இடுகைகள்

சீக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சாப் இசைக்கலைஞர்களுக்கு உலக மேடையை திறந்து வைத்துள்ள நட்சத்திரம் - தில்ஜித் தோசன்ஜி

படம்
  பஞ்சாபி பாடகர், நடிகர் தில்ஜித் தோசன்ஜி பஞ்சாபி இசை, திரைப்படங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நட்சத்திரம் -தில்ஜித் தோசன்ஜி காலிஸ்தான் பிரச்னை, பஞ்சாப் விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பரபரப்பான விவகாரங்களை தாண்டி, தில்ஜித் நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கோச்செல்லாவேலி இசை மற்றும் கலை விழாவில் தில்ஜித், சீக்கியர்களின் மரபான உடைகளை அணிந்து பாடி, நடனம் ஆடினார். இந்த விழா, அவரை உலகளவிலான மேடையில் அறிமுகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தனது அமெரிக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியவருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன. அமெரிக்காவில் நடைபெற்ற இசைவிழாவில் முதல் இந்தியராக பங்கேற்றவர் தில்ஜித் தோசன்ஜிதான்.   இவர், தனது ஏழு வயதில் இருந்து பஞ்சாபி பாடல்களை பாடி ஆடிவருகிறார். இவருக்கான ஊக்கத்தை அக்காவுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பஞ்சாபி பாடல்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். தான் எழுதிய பாடல்களை தில்ஜித் மனப்பாடம் செய்து பாடச்செய்திருக்கிறார். அப்படித்தான் தில்ஜித் ப

சீக்கிய மதத்தைப் பாதுகாக்கும் ராணுவப்படை நிகாங்குகள்!

படம்
  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விவசாயிகள் போராட்டத்தில் 35 வயதான தலித் ஒருவரை நிகாங்க்  ஆட்கள் கோரமாக வெட்டிக்கொன்றனர். எதற்கு இந்தக்கொலை என்றபோது, சீக்கியர்களின் நூல்களை மதிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நிகாங்குகள் உதவி சப் இன்ஸ்பெக்டரின் கையை சீவி எறிந்தனர். பொதுமுடக்க காலத்தில் விதிகளை பின்பற்ற முடியாது என நிகாங்குகள் கூறியதன் காரணமாக நடந்த தாக்குதல் இது.  நீலநிற உடை, அலங்கார தலைப்பாகை, வாள், இன்னும் பிற ஆயுதங்களைக் கொண்ட படையை நிகாங் என்கிறார்கள். 1699ஆம்ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது நிகாங் படை. இவர்களின் பெயருக்கு சமஸ்கிருதத்தில், பயமில்லாத உலகத்தில் லாப நஷ்டம் பற்றி கவலைப்படாதவர்கள் என்று அர்த்தம்.  பாபா புத்தா தல், தமா தல், தர்னா தல் என மூன்று பிரிவாக நிகாங்குகள் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றனர். பஞ்சாப்பில் நிகாங்குகளின் குழு 30க்கும் மேலாக சிறியதும் பெரியதுமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.  நாடோடிகளாக அங்கும் இங்கும் அலைவதால் நிகாங்குகளின் எண்ணிக்கையை முழுவதுமாக கணக்கிடமுடியவில்லை. சீக்கியர்களின் விழாக்களில் தற்காப்புக்கலைகளையும், குத