியத்திற்காக எந்த விஷயத்தை கடைப்பிடிக்கிறீர்கள் ? நீரையும் தூக்கத்தையும் எப்போதும் விடாமல் கடைப்பிடி

ஆடியோ மூலமாக என்னென்ன விஷயங்களை செய்யலாம்?

படம்
              ஆடியோவில் ஆடிப்பாடுவோம் ! ஸ்மார்ட்போன்களில் குரல் மூலம் செயல்படும் உதவியாளர் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகள் ஆகப்போகின்றது . இதனை இன்னும் நாம் சிறப்பாக பயன்படுத்த கற்கவேண்டும் . அப்போதுதான் எழுதுவதை விட எளிதாக பேசி ஒரு விஷயத்தை செய்யமுடியும் என்பதை உணர்வீர்கள் . உதவியாளரால் என்ன செய்யமுடியும் ? ஆப்பிளின் சிரி , கூகுளின் ஆண்ட்ராய்டு சாம்சங்கின் பிக்ஸ்பை ஆகியவை இன்று பெரும்பாலோனாரின் போன்களில் பயன்பாட்டில் உள்ளது . இதனை முழுமையாக பயன்படுத்த அதனைப் பற்றி அறிவது அவசியம் . எனவே இதுபற்றி இணையத்தில் தேடிப் பார்க்கலாம் . அல்லது போனில் உள்ள உதவியாளரிடமே உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்டு பதில் பெறலாம் . என்ன செய்யலாம் ? இன்று வேலைகள் என்னென்ன என்பது உங்களது அற்புதமான காந்தர்வ குரலில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் . போனில் நோட்ஸ் எடுக்கும் ஆப்புகளும் இருக்கும் . அதனைப் பயன்படுத்தலாம் . இல்லையெனில் போனில் கம்பெனியே கொடுத்துளமள ரெக்கார்ட் ஆப்பை பயன்படுத்துங்கள் . பட்டனை அழுத்தி பேசி பதிவுசெய்துகொண்டு அதனை கணினியில பதிவேற்றி பேக்கப் எடுத்து வைத்துக்

சினிமா, இசை அல்லாமல் பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள்! - விரிவாகும் பாட்காஸ்ட் சந்தை

படம்
                பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் ! பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மொழிகளில் பாட்காஸ்ட் (Podcast) சந்தை சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது . டிவி , இணையம் வெற்றி பெற்றுள்ள நவீன காலத்திலும் பாடல்கள் அல்லாத நிகழ்ச்சிகளைக் கொண்ட பாட்காஸ்ட் சந்தை சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதிலிபி எஃப்எம் என்ற ஆப் , விவசாயிகள் வாழ்க்கை பற்றி பாட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டது . இதனைப் படித்துவிட்டு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தங்கள் மொழிகளில் தெரிவித்திருந்தனர் . 2014 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் பாட்காஸ்ட் சேவையை வழங்கத் தொடங்கியது . இந்த செயலியில் பதிவிடப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட ரசிக்கப்பட்டு வருகின்றன . பாடல்கள் அல்லாத பல்வேறு செய்திகளுக்கான பாட்காஸ்ட் சந்தை வளர்ச்சி பெற்றாலும் வீடியோ மீதான மோகம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது . குறிப்பாக யூடியூப்பின் வளர்ச்சி 45 சதவீதம் ( ஜூன் , ஜூலை ) வளர்ச்சியடைந்துள்ளது . நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கு அதிகமாக

பாட்காஸ்ட்சந்தை உயருகிறது! - இந்தியாவில் தோன்றும் புது மோகம்!

படம்
நகர வாழ்க்கை கிராமத்திலிருப்பவர்களுக்கு சொர்க்கமாக தோன்றும்.ஆனால் காரில், பைக்கில் செல்லும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு எரிச்சலூட்டும். இதிலிருந்து காப்பாற்ற இநூல்கள் உதவும். ஆனால் பயணிக்கும்போது தற்போது பாட்காஸ்டுகள் இப்பணியைச் செய்கின்றன. இதனால் தினசரி செய்தி, காமெடி, சுயமுன்னேற்றம் என அனைத்தும் ஆடியோ வழியாக கேட்க முடிகிறது. “நாங்கள் உங்கள் நேரத்தை திருடுவதில்லை” என்கிறார் ஹப்ஹாப்பர் எனும் பாட்காஸ்ட் நிறுவனரான கௌதம் ராஜ் ஆனந்த். பாட்காஸ்ட் என்பது தொடரின் தனித்தனி கோப்புக்களை வெளியிட பயனர்கள் கேட்பதுதான். பாட்காஸ்ட் எனும் ஆடியோ ஒலிபரப்பு கோப்புகளை நீங்கள் தரவிறக்கி கேட்டு மகிழலாம். இது படிப்பது போன்ற சோர்வைத் தருவதில்லை என்கிறார்கள் மெட்ரோநகர வாசிகள். 2017 இல், 25.4 மில்லியன் பேர் பாட்காஸ்ட்டுகளை கேட்டு வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 176 மில்லியன் பேர் இதனைக் கேட்பார்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் இங்கிலாந்தின் ஆடியோபூம், அமெரிக்காவின் ட்யூன் இன், சீனாவின் ஜிமலயா ஆகிய நிறுவனங்கள் பாட்காஸ்ட் வணிகத்தில் முன்னே நிற்கின்றன. ஜியோ சாவன், வின்க் மியூசிக் ஆ