இடுகைகள்

செவ்விந்தியர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரயில் விபத்து ஏற்படுத்தி நினைவுகளை இழக்கச்செய்தவர்களை பழி வாங்கும் மேஜிக் விண்ட்!

படம்
  ஆத்மாக்கள் அடங்குவதில்லை லயன் முத்துகாமிக்ஸ் மூலம் - செர்ஜியோ போனெல்லி பதிப்பகம் தமிழில் எஸ் விஜயன் # 49வது சென்னை புத்தக காட்சி 2026 இதுதான் மேஜிக் விண்ட் என்ற நாயகனுக்கு முதல் அறிமுக கதை. முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு காமிக்ஸ்கள் இருந்தன. அதில், வேறொன்றை எடுத்தேன். அப்புறம் பார்த்தால் இதுதான் தொடக்க கதை. நாயகன் யாரென்ற புரிந்துகொண்டால்தான் அடுத்த கதைக்கு நகர முடியும். எஸ் விஜயன் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்வார். அதை எப்போதும் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.  இந்த நூலை கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். காலக்கட்டாயத்திற்காக கலர் போல. அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பூச்சு. சியோக்ஸ் இனத்தைச்சேர்ந்த செவ்விந்தியர்களின் மாந்திரீகர் எதையோ தேடி வருகிறார். பார்த்தால், அவர் அங்கு குற்றுயிராக கிடக்கும் நாயகன் எழுவதைப் பார்த்து தூக்கி வந்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு தான் யார் என்றும் தெரியவில்லை. நினைவுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. மாந்திரீகருக்கு அவருடைய காலம் முடிவடையும் தருவாயில் உள்ளார். ஆனால், அவருக்கு அடுத்து அவரது நிலையில் இருக்கக்கூட...

செவ்விந்தியர்களின் பகை தீர்க்கும் கமான்சே கௌபாய்! - லயன் காமிக்ஸ்

படம்
மாதிரிப்படம் யுத்தம் உண்டு எதிரி இல்லை லயன் காமிக்ஸ் ரூ.60  கமான்சே கௌபாய் கலக்கும் காமிக்ஸ் இது. அமெரிக்காவில் செயன்னீக்கள் வாழும் பகுதியில் கமான்சே என்ற இளம்பெண் தன் பண்ணையை வைத்துள்ளார். அதுவரை நஷ்டத்தில் இருந்த பண்ணைக்கு அப்போதுதான் ரயில்வே இருப்புப்பாதை அமைக்கும் பணியால் வேலைகள் கிடைக்கின்றன. அவர்களின் கால்நடைகளை உணவுக்காக அனுப்பும் பணி. மறுபுறம் வெள்ளையர்கள் ராணுவம் மூலம் செவ்விந்தியர்களை தனியாக பிரித்து வசிக்க பகுதிகளை ஒதுக்கியுள்ளனர்.ஆனால் அது வளமில்லாத பகுதி. பசியில் தள்ளாடும் அம்மக்கள், 66 எனும் இளம்பெண்ணின் பண்ணையில் கொள்ளையிட்டு மாடுகளை கொண்டு செல்கின்றனர். இதை எப்படி ரெட் டஸ்ட் வீரதீரத்தாலும் சமயோசிதத்தாலும் சமாளித்து அப்பகுதியில் ரத்த ஆறு ஓடும் பிரச்னையை சமாளிக்கிறார், இதனை செயன்னீ தலைவர் த்ரீ ஸ்டாப்ஸ் ஏற்றுக்கொண்டாரா, அவரது அடங்காத கோபம் கொண்ட மகன்கள் இதை ஏற்றனரா என்பதுதான் திகுதிகு காமிக்ஸாக வந்திருக்கிறது. ரெட் டஸ்ட் சண்டையை விட புத்திசாலித்தனத்தை நம்புவர் என்பதால், பெரியளவு அதிரடி காட்சிகள் கிடையாது. செவ்விந்தியர்களின் பசி சார்ந்த கோபம் என்...