இடுகைகள்

ஹாலிவுட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த திரைப்படங்கள் -2021

  சிறந்த திரைப்படங்கள் என்பவை எல்லாம் டிசம்பர் மாதத்தில்தான் வருமா என்று தெரியவில்லை. இப்போது அப்படித்தான் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அனைத்தும் மேற்குலகு படங்கள். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தை தரவிறக்கி பாருங்கள். படம் தரும் அனுபவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.  தி பவர் ஆப் தி டாக் ஜேன் காம்பியன் எடுத்த படம். காட்டில் ரேஞ்சராக உள்ள அண்ணனுக்கும் அவரது தம்பிக்கும் உள்ள உறவு, அவர் கல்யாணம் செய்து கூட்டிவரும மனைவி, மகன் ஆகியோருக்குமான உறவு சிக்கல்கள்தான் கதை. பெனடிக்கின் வெறுப்பு உமிழும் நடிப்பு ஏற்கெனவே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதை விட முக்கியமானது. விமர்சனங்களை ஓரம்கட்டிவிட்டு படத்தைப் பார்ப்பதுதான்.  பேரல்லல் மதர்ஸ் பெட்ரோ அல்மோடோவர் எடுத்துள்ள மெலோடிராமா. பெனலோப் க்ரூஸ் மத்திய கால வயது பெண்ணாக நடித்துள்ளார். ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அவரது கொள்ளுத்தாத்த கொல்லப்பட்டு உடல் தூக்கியெறியப்படுகிறது. அதற்கான நீதியை எப்படி பெறுகிறார் என்பதுதான் கதை. வலி நிறைந்த நாட்டின் வரலாற்றை இயக்குநர் உணர்ச்சிகரமாக சிறப்பாக எடுத்திருக்கிறார்.  தி வொர்ஸ் பர்சன் இன் தி

எதிர்கால வில்லனை காப்பாற்றும் கூலி கொலைகாரன்! - லூப்பர்

படம்
500 × 500 லூப்பர் 2012 இயக்கம் ரியான் ஜான்சன் ஒளிப்பதிவு ஸ்டீவ் யெடின் இசை நாதன் ஜான்சன் 2044ஆம் ஆண்டு நடக்கும் கதை. நிகழ்காலம், எதிர்காலம் என இரண்டு இடங்களில் பயணிக்கும் கதை. எதிர்காலத்தில் உலகிற்கு ஆபத்து ஏற்படுத்துவார்கள் என தோன்றும் ஏன் சந்தேகப்பட்டாலே அவர்களைப் பிடித்து நிகழ்காலத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அங்கு அவர்களை போட்டுத்தள்ளி அதற்கான சம்பளத்தை எடுத்துக்கொள்பவர்களுக்குப் பெயர் லூப்பர். எதிர்கால எதிரிகளைப் போட்டுத்தள்ளுவதில் தங்கப்பதக்கம் வாங்கும் தகுதி கொண்டவன், ஜோ. அவனுக்கு எதிர்காலத்தில் இருந்து எதிரி ஒருவன் வருகிறான். அவன் வேறு யாருமல்ல, அவனேதான். எதிர்காலத்தில் வாழும் ஜோவின் மனைவியை எதிரிகள் கொன்றுவிடுகின்றனர். அதற்கு காரணமான ஆட்களைத் தேடி கொல்லவே நிகழ்காலத்திற்கு காலத்தில் பயணித்து வருகிறான். அப்போது அவனுக்கு லூப்பர்களை அழிக்கும் ரெயின் மேக்கர் என்பவன் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன் நிகழ்காலத்தில் பிறந்து வளர்ந்து வருகிறான்    அவனை இப்போதே போட்டுத்தள்ளிவிட்டால் அவன் எதிர்காலத்தில் தன் மனைவியைக் கொல்ல வாய்ப்பு கிடைக்காது என பேராசை

தொப்பி போட்ட பூனை செய்யும் சேட்டை! - தி கேட் இன் தி ஹேட்!

படம்
தி கேட் இன் தி ஹேட் 2003 இயக்கம் போ வெல்ச் மூலக்கதை - தியோடர் சியஸ் தி கேட் இன் தி ஹேட் ஒளிப்பதிவு இம்மானுவேல் லூபெஸ்கி இசை டேவிட் நியூமன் ஆன்வில்லே என்ற ஊரில் நடைபெறும் கதை. குழந்தைகளுக்கான படம். ஜோன்ஸ் என்ற கணவர் இல்லாத பெண், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆண், பெண் என இரு பிள்ளைகள்(கான்ராட், சாலி) இருக்கின்றனர். இதில் கான்ராட் என்ற சிறுவன் சேட்டைக்காரன். இவனைக் கட்டுப்படுத்த அவன் தாய் அரும்பாடுபடுகிறார். இவரது தாய்க்கு ஸ்கெட்ச் போட்டு தன் கடன்களை அடைத்துவிட பக்கத்துவீட்டு ஆண் நண்பர் திட்டமிடுகிறார். ஜோன்ஸ் வீட்டில் அன்று ஆபீஸ் சந்திப்பு நடத்துவதாக ஏற்பாடு. அன்று அவர்களின் வீட்டிற்கு வரும் புதிய விருந்தினர் அனைத்து விஷயங்களையும் மாற்றிவிடுகிறார். அந்த சந்திப்பு நடைபெற்றதா, கான்ட்ராக்ட் குறும்புகள் செய்யாமல் இருந்தானா?என்பதுதான் கதை.  ஆஹா படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் ஃபேன்டசி என்பதால் ஜாலியாக ரசிக்கலாம். முடிந்தளவு தமிழில் பார்த்தால் சந்தோஷமாக நிறைய காட்சிகளை ரசிக்க முடியும். பெரிய பூனை வரும் காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக

முதுமையிலிருந்து இளமைக்கு திரும்பினால் - தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின்பட்டன்

படம்
தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் இயக்கம் - டேவிட் ஃபின்ச்சர் திரைக்கதை - எரிக் ரோத் ஒளிப்பதிவு - கிளாடியோ மிராண்டா இசை -  அலெக்சாண்டர் டெஸ்பிளாட் எஃப் ஸ்காட் ஃபிட்ஜெரால்டு எனும் சிறுகதை ஆசிரியரின் கதைப்பெயர்தான் படத்தின் தலைப்பு. பட்டன் எனும் பட்டன் தயாரிப்பாளருக்கு மகன் பிறக்கிறான். ஆனால் சிறுவயதில் எண்பது வயது முதிய தோற்றத்துடன்  அவன் இருக்கிறான். இதனால் விரக்தியுறும் அவனது தந்தை,  அக்குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு சென்று வைத்து விடுகிறான். அங்குள்ள கருப்பினத்தைச் சேர்ந்த பெண், அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். அக்குழந்தையை தூக்கி எறியச்சொல்லி அவள் கணவன் உட்பட வற்புறுத்தியும் அதை மறுத்து வளர்க்கிறாள்.  அவளே அக்குழந்தைக்கு பெஞ்சமின் என பெயர் சூட்டுகிறாள். பெஞ்சமினின் ஆயுள் வரை இந்த இல்லம் கூடவே வருகிறது. ஒன்பது வயதில் எண்பது வயது முதுமை முகத்திலும் உடலிலும் தெரிகிறது பெஞ்சமினுக்கு. அங்கு டெய்சி என்ற பெண்ணைச் சந்திக்கிறான். சிலநாட்கள் சந்திப்பில் இருவருக்குள்ளும் நேசம் பூக்கிறது. பின்னர் அவரவர் வழியில் பயணிக்கிறார்கள். வயது கூட கூட மற