இடுகைகள்

காமிக்ஸ் விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவிரவாதிகளை கருவறுத்து பணயக்கைதியை மீட்கும் மாடஸ்தியின் குழு! - கானகத்தில் கண்ணாமூச்சி

படம்
கானகத்தில் கண்ணாமூச்சி முத்து காமிக்ஸ் விலை. 2.50 லேடி மாடஸ்தி, வில்லி கார்வின் இணைந்து கலக்கியுள்ள காமிக்ஸ். வில்லி கார்வின் மாடஸ்தியின் சொல்படி தன் நண்பருடன் உல்லாச சுற்றுலா சென்றிருக்கிறார். மாடஸ்தி கௌரேம்போ எனும் சிறிய நாட்டில் இருக்கிறார். அவரது நண்பரின் பெண் தோழி டயானா, பிரிட்டிஷ் தூதரின் மகள். எப்போதும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் உளறி வைத்து எரிச்சல் படுத்தும் குணம் கொண்டவள். அவளை அந்நாட்டு தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். எப்படி நாட்டின் அதிபரின் துணையுடன் மாடஸ்தியும், வில்லி கார்வினும் அப்பெண்ணை மீட்கிறார்கள் என்பதே கதை. கறுப்பு வெள்ளை காமிக்ஸிலும் மாடஸ்தியின் கவர்ச்சிகரமான உடைகளும், உடலும் மயக்குகிறது. இங்கிதமாக நடந்துகொள்ளும் அவரது தன்மை பல்வேறு ஆண்களை அவரைச் சுற்றிவரச்செய்கிறது. அந்நாட்டில் முன்னமே ரவுடிகளை வைத்து தனி குழுவை இயக்கி வந்த மாடஸ்தியை திடீரென அதிபர் சந்திக்கும்போதே நிச்சயம் அதிபரைச் சுற்றித்தான் கதை திரும்ப போகிறது என ஊகிக்க முடிகிறது. தீவிரவாதிகள் ஆணவக்காரியான டயானாவை கடத்தியவுடன் ஏறத்தாழ அவர்கள் அதிபரை மிரட்டுவார்கள்

அதிபர் தேர்தல் வேட்பாளரை ஜெயிக்க வைக்க நூதன சதிகள் - கத்தியில்லாத யுத்தம்!

படம்
லயன் முத்து காமிக்ஸ் டிடெக்டிவ் காரிகன் தோன்றும் கத்தியில்லாத யுத்தம் காரிகன் மிகத்திறமையானவர்தான். ஒவ்வொரு முறையும் அவருக்கு சவாலான விஷயங்களை உளவுத்துறையும்தான் எப்படித் தரும்? இப்படி நினைத்து கதையை சுமாராக கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓமர் என்ற அரசியல் தலைவர் நிற்கிறார். ஆனால் அவருக்கு தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்லை. நேர்மையானவர்தான், அதனால்தான் அவர் வெல்ல வாய்ப்பில்லை என்று அவருக்கு புரிந்துவிடுகிறது. அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் உளவுத்துறைக்கு சில சமூகவிரோதிகள் அனுப்பி வைக்கின்றனர். உடனே உளவுத்துறை தலைவர் காரிகனை அழைத்து ஓமரைப் பாதுகாக்கும் வேலையைக் கொடுக்கிறார். காரிகனுக்கு இதுபோல ஏப்பை சாப்பையான வேலைகளில் இஷ்டம் கிடையாது. இருந்தாலும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது என்பதால் கொட்டாவியை அடக்கியபடி வேலைக்குப் போகிறார்., அங்கு பார்த்தால் ஓமரின் மகள், ஓமரை பாதுகாக்கும் பிரிக்ஸ் என்ற மெய்க்காப்பாளன் ஆகியோர் காரிகனை கண்டபடி பேசி மனத்தை குலைக்க பார்க்கிறார்கள். காரிகன் அங்கு நடைபெறும் கைகலப்பில் பிரிக்ஸை தூக்கி வீசி விடுகிறார். பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட

வீடுகளை எரித்த கான்சாஸ் கொடூரன் - லயன்காமிக்ஸ் என்பிஎஸ் ஸ்பெஷல்!

படம்
பிளேடுபீடியா கேப்டன் டைகரின் கான்சாஸ் கொடூரன் லயன் காமிக்ஸ் - என்பிஎஸ் விலை 400 பதினெட்டாம் நூற்றாண்டுக்கதை. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அப்போது, அரசுப்படையைச் சேர்ந்த கொடூரன் லேன் தலைமையேற்று புரட்சிப்படையை ஒடுக்குகிறார். அதேசமயம் இவருக்கு வில்லனாக பில் குவான்ட்ரில் என்ற மற்றொரு மூர்க்கன் உருவாகிறான். இவர்களை எப்படி கேப்டன் டைகர் சமாளித்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை. ஊரை இம்முறை டைகரால் காப்பாற்ற முடியவில்லை. காரணம் உயிர் தப்பியதே தம்புரான் புண்ணியம் என்ற நிலை. இந்தக் கதையில் டைகருக்கு எந்த ஆக்சனும் இல்லை. பெரும்பாலான நேரங்கள் கைதியாகவே இருக்கிறார். இதனால் கதையில் சுவாரசியம் கெடவில்லை என்பதுதான் முக்கியம். டைகர் லேனை காப்பாற்றினாலும் அவன் தன் நயவஞ்சக புத்தியை கைவிடவில்லை. இறுதியில் டைகரை உயிரோடு எரிக்க பில் குவான்ட்ரில் பிளான் செய்கிறான். அதிலிருந்து டைகர் தப்பினாரா, லேன் அவருக்கு உதவினாரா என்பதுதான் கிளைமேக்ஸ். கதை நடக்கும் இடம் முழுக்க பரபரப்பு உள்ளது. ஆனால் டைகர் எந்த செயல்பாட்டையும் செய்யாமலேயே இதெல்லாம் நடப்பது எ

மர்மம்,பீதி தரும் தலையில்லாப் போராளி - டெக்ஸ் வில்லர்

படம்
டெக்ஸ் வில்லர் கலக்கும் தலையில்லாப் போராளி கதை: போசெல்லி ஓவியம் சிவிடெல்லி டெக்சாஸின் தென்பகுதியில் செவ்விந்தியப் போராளி செய்த குற்றங்களை காரணம் சொல்லி, அவரைக் கொடூரமாக ரேஞ்சர்கள் குழு சுட்டுக்கொல்கிறது. அடுத்து அவரை அவமானப்படுத்த தலையை வாளால் வெட்டி, குதிரையில் வைத்துக்கட்டி முண்ட உடலுடன் திரியும்படி குதிரையை விரட்டி விடுகின்றனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த கொலையில் தொடர்புடைய ரேஞ்சர்கள், அங்குள்ள மனிதர்கள் சிலர் மர்ம மனிதரால் கொலை செய்யப்படுகிறார்கள். யார் அவர்கள் என கண்டுபிடிக்க மருத்துவர் மோரிஸ்கோ நினைக்கிறார். உதவ வருகிறார் டெக்ஸ் வில்லர். அந்த தலையில்லா போராளி யார்? கற்பனையா? உண்மையா என்பதை அவர் டூமில். தடால், கும் சத்தங்களுடன் கண்டுபிடிப்பதுதான் கதை. லயன் காமிக்ஸ் போட்ட புத்தகம் நல்ல பெரிய சைஸ் என்பதால் கதைகளின் ஓவியம் ஓரத்திற்கு போய்விடாமல் ரசித்துப் படிக்க முடிகிறது. இந்த காமிக்ஸில் டெக்ஸ் வில்லரோடு அவரின் மகனும் உண்டு. இம்முறை புத்தகத்திலுள்ள சண்டைக்காட்சிகளை டெக்ஸின் மகன் பார்த்துக்கொள்ள, மிக லாவகமான எளிதான சண்டைக் காட்சிகளை மட்டும் டெக்ஸ் செய்

கேப்டன் டைகர் அசத்தும் தங்க கல்லறை!

படம்
கேப்டன் டைகர் - ஜிம்மி கலக்கும் தங்க கல்லறை லயன் காமிக்ஸ் காமிக்ஸ் நாயகர்களிலேயே துக்கப்பட்டு துயரப்பட்டு அடிவாங்கி போராடி ஜெயிக்கும் நாயகர்களில் டைகரும் ஒருவர். அரிசோனாவிலுள்ள பெலாமிடா நகருக்கு மார்ஷலாக அனுப்பி வைக்கப்படும் டைகர், அங்கு ஜாலியாக ஜிம்மியுடன் ரம்மி, மூணு சீட்டு விளையாடித் தோற்றுக் கொண்டு இருக்கிறார். அப்போது பாரில் நடக்கும் சண்டையில் அறிமுகமாகிறார் லக்னர். தங்கச்சுரங்கம் இருப்பதாக கூறி ஒருவரை ஏமாற்றியதாக புகார். பார்ச்சண்டைக்குப் பிறகு, அவரை லாக்கப்பில் வைக்கிறார் டைகர். ஆனால் நய வஞ்சகனான லக்னருக்கு ஏகப்பட்ட எதிரிகள். இவர் ஜிம்மிக்கு ஆசைகாட்டி டைகருக்கு துரோகம் செய்யவைத்து தங்கச்சுரங்கம் தேடிச் செல்கின்றனர். அங்கு லக்னரைக் கொல்லவே ஒருவர் காத்திருக்கிறார். அப்போதுதான் டைகருக்கு முக்கியமான உண்மை தெரியவருகிறது. அந்த துரோகத்திலிருந்து தப்பி நீதியை நிலைநாட்டுவது எப்படி என்பதுதான் கதை. சாதாரணமாக ஹீரோவுக்கான பில்டப்புகளை பலரும் எதிர்பார்ப்பாளர்கள். ஆனால் டைகர் கதைகளில் அவரின் பர்சனாலிட்டியை வாரிவிடும் வரிகளும் கேரக்டர்களும்தான் அதிகம். இந்த காமிக்ஸிலு