இடுகைகள்

மாரத்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல செய்தி - முன்னர் இளம் குற்றவாளி இப்போது மாரத்தான் வீரர்!

படம்
  ஒருவர் இளம் வயதில் வழிதவறி சிறை சென்றுவிட்டால் இயல்பான வாழ்க்கைக்கு மீள்வது கடினம். வளர்ந்த நாடுகளில் குற்றவாளிகளை மீட்க சமூகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் குற்றவாளிகளை மனம் திருந்தியபிறகு, இயல்பான சமூகத்தில் வாழ அனுமதிப்பது கடினமாகவே உள்ளது. சமூக கண்ணோட்டம், முன்முடிவுகள், போலியான செய்திகள், வதந்திகள்  என நிறைய அம்சங்கள் பின்னணியில் உள்ளன. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போகும் நபர் சிறை சென்றவர். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு விளையாட்டு மூலம் தனது வாழ்க்கையை மடை மாற்றிக்கொண்டார். அதோடு பிறருக்கும் வழிகாட்டி உதவி வருகிறார்.  2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் ஜான் மெக்கவி அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினார். அவரது இலக்கை எட்டிப்பிடிக்க நான்கு கி.மீ. தூரம்தான் இருந்தது. சாமோனிக்ஸ் என்ற இடத்திற்கு செல்லவேண்டும். அதை எட்டிப்பிடிப்பது சவாலானது. ஆனால் முடியாத ஒன்றல்ல. நாற்பது வயதில் தன்னுடைய கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது.  பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜானின் வாழ்க்கை வேறுவிதமாக இரு

வாசிக்கவேண்டிய சாகச நூல்கள்!

படம்
பலரும் கொரோனா பாதிப்பால் தனிமையாக இருக்கும்படி நேரலாம். மேற்குலகில் தனியறையில் என்றால் இந்தியாவில் இங்கு குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும். டிவியில் படங்கள் சுவாரசியமாக இருந்தாலும் நூல்களைப் போன்ற அனுபவங்களை திரைப்படங்கள் தருவது இல்லை. சில சுவாரசியமான திரில் தரும் நூல்களைப் பார்ப்போம். லத்தீன் குடும்பத்தில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர் நோ ஆல்வாரெஸ். இவரது குடும்பத்தில் கல்லூரி படிக்கட்டில் கால் வைத்த முதல் ஆள் இவர். கனடா தொடங்கி குவாத்திமாலா வரை ஓடத்தொடங்கினார். இதன்பிறகுதான் அல்ட்ரா மாரத்தான்கள் பிரபலமாயின. இதுதொடர்பான அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது. அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கு இப்போது போக முடியாது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்குத்தான் அந்த பூங்காக்களின் சிறப்பு என்ன, அங்குள்ள தாவர வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய இந்த நூல் உதவும். மியாமியிலுள்ள வின்வுட் வால்ஸ் என்ற இடம் பிரபலமானது. இந்த இடத்தில் பல்வேறு கலைஞர்கள் சுவர் ஓவியங்களை வரைந்திருப்பார்கள். அதனை படம் எடுக்க இளைஞர்கள் அலைமோதுகின்றனர். இங்கு சுவரோ