இடுகைகள்

ராஜ்தருண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூறு நாட்கள் சாதாரண மனிதராக வாழ முற்படும் பெரும் பணக்கார வாரிசு!

படம்
     புருஷோத்தமுடு தெலுங்கு ராஜ்தருண், ஹாசினி சுதீர் உன்னால் முடியும் தம்பி என்ற தமிழ்படத்தினுடைய கதையைப் போன்றதுதான். அதை தெலுங்கு கரம் மசாலா சேர்த்து எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல வீணடித்திருக்கிறார்கள். ராஜ்தருண், கார்ப்பரேட் நிறுவனத்துடைய அடுத்த இயக்குநராக வரக்கூடியவர். ஆனால், நிறுவனரின் விதி ஒன்று உள்ளது.அதாவது அடுத்த இயக்குநராக வரக்கூடியவர், நூறு நாட்களுக்கு தன்னுடைய அடையாளங்களை மறைத்து சாதாரண மனிதராக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்து நூறு நாட்களை முடித்தால் மட்டுமே அவர், நிறுவனத்தின் இயக்குநராக முடியும். ராஜ்தருண் இந்த சோதனையை ஏற்றுக்கொள்கிறார். அதில் வென்றாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி. நிறுவனரின் விதியைப் பற்றி பார்ப்போம். நிறுவனம் லாபகரமாக இயங்குவது முக்கியம். அதேசமயம், லாபத்திற்காக ஒருவர் மனதிலுள்ள கருணையை மனிதர்கள் மீதான மனிதநேயத்தை இழந்துவிடக்கூடாது. அதைத்தான் நிறுவனர், தனது வம்சாவளியிடம் எதிர்பார்க்கிறார். அப்படியான மனம் கொண்டவன்தான் நிறுவனத்தை சரியான பாதையில் நடத்த முடியும் என நம்பி அப்படியான வினோத விதியை ஏற்படுத்துகிறார். படத்தில் ராமு பாத்திரத்தில...

காதலிக்காக போராடும் காதலன்! - லவ்வர் -2018

படம்
லவ்வர் - 2018  தெலுங்கு இயக்கம் - அன்னிஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு - சமீர் ரெட்டி இசை - சாய் கார்த்திக், தனிஷ்க் பக்சி, அங்கித் திவாரி, ஆர்கோ, அஜய் வாஸ் மருத்துவத்துறை சார்ந்த திரில்லர் படம். அரசு மருத்துவமனையில் பல்வேறு உறுப்புகளை தானமாக கொடுக்கிறார்கள். அதனை பணக்காரர்களுக்காக ஒதுக்கி லாபம் பார்க்கிறார் மருத்துவமனைத் தலைவர். இதைத் தட்டிக் கேட்கிறார் நர்ஸ் ஒருவர். மேலும், பணக்காரர் ஒருவரின் ரத்தவகையைச் சேர்ந்த சிறுமியைக் கொன்று அவரின் கல்லீரலை அபகரிக்கும் திட்டத்தை நர்ஸ் தடுக்கிறார். இதன்விளைவாக ஏற்படும் பிரச்னைகளே கதை. ராஜ் தருணுக்கு இதில் பெரிய வேலை இல்லை. அனைத்து வேலைகளையும் ரித்தி குமாரே செய்கிறார். ராஜூக்கு சாய் கார்த்திக்கின் பாடல்களுக்கு நடனமாடவும், நர்ஸ் ரித்தியை எப்பாடு பட்டாலும் காதலித்து கேரள - ஆந்திர கலப்பில் குழந்தை ஒன்றை உருவாக்கவுமே மெனக்கெடுகிறார். ஆஹா! பாடல்கள் அனைத்துமே திரும்பத் திரும்ப கேட்கலாம். ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது. ரித்தி குமார் அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயற்சிக்கிறார். இது ஒன்று போதாதா அவரைப் பாராட்ட?  ராஜீவ் கனக்க...