சூழல்களுக்கு அஞ்சாத விவசாயி! விழுப்புரம் இயற்கை விவசாயி முருகன்

 




பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள், விழுப்புரம்






விழுப்புரத்தில் உள்ளது அய்யூர் அகரம் கிராமம். இங்கு உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப்படுத்துவது, தூய்மையான புத்துணர்ச்சியான காற்றுதான். ஒருபுறம் சிறுவீடுகள், நேரான குறுகலான தெருக்கள், ஹாரன்களை அடித்தபடி செல்லும் இருசக்கர வாகனங்கள் என்ற காட்சிகளை பார்க்கலாம். இன்னொரு புறம் அழகான பச்சை பசேல் என்ற விவசாய நிலங்களும் கண்களை கவருகின்றன. 

இங்குதான் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி முருகன் கே. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் வயல்கள் நீரில் த த்தளித்து இப்போதுதான் மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறது. 

பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக சரிசெய்வது கடினம். வேதிப்பொருட்களை தவிர்த்துவிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை இனி அனைவரும் செய்யத் தொடங்கவேண்டும். அனைவரும் இப்படி விவசாயம் செய்யத் தொடங்கினால் அடுத்த தலைமுறைக்கு எந்த பிரச்னையும் வராது என்றார் இவர். 

பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, சொர்ணமயூரி, இப்பு சம்பா ஆகியவற்றை நான் நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன் என்றார் முருகன். 

முப்பது ஆண்டுகளாக தனது குடும்பத்திற்கும் விற்பனைக்குமான காய்கறிகளை நெற்பயிர்களை இந்த வகையில்தான் வேதிப்பொருட்கள் இல்லாமல் விளைவிக்கிறார். தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை விளைவித்து வருகிறார். 

தனது குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் காய்கறிகளை விளைவித்து கொடுத்தவர், இப்போது நெற்பயிர் ரகங்களை கூட பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து விளைவிக்க ஊக்குவிக்கிறார். பசுஞ்சாணம், எள்பவுடர், வேம்பு பசை என பல்வேறு இயற்கை உரங்களை பூச்சிக்கொல்லிகளை தானே தயாரித்து வருகிறார். தமிழ்நாட்டிலும் கூட மிகச்சிலர் மட்டுமே பாரம்பரிய ரகங்களை நிலத்தில் பயிரிட்டு வருகின்றனர். 

இலுப்பு சம்பா இரண்டு அடி வளரும், மாப்பிள்ளை சம்பா ஐந்து அடி வளரும் என்பதால் மழைக்காலத்தில் இந்த நெற்பயிர்களை விளைவிக்கலாம். இவை நீரில் மூழ்காது என தகவலையும் சொல்கிறார் முருகன். இயற்கை விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை விக்கிரவாண்டி விவசாய ஆராய்ச்சி மையம் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. வேதிப்பொருட்கள் இல்லாமல் விவசாயம் செய்வதற்கான பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகள் இங்குதான் பெறுகிறார்கள். 

மாநில அரசின் அதிக விளைச்சல் போட்டியில் முருகனும் பங்கேற்றிருக்கிறார். இந்த வகையில் அவர் வெற்றி பெறவேண்டும். இது இயற்கை விவசாயிகளுக்கு ஊக்கம் தரலாம். 







நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

கிருத்திகா ஸ்ரீனிவாசன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்