இடுகைகள்

என் வாழ்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லவ் இன்ஃபினிட்டி: என்னை அறிந்தால்...

படம்
லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: டேனியல், வில்லியம்சன் சுய புலம்பல்கள் போதும். நான் எழுதாவிட்டால் தமிழ் இலக்கியம் என்னாகும்? சொல்லுங்கள். இதோ என் படைப்பு இந்த 17 வயதுகளில் பாதியை சோகங்களே சுவைத்துவிட்டன சின்னஞ்சிறு வயதில் பொம்மைகளோடு நான் அதிகம்  பேசியதில்லை.  வெறும் தனிமையின் சுவடுகளோடுதான் என் சுவாசமெல்லாம்.  எந்தையும் தாயும் எனக்கு எல்லாமே கொடுத்தார்கள் ஆனால் கொடுக்க மறந்தது அன்புதான். நான் வாங்க மறந்தேன் அவர்கள் கொடுமைக்காரர்கள் அல்லர்.  எனினும் அன்பால் என்னை  கொடுமைப்படுத்தவேண்டும் என்று  நான் நினைத்தேன்.  திட்டுகள் வாங்கி வாங்கி  பழக்கமான என் காதுகள்! மரத்துப்போன என் மனசு! இறுகிப்போன முகம் எதையோ இடையறாது தேடும் கண்கள் இவ்வாறுதான் இருந்தேன் அகவை பத்து வரை.  பின்னர் புத்தகங்கள் என் புலன்களைத் திறக்கும் சாவியானது.  படிக்கும்போது கவலைகள்  எல்லாம் பஞ்சுபோல சுகமாய் தோன்றியது.  நண்பர்களின் சூழலில் நான் மட்டும் தனியாய்! அப்போதே எல்லாம் எனக்குத் தெரியும் என்ற  கர்வமெனக்கு முள்முனையளவு துளிர்த்துவிட்டது.  குறும்