இடுகைகள்

சுத்திகரித்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவியியல் - கனிமத்தைக் கண்டறிவது எப்படி?

படம்
  கனிமத்தை அறிதல் சில கனிமங்கள் நீலம், மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கும். இப்படி இருந்தால் இவற்றை எளிதாக கனிமங்கள் என அடையாளம் காணலாம். கனிமங்களுக்கு ஏற்படும் நிறத்தை குறிப்பிட்ட அலைநீளத்தில் உள்ள ஒளியை உள்வாங்கும் காரணம் எனலாம். கனிமங்களின் வடிவமைப்பிற்கு ஏற்றபடி ஒளியை உள்வாங்கும் தன்மை அமையும். இதன்காரணமாக இதன் நிறங்களும் மாறும்.  கிரிஸ்டல் பொதுவாக அனைத்து கனிமங்கள் கிரிஸ்டல் அமைப்பில் இருக்கும். அனைத்து அணுக்களும் குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் முப்பரிமாண தன்மையில் அமைந்திருப்பதை கிரிஸ்டல் அமைப்பு எனலாம். அணுக்களும் அதன் பிணைப்பும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். அணு அல்லது மூலக்கூறுகள்  ஒரே மாதிரியான அமைப்பில் இணைந்திருப்பதை யூனிட் செல் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த யூனிட் செல்களே, கிரிஸ்டல் அமைப்பை தீர்மானிக்கின்றன.  யூனிட் செல்கள் ஒரே மாதிரியான கட்டமைப்பில் இருந்தாலும் கனிமங்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் சேர்க்கைகளைக் கொண்டவை. கிரிஸ்டல் அமைப்பு, அணுக்களின் கட்டமைப்பு, நிலப்பரப்பு சூழல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைகிறது.  தகவல் Nature guide rocks and minerals