சிறந்த திரைப்படங்கள் -2021

 









சிறந்த திரைப்படங்கள் என்பவை எல்லாம் டிசம்பர் மாதத்தில்தான் வருமா என்று தெரியவில்லை. இப்போது அப்படித்தான் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்த லிஸ்டில் உள்ள படங்கள் அனைத்தும் மேற்குலகு படங்கள். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தை தரவிறக்கி பாருங்கள். படம் தரும் அனுபவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல. 

தி பவர் ஆப் தி டாக்

ஜேன் காம்பியன் எடுத்த படம். காட்டில் ரேஞ்சராக உள்ள அண்ணனுக்கும் அவரது தம்பிக்கும் உள்ள உறவு, அவர் கல்யாணம் செய்து கூட்டிவரும மனைவி, மகன் ஆகியோருக்குமான உறவு சிக்கல்கள்தான் கதை. பெனடிக்கின் வெறுப்பு உமிழும் நடிப்பு ஏற்கெனவே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதை விட முக்கியமானது. விமர்சனங்களை ஓரம்கட்டிவிட்டு படத்தைப் பார்ப்பதுதான். 

பேரல்லல் மதர்ஸ்

பெட்ரோ அல்மோடோவர் எடுத்துள்ள மெலோடிராமா. பெனலோப் க்ரூஸ் மத்திய கால வயது பெண்ணாக நடித்துள்ளார். ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அவரது கொள்ளுத்தாத்த கொல்லப்பட்டு உடல் தூக்கியெறியப்படுகிறது. அதற்கான நீதியை எப்படி பெறுகிறார் என்பதுதான் கதை. வலி நிறைந்த நாட்டின் வரலாற்றை இயக்குநர் உணர்ச்சிகரமாக சிறப்பாக எடுத்திருக்கிறார். 

தி வொர்ஸ் பர்சன் இன் தி வேர்ல்ட்

டேனிஸ் நார்வே இயக்குநர் ஜோச்சிம் டிரையர் எடுத்துள்ள படம்.  நகைச்சுவை படம்தான். சில இடங்களில் கசப்பாக இருக்கும். பெண் தன் காதல் வாழ்க்கையிலும், வேலையிலும் போராடி வெல்கிறாரா இல்லையா என்பதுதான் படம். படத்தில் ஜூலியாக நடித்துள்ள ரெனேட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

சம்மர் ஆப் லவ்

ஹர்லேம் என்ற இசை விழா பற்றிய ஆவணப்படம் . க்வெஸ்ட்லவ் என்ற இசைக்கலைஞர் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. அமெரிக்க டிவியில்  இவரை அடிக்கடி காணலாம், டிரம்ஸ் கலைஞர். இவர்தான் இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளார். ஆப்பிரிக்க அமெரிக்க கலைஞர்களின் கலாசாரம், வரலாறு ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது. 

சோவ்னீர் 2 

2019இல் எடுக்கப்பட்ட இதே தலைப்பிலான படத்தின் இரண்டாவது பாகம் இது. ஜோன்னா ஹாக் படத்தின் இயக்குநர். கலைஞர் ஒருவரின் வாழ்க்கை பற்றி புனைவும், சுயசரிதை தன்மையும் கொண்டதாக எடுக்கப்பட்டுள்ளது. 


டைம் இதழ் 


கருத்துகள்