இடுகைகள்

கோவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களின் பசி தீர்த்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்- மகாலட்சுமி

படம்
  இல்லம் தேடி கல்வி வகுப்பில் பசி தீர்க்கும் ஆசிரியை பிரபஞ்சன் எழுதிய அமரத்துவம் என்ற சிறுகதையில், திருவேங்கடம் என்ற பள்ளி ஆசிரியர் வருவார். திண்ணைப் பள்ளிக்கூடத்தை தொடங்கி மாணவர்களை சேர்க்க பெற்றோர்களின் வீட்டில் பிச்சை எடுப்பது போல நின்று பிள்ளைகளை பள்ளிக்கு வரச்சொல்லுவார். இந்த சம்பவத்தை அவர் எழுதும்போதே மனம் உருகிவிடுவது போல இருக்கும். அதுமட்டுமல்ல, தனது மகளின் உயிரையே விட்டுக்கொடுத்து பள்ளியை வளர்ப்பார். இதுவும் அதே போன்ற இயல்பில் அமைந்த செய்திதான்.  அங்கு ஆசிரியர் திருவேங்கடம் என்றால், இங்கு ஆசிரியர் மகாலட்சுமி. பதினொரு மாத கால பணியில் இவர் மாணவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் விதம் வியப்பானது. பள்ளி வகுப்புகளே மாணவர்களின் ஒட்டுமொத்த மன ஆற்றலை உறிஞ்சிவிடும்போது நான்கு மணிக்கு மேல் குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிப்பது என்பது மிக கடினமானது. இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதை அனைவரும் அறிவோம். இதில் இணைந்த பலரும் தன்னார்வலர்கள்தான். வேலை கடுமை, சம்பளம் குறைவு பற்றி பேசும்போது கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஆசிரியர் செய்யும் பணி ஆச்சரியம் தருகிறது. உப்பிலிபா

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

படம்
  கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர்.  கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன்.  முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியப

நாய்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறியாளர் பெண்மணி!

படம்
  கோவையில் உள்ளது சீரநாய்க்கன்பாளையம். இங்குதான், ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சுவர்கள் முழுவதும் விதவிதமான நாய்கள் நம்மை பல்வேறு வித குணங்களுடன் செய்கைகளுடன் பார்க்கின்றன. ஐ லவ் யூ, யூ வில் ஃபீட் மீ என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தெருநாய்கள், காயமுற்ற நாய்களை பாதுகாக்கும் அமைப்பு இது.  தன்னார்வ தொண்டு அமைப்பாக 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 70 ஆயிரம் நாய்களை பாதுகாத்து பராமரித்துள்ளனர். இந்த செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தவர் மினி வாசுதேவன். இவர் தனது கணவரோடு அமெரிக்காவில் பொறியாளராக வேலை செய்து வந்தவர். பிறகே, பதிமூன்று ஆண்டுகள் கழித்து அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார். இவரது கணவர் பெயர், மது கணேஷ்.  2019இல் மினி வாசுதேவனுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சீரநாய்க்கன்பாளையத்தில் உள்ள காப்பக இடம் போதாமல், கோவை வழுக்குப்பாறை அருகில் 15 ஏக்கர் நிலத்தில் காப்பகம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இங்கு இயற்கை சூழலில் நாய்களை பாதுகாத்து பராமரிக்கிறார்கள். இதில் வேலை செய்யும் சம்பள பணியாளர்களின் எண்ணிக்கை

மாஃபியாவுக்கு எதிரான கோவை மனிதர்!

படம்
  கோவையிலுள்ள சௌரிபாளையத்தைச் சேர்ந்தவர், தியாகராஜன். 50 வயதாகும் இவர், சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து நில ஆக்கிரமிப்பை எதிர்த்து செயல்பட்டு வருகிறார். ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில், வீடு, நிறுவனம் என எது மாநகராட்சியால் அகற்றப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்று சந்தோஷப்படும் ஆன்மா கோவையில் தியாகராஜனாகத்தான் இருக்க முடியும்.  ஆர்டிஐ தகவல்கள் மூலம் அரசு நிலங்களைக் கண்டுபிடித்து அதனை பிறர் ஆக்கிரமிக்காதபடி தடுத்து வருகிறார். அதனை வேலியிட செய்யுமளவு அக்கறை காட்டுகிறார். பெரும் சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி  இந்த வேலையை கடந்த 16 ஆண்டுகளாக செய்துவருகிறார். இதுவரை 26 ஏக்கர்களுக்கு மேலான நிலங்களை மீட்டு அதற்கு சொந்தமானவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதன் சந்தை மதிப்பு 300 கோடிக்கும் அதிகம். வீட்டுநலச்சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களை கூட தியாகராஜன் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்கிறார்.  கோவை மாநகராட்சியில் 50 ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடித்து அதில் 40 இடங்களை மீட்டுக்கொடுத்துள்ளார். இதில் பத்து இடங்களில் சட்டரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.  2004ஆம் ஆண்டு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்

வாட்டர் வாரியர் விருது பெற்ற கோவை மணிகண்டன்! - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

படம்
  கோவையைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வாட்டர் வாரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கான விருதை இன்று, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வழங்குகிறார்.  மணிகண்டன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு தொடங்கி கோவையிலுள்ள பல்வேறு குளம், குட்டை, ஏரிகளை மீட்டு வருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து ஜல்சக்தி அமைச்சக அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன்னர் இவரைத் தொடர்புகொண்டுள்ளனர். குளங்களை புனரமைப்பு செய்த தகவல்களை தொகுத்து அனுப்பக்கூறியுள்ளனர். இப்படித்தான் விருதுக்கு மணிகண்டன் தேர்வானார்.  இவர்களது முதல் வேலை, பேரூர் பெரியகுளத்தில் பணியைத் தொடங்கினர். பிறகு ஏரி என செயல்பாடு வளர தன்னார்வலர்களும் ஆர்வமாகி இணைந்தனர். இப்படி 24 ஏரிகள், 900 குளங்கள், 27 கால்வாய்களை புனரமைப்பு செய்துள்ளனர். 224 வாரங்களில் சீமை கருவேல மரங்கள் போன்ற அந்நிய தாவர இனங்களையும் அகற்றியுள்ளனர்.  புனரமைப்பு பணியோடு பசுமை பரப்பை அதிகரிக்க மியாவகி வகை காடுகளையும் உருவாக்கி வருகின்றனர். இந்த முறையை ஜப்பானைச் சேர்ந்த  அகிரா மியா

கோவையின் குப்பைகளை மாற்றி சுத்தம் செய்யும் செர்கிள் எக்ஸ் ஸ்டார்ட்அப் குழு!

படம்
  கோயம்புத்தூர் தொழில்நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் வாய்ப்புகளை ஈர்க்கும் முக்கியமான நகரம் கூட. இங்கு தினசரி குவியும் கழிவுகளின் எண்ணிக்கை அதிகம். இதனை எப்படி மறுசுழற்சி செய்வது என பலரும் யோசித்து வந்தனர். தற்போது இதற்காகவே செர்கிள் எக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த நிறுவனம், கோவை கார்ப்பரேஷன் மற்றும் ரெசிடென்ஸ் அவர்னெஸ் அசோசியேஷன்  - ராக் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  இவர்கள் குறிப்பிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதனை சுத்தம் செய்து அங்கு சுவரோவியங்களை வரைகிறார்கள். இப்படித்தான் ஆர்எஸ் புரத்தில் உள்ள ஜிஎஸ் லே அவுட்டில் சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை எழுதி அழகிய படங்களை வரைந்திருந்தனர். இதற்கு ஸ்பாட் பியூட்டிஃபிகேஷன் என்று பெயர்.  cercle x team பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாசுபட்ட இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை தன்னார்வலர்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள். பிறகு அவர்களை ஒருங்கிணைத்தால் பாதி வேலை முடிந்துவிடுகிறது. செர்கிள் எக்ஸ் என கழிவு மேலாண்மை நிறுவனம் கழிவுகளை மீண்டும் சுத்தப்படுத்திய இடத்தில் யாரும் போடா

ஆதரவற்றோருக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும் கோவை முருகன்! - நிழல் மையத்தின் அன்னதான சேவை

படம்
  1992ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்றுப்போன சோகத்தில் மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் அந்த மாணவர். அனைத்தும் தோற்றுப்போன சோகத்தில் அப்படியே சாலைகளில் திரிந்தார். கோவையின் சிறுமுகைப் பகுதயில் பிச்சைக்காரர்களோடு  உட்கார்ந்திருந்தார். படிப்பில் தோற்றாகிவிட்டது. இனி என்ன எதிர்காலம் கண்ணில் உள்ளது என்றும் அவருக்கு தெரியவில்லை.  மனதில் துக்கம் இருப்பதால் வயிறு பசிக்காமல் இருக்குமா? வயிறு கபகபவென எரியத் தொடங்கியது. அங்கு வீடில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சோறு கிடைக்காமல் அதற்காக அங்கு வருபவர்களிடம் கை நீட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். அப்போது மாணவரைப் பார்த்த கருப்பன் என்ற பெரியவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். பிறகு அங்கிருந்து சில ஆண்டுகளில் லாரி க்ளீனராக மாறினார். 1998இல் ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினார்.   மனம் வாடி பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து சோற்றுக்கு ஏங்கியபோது அந்த மாணவரின் மனதில் இருந்தது ஒன்றுதான். நாம் நல்ல நிலைக்கு வந்தால் இதுபோல வீடில்லாதவர்களுக்கு, மனநிலை தவறியவர்களுக்கு சோறு போட வேண்டும். நம்மால் முடிந்தவர

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்

மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!

படம்
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர். கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது. தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள். இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது. சிறுதுளி தன்னார்வ தொண்ட

ஊர் சுற்றும் கதைசொல்லி! - 99நொடி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிடும் கோவை சாய் சேது

படம்
      cc     ஊர் சுற்றும் கதைசொல்லி பொதுவாக சிலர் பத்திரிக்கை வேலையை சினிமாவுக்கு செல்லும் ஏணியாக பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் சமூகத்திற்கான செய்திகளை சொல்ல என்று வேலைக்கு வருவார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருபவர்களின் செய்திகள் உண்மையிலேயே அவர்களின் நோக்கங்களை வெளிப்படையாகவே பறைசாற்றுவதாக இருக்கும். அந்தவகையில் கோவையைச்சேர்ந்த சாய் சேது, முக்கியமானவர். இவரும் பத்திரிக்கை வேலையில் குப்பை கொட்டியவர்தான். அது அது மனதிற்கு பிடிக்காததால் வேலையைக் கைவிட்டு இந்தியா முழுக்க அலைந்து திரும்பியுள்ளார். தான் சென்ற இடத்தில் எல்லாம் 99 நொடி வீடியோக்களை எடுத்து அந்த சூழ்நிலையை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் சுற்றித்திரிந்திருக்கிறார். நான் என்னுடன் கேமரா, ட்ரோன் ஆகியவற்றை எடுத்துச்சென்றேன். நான் சென்ற சில கிராமங்களில் தினசரி ஒருமுறைதான் பேருந்து வரும் என்ற சூழலையும் பார்த்திருக்கிறேன் என்கிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு ஊடகத்துறைக்கு வந்துள்ளார். மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர், போதுண்