இடுகைகள்

பேபால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு

டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

படம்
      டிஜிட்டல் பரிமாற்றத்தில் செய்யவேண்டியவை , செய்யக்கூடாதவை இணையம் , மொபைல் வழி பரிமாற்றம் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தட்டச்சு செய்து இணைய வழி பணப்பரிமாற்றம் செய்வது முக்கியம் . முகவரியில் HTTPS என்று ்இருப்பதை சோதியுங்கள் . எஸ் என்ற எழுத்து பாதுகாப்பை குறிக்கிறது . கூடவே உள்ள பூட்டு அடையாளம் பாதுகாப்பான பரிமாற்றத்திற்கு சான்று . உங்கள் கணக்கிற்கு அளிக்கும் பாஸ்வேர்டு எவரும் கணிக்க முடியாதபடி , #*@$ ஆகிய எண்கள் , சிறப்புக்குறியீடுகளைக் கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும் . பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ஆப்களை ( வங்கி , வங்கியல்லாதவை , வாலட் ) மேம்படுத்திக்கொண்டே இருப்பது அவசியம் . வங்கிக் கணக்கோடு ஒருவரின் ஸ்மார்ட்போன் எண் , மின்னஞ்சல் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டால் , குறுஞ்செய்தி , மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பரிமாற்றத்தை அறியலாம் . நீங்கள் செய்யாத பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்கில் நடந்தால் , அதுபற்றிய புகாரை வங்கிக்கு அளிக்கவேண்டும் . செய்யக்கூடாதவை இணையத்தில் வங்கி இணைய முகவரியை சர்ச் எஞ்சினில் தேடி , பணப் பரிமாற்றம் ச

மீண்டும் மவுசு பெறும் பிட்காயின்! - பல்வேறு நிறுவனங்கள் பணப்பரிவர்த்தனைக்கு ஏற்கின்றன!

படம்
            மீண்டு வரும் பிட்காயின் . பேபால் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பிட்காயின்களை வாங்கவும் பிற கரன்சிகளை கையாளவும் அனுமதி வழங்கியுள்ளது . இந்த நிறுவனத்தைப் போலவே 26 நிறுவனங்கள் பிட்காயின்களை வாங்க விற்க அனுமதியை வழங்கிவிட்டன . பிட்காயின் கணக்கு வழக்கு இல்லாமல் புழங்கவில்லை . தேவைக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது . ஸ்கொயர் என்ற ஸ்டார்ட்அப்பை டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி தொடங்கியுள்ளார் . இந்த நிறுவனம் தங்களது நிதி வர்த்தகத்தில் பாதியை பிட்காயின் பக்கம் திருப்பியுள்ளது . பிட்காயின் மியூசுவல் பண்ட் கூட திட்டம் தயாராக உள்ளது . இதனை ராபின்ஹூ்ட் , ரிவோல்ட் ஆகிய நிறுவனங்கள் செயல்படுத்த உள்ளனர் . பெருந்தொற்று காலம் பிட்காயின் வணிகத்தை ஊக்குவிக்கிறது . உலகளவில் பங்குசந்தைகள் நிலையில்லாமல் சரிந்து வருகின்றன . இதனால் முதலீட்டாளர்கள் பிட்காயினை பாதுகாப்பான் முதலீடாக பார்க்கின்றனர் . அடிக்கடி ஏற்ற இறக்கங்களை பிட்காயின் சந்தித்து மீண்டு வந்துள்ளது . குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவு பிட்காயின் மீது நம்பிக்கை குறைய முக்கியமான காரணமாகும் . சைப