சூழல் போராட்டங்களின் முன்னோடி ரேச்சல் கார்சன்!

 

 

 

ரேச்சல் கார்சனின் மௌன வசந்தம். - இரசாயன தொழிற்சாலைகளுக்கு ...

 இயற்கை செயல்பாட்டாளர் ரேச்சல் கார்சன்

இன்று காடுகள் வணிகத்திற்காக திட்டமிட்டு விபத்துபோல நெருப்பிட்டு எரிக்கப்படுகின்றன. பாமாயில் உற்பத்திக்காக இயற்கை வளங்களை அழித்து பன்மைத்துவ சூழலை புறக்கணித்து அரசு ஏகபோக சர்வாதிகாரமாக நடந்துகொண்டிருக்கிறது. காடுகளின் பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று கிரேட்டா துன்பெர்க், பியஷ் மனுஷ், முகிலன், நித்தியானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் என போராடி வருகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர் ரேச்சல் கார்சன். அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஸ்பிரிங்டேலில் கார்சன் பிறந்தார். எழுத்தாளர். கடல்சார் உயிரிய ஆராய்ச்சியாளர், இயற்கை செயல்பாட்டாளர் என பல்வேறு வகைகளில் வேலை செய்து வந்தார். 

1962ஆம் ஆண்டு தி சைலண்ட் ஸ்பிரிங் என்ற நூலை எழுதினார். இந்த நூலை நீங்கள் தமிழில் மௌன வசந்தம் என்ற பெயரில் வாசிக்கமுடியும். இயற்கை சூழலை டிடிடீ என்ற வேதிப்பொருள் எப்படி பாதிக்கிறது என்பதை ஆவணப்பூர்வமாக நூலில் சொல்லிருந்தார். இதுவே அமெரிக்காவின் நிலங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அரசு அதிகாரிகளுக்கு புரிய வைத்தது. இதன் பக்க விளைவாக வேதிப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கொலை மிரட்டல்களுக்கு ரேச்சல் கார்சன் உள்ளானார். ஆனாலும் கூட அமெரிக்க அரசு வேதிப்பொருட்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி சட்டமாக்கும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. காரணம், நூலைப் படித்து அதிர்ந்து போன மக்கள் சூழலைக் காக்கவேண்டும் என அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். 

 

ரேச்சல் கார்சனின் மௌன வசந்தம்.. ஒரு அறிமுகம்..! - இரசாயன ...

வேதிப்பொருட்கள் இயற்கைச்சூழலை கெடுக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக பதிவு செய்தவர், ரேச்சல் கார்சன்தான். டிஸ்கவர் இதழ், எப்போதும் வாசிக்க கூடிய சிறந்த அறிவியல் நூல்கள் 25இல் ரேச்சல் கார்சனின் சைலண்ட் ஸ்ப்ரிங் நூலை சேர்த்துள்ளது. பிறரைக் காப்பாற்றுவதற்காக அதிகார வர்க்கத்தோம், செல்வாக்கு மிகுந்த பன்னாட்டு வேதிப்பொருள் நிறுவனங்களோடும் போராடிய ரேச்சல், புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் மரணத்தை தழுவினார். அவர் இறந்து பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு 1980இல் அதிபரின் கௌரவமிக்க சுதந்திர பதக்கம் வழங்கப்பட்டது. 

டெல் மீ வொய் இதழ் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்