கலை எளிய மனிதர்களும் அணுகும் விதத்தில் இருக்கவேண்டும் - தேவோன் ரோட்ரிக்ஸ், டிக்டாக் ஓவியக்கலைஞர்
புதுயுக தலைவர்கள் - தேவோன் ரோட்ரிக்ஸ் ஓவியக்கலைஞர் ஓவியத்தைக் கற்கும்போது, ரோட்ரிக்ஸ் கனவு செல்சா பகுதியிலுள்ள கலைக் கண்காட்சியகத்தில் அவரது ஓவியங்களை இடம்பெறச்செய்வது, ஆனால் அவருக்கு அதுபற்றிய தேடலில் கிடைத்த அனுபவம், மரபான ஓவியங்களை குறிப்பாக நீ வரைவதை அங்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான். ரோட்ரிக்ஸ் வறுமையான நிலையில் வேறு இருந்தார். அவரது கனவு எளிதாக நிறைவேறாது என்று அவருக்கு தெரிந்தது. போர்ட்ரைடுகளை வரைந்துகொண்டிருந்தவர், காசு கொடுத்து அருங்காட்சியகம், கலைக்கண்காட்சிகளுக்கு போகக்கூட முடிந்ததில்லை. மன்ஹாட்டனிலுள்ள ஓவியப்பள்ளிக்கு மாறியவர், ஓவியங்கள் வரைவதை நிறுத்தவில்லை. கிடைத்த நேரத்தில் சுரங்கப்பாதை, ரயில்நிலையம், பேருந்து என அறிமுகமற்றவர்களை படமாக வரைந்துகொண்டிருந்தார். பெருந்தொற்று காலத்தில் நிறைய போர்ட்ரைடுகளை வரைந்தார். சீன ஆப்பான டிக்டாக்கில் தான் படம் வரைந்து அதை அறிமுகமற்றவர்களுக்கு வழங்குவதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இப்படியான முதல் பதிவு, ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அடுத்து, நான் சந்திக்கும் மனிதர்களின் முகம் எப்ப...