இடுகைகள்

சட்டவிரோத வேட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சட்டவிரோத வேட்டையைத் தடுக்க உதவும் மின் வாகனங்கள்!

படம்
  விலங்கு வேட்டையைத் தடுக்கும் மின்வாகனங்கள்! மொசாம்பிக் நாட்டின் தேசியப் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. 2021ஆம் ஆண்டுவரையில், இங்கு நடைபெற்ற சட்டவிரோத வேட்டைகளின் எண்ணிக்கை அதிகம்.  வனக்காவலர்கள் குழு, வேட்டைக் குழுக்களைத் தடுக்க இரவில் ரோந்து சென்றாலும் கூட நிலைமை மேம்படவில்லை.  இதற்கு முக்கியக் காரணம், வனக்காவலர்களின் பைக்குகள் தான்.  அவை இயங்கும்போது எழுப்பும் சத்தம் அதிகம்.  இதன் சத்தத்தை வைத்து வனக்காவலர்களின் நடமாட்டத்தை, வேட்டை கும்பல் எளிதாக அடையாளம் கண்டுகொண்டது. உடனே, தேசிய பூங்காவில் உள்ள பல்வேறு சதுப்புநிலங்கள், புதர்ப்பகுதிகள் ஆகியவற்றில் மறைந்து தப்பித்து வந்தனர்.  சாமர்த்தியமாக வன விலங்குக ளை வேட்டையாட, வேட்டை நாய்களையும் பயன்படுத்தினர்.  சத்தமின்றி பாதுகாப்பு ஆனால் இன்று வனக்காவலர்கள், சட்டவிரோத வேட்டையை வெற்றிகரமாக தடுத்து வருகிறார்கள்.  இதற்கு அவர்கள் கையாளும் இ பைக்தான் காரணம். ஸ்வீடனின் வாகன தயாரிப்பு நிறுவனம் கேக் (CAKE), வனக் காவலர்களுக்கு இ பைக்குகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக, அதிக ஒலி எழுப்பாமல் வேட்டைக்காரர்களை பிடிக்க முடிகிறது. வன விலங்