இடுகைகள்

ஆவியாதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்றைக் காக்கும் கருப்பு நிற பந்து! - ஆவியாதலைத் தடுக்கும் சிந்தனை

படம்
  தெரியுமா? கருப்பு நிற பந்து வறட்சியான, சூரிய வெப்பம் அதிகம் கொண்ட பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாக்கும் தேவை உள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நீர்நிலைகளில் நீர் ஆவியாதலைக் குறைக்க கருப்பு நிற பந்துகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ஷேட் பால்ஸ் (shade balls)என்று பெயர்.  இப்பந்துகள் நீர் ஆவியாதலைக் குறைப்பதோடு, பாசிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, சூரிய வெப்பத்தால் நீரில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களும் குறைகிறது. இதனால் நீரை குடிநீராகவும் பயன்படுத்தமுடியும்.  கருப்பு பந்துகளை பயன்படுத்துவதால், நீர் ஆவியாதலின் அளவை 85 முதல் 90 சதவீதம் வரை குறைக்கலாம். அதேசமயம் பிளாஸ்டிக் பந்துகளை நீரில் மிதக்கவிடுவது, காலப்போக்கில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  கருப்புநிற பந்துகள், பாலிமர் பாலிஎத்திலீனால் (polymer polyethylene) என்ற வேதிப்பொருளால் உருவாக்கப்படுகிறது. இவை எத்திலீன் (Ethylene)மூலக்கூறுகளைக் கொண்டவை. இப்பொருட்களைக் கொண்டு பைகள், பாட்டில்கள் உருவாக்கப்படுகின்றன.    தகவல் Super Science Encyclopedia Book pinteres

யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்?

படம்
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி யானையின் உடம்பில் சுருக்கங்கள் ஏன்? ஆப்பிரிக்க யானை ஒன்றை ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது, அதன் உடலில் சிறுசிறு பள்ளங்களாக தோல் அமைந்துள்ளதை வியந்தனர். இத்தன்மை உடலில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. ஏறத்தாழ பிற யானைகளோடு ஒப்பிட்டால் பத்து சதவீதம் நீர் குறைவாக ஆவியாவதால் உடலின் வெப்பநிலை பிரச்னை இன்றி இருக்கும்.  சேறு, மழை என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யானை தன் கெட்டியான தோலின் மூலம் நீரைச்சேமித்து உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.                  ஆசிய யானைகள் சற்று மென்மையான தோலினைக் கொண்டுள்ளதால் அவை ஈரப்பதமான சூழலிலேயே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்(படம்,தகவல்)- சார்லட் கார்னி