இடுகைகள்

அழகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் விக்டர் காமெஸி ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள். சானென் 3 ஆகஸ்ட் 1975   கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்   உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில் பயணித்து செல்

அழகு மற்றும் ஆடைகளை விற்கும் மசாபா குப்தாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா! - ஃபார்ச்சூன் 40/40

படம்
  மசாபா லவ் சைல்ட் லிப்ஸ்டிக் வடிவமைப்பாளர் மசாபா குப்தா மசாபா குப்தா நிறுவனர் ஹவுஸ் ஆஃப் மசாபா   ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் மசாபா குப்தா. அவரின் நிறுவனம்தான் ஹவுஸ் ஆஃப் மசாபா. இந்த நிறுவனம், லவ் சைல்ட் என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்கிறது. இந்த பொருட்கள் சல்பேட், பாரபீன் போன்ற வேதிப்பொருட்கள் கலப்பில்லாதவை. வீகன் முறையில் தயாரிக்கப்படுபவை. 75 நாடுகளுக்கு மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஹவுஸ் ஆஃப் மசாபா கடைகளில், லவ் சைல்ட் அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கடைகளில் வாங்க முடியாதவர்கள் இணையத்தில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். லவ் சைல்ட் பிராண்டில் அடுத்ததாக நிறைய பொருட்கள் வெளியாக உள்ளன. மும்பையில் தனது கடையைத் தொடங்கவுள்ள மசாபாவுக்கு ஆதித்ய பிர்லா நிறுவனம் கைகொடுத்துள்ளது. இந்த நிறுவனம், மசாபாவின் ஹவுஸ் ஆஃப் மசாபா நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், மசாபாவின் அழகு சாதனப் பொருட்கள், ஆடைகளை ஆதித்ய பிர்லாவின் கடைகளிலும் பெற முடியும். 2022இல் நெட்பிளிக்ஸில் வெளியா

சர்க்கரையால் குழந்தைகளை அடிமையாக்கி லாபம் பார்க்கும் ஊட்டச்சத்து நிறுவனங்கள்!

படம்
  குழந்தைகளுக்கான உணவுகளை கெலாக்ஸ், குவாக்கர், சஃபோலா ஆகிய   பிராண்டுகள் தயாரித்து வருகின்றன. மேற்சொன்னவை, இந்தியாவில் ஓரளவு விளம்பரம் மூலம் அறியப்பட்டவை. இவையன்றி, உள்நாட்டில் ஏராளமான சிறு நிறுவனங்கள் குழ்ந்தைகளுக்கான உணவைத் தயாரித்து வருகின்றன. மேற்சொன்ன நிறுவனங்களின் உணவுகளில் சர்க்கரை, உப்பு என இரண்டு விஷயங்கள்தான் அதிகமாக உள்ளன. ஆனால், அதை மறைத்து இயற்கையான கோதுமை, நார்ச்சத்து, உண்மையான பழத்துண்டுகள் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். விளம்பரங்களை அழகாக வடிவமைத்து உடனே வாங்கிச் சாப்பிடும் ஆசையை உருவாக்குகிறார்கள். இதெல்லாம் உண்மைதான். நான் மறுக்கவில்லை. குழந்தை சாப்பிடவில்லை. எனவே, ஊட்டச்சத்து பானத்திற்கு நகர்ந்தேன் என தாய்மார்கள் கூறலாம். ஆனால் அப்படி ஊட்டச்சத்து பானத்தை மட்டுமே நம்புவது ஆபத்தானது. உணவுடன் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் துணை உணவு பிரிவில் ஊட்டச்சத்து பானங்களை சேர்க்கலாம். அது உணவுக்கு மாற்று அல்ல. பல்வேறு தானியங்களை ஒன்றாக சேர்த்து அதில் பதப்படுத்தப்பட்ட பழத்துண்டுகளை போட்டு சூடான பால் ஊற்றி சாப்பிட்டால் குழந்தைக்கு அற்புதமான காலை உணவு என ரீல் ஓட்டுவார்கள். பள்ளி செல்ல

உடலை நேர்த்தியாக்கிக்கொள்ள முயலும் இளைஞர்கள்! பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் அதிகரிக்கிறதா?

படம்
  கண் இமை திருத்த சிகிச்சை வஜினா மறுகட்டமைப்பு சிகிச்சை ஹைமெனோ பிளாஸ்டி  காஸ்மெட்டிக் மேக் ஓவர்- உடலை அறுவை சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள அலைபாயும் இளைஞர்கள்.   இன்று ஒருவர் வேலைக்கு சேர வேண்டுமெனில் நிறுவனங்களில் சில அவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும் கேட்கிறார்கள். இந்த வகையில், தங்களின் புகைப்படத்தை பிறர் பார்க்கும்போது கண் புருவம் சரியாக இருக்கவேண்டும். டிஷர்ட் அணிந்தால் மார்பகங்கள் நல்ல பருத்த வடிவத்தில் தெரியவேண்டும். எந்த போஸிலும் மூக்கு அழகாக இருக்கவேண்டும். பேண்ட் அணிந்தால் பெண்குறி புடைப்பாக அதன் வடிவம் வெளியே தெரிவது போல இருக்க கூடாது என பெண்களும், ஆண்கள் தங்கள் வயிற்றை பாளம் பாளமாக வெடித்த வயல்போல கட்டாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல், மனம் பற்றி நிறுவனத்தினர் தவறாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ன இன்று அதிகம் கவலைப்படுகிறவர்கள் உருவாகிவிட்டனர். மூக்கின் வளர்ச்சி பெண்களுக்கு பதினாறு வயதிலும் ஆண்களுக்கு பதினெட்டு வயதிலும் முழுமை பெறுகிறது. இந்த வயதிற்குள் மூக்கின் அமைப்பை மாற்றி அமைத்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். இதைப்பற்றி மருத்துவர்கள் எடுத

ஸ்விட்சர்லாந்தின் அழகான இடம் - ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச்

படம்
  ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச் அமைந்துள்ள இடம் – ஸ்விட்சர்லாந்து யுனெஸ்கோ அங்கீகாரம் 2001 டிப்ஸ் மலையேற்றம் செய்ய நினைத்துள்ளவர்கள், அனென்ஹட் எனும் இடத்திற்கு செல்லலாம். இங்கு நல்ல உணவும், மலைகளை பார்க்கும் கோணமும் சிறப்பாக அமைந்துள்ளது.     ஸ்விட்சர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைப்பகுதி. அரசால் பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பு 823 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய சிகரங்கள் என இரண்டைக் கூறலாம். ஒன்று, ஜங்க்ஃபிராவு மலைச்சிகரம். இதன் உயரம், 4,158 மீட்டர் ஆகும். ஃபின்ஸ்டெரா ஹார்ன் என்ற மலைச்சிகரம் இதை விட உயரமானது இங்கேயே அமைந்துள்ளது. ஆலெட்ஸ் மலைத்தொடர் இருபத்து மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது. பெரும்பாலும் இங்குள்ள மலைத்தொடர்களுக்கு வருபவர்கள் சாதாரண சுற்றுலா பயணிகள் அல்ல. பெரும்பாலும் மலையேற்ற வீரர்கள்தான் வருகிறார்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்த மலைப்பகுதி மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. பசுமையான புல்வெளி, பனி சூழ்ந்த மலைகள், மலையில் உள்ள ஏரிகள் என பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. மலையேற்

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்? இதுபோ

நத்தையின் உணர்கொம்புகள், கோல்ப் பந்துகளிலுள்ள பள்ளங்கள்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  நத்தையின் உணர்கொம்புகளே அதன் மூக்கு! உண்மை. நத்தையின் (Slug)  உணர்கொம்புகளை (Tentacles) மனிதர்களின் மூக்கு போல என்று கூறலாம். நத்தையின் உடலில் இரண்டு ஜோடி உணர்கொம்புகள் உள்ளன. முதல் ஜோடி உணர்கொம்புகள் தலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இவை சூழலில் உள்ள ஒளி, ஒலியை உணர உதவுகின்றன. தலையின் கீழ்ப்பகுதியில் உள்ள  இரண்டாவது ஜோடி உணர்கொம்புகள், வேதிப்பொருட்களை அறியவும், மனிதர்களின் மூக்கைப் போல சுவாசிக்கவும் உதவுகின்றன.  கோல்ஃப் பந்துகளில் உள்ள பள்ளங்கள் அழகுக்கானவை! உண்மையல்ல. கோல்ஃப் பந்துகளில் அதன் வடிவத்தைப் பொறுத்து 300 முதல் 500 வரையிலான  பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. பள்ளங்களின் வடிவமைப்பு, மட்டையால் அடிக்கப்பட்டவுடன் பந்து செல்லும் தொலைவை அதிகரிக்க உதவுகிறது. தொடக்கத்தில் கோல்ஃப் பந்து, பள்ளங்கள் இல்லாமல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்பந்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது செல்லும் தொலைவு குறைந்தது.எனவே, இதற்கான தீர்வாக காற்றில் அதிக உராய்வின்றி பயணிக்க ஏதுவாக பந்தில் பள்ளங்களை உருவாக்கினர்.  https://www.womansday.com/life/entertainment/a37170576/fun-facts/ https://www.thedodo.

சிங்காரச்சென்னைத் திட்டம் 2.0 - சந்தோஷம் கிடைக்குமா?

படம்
                சிங்காரச்சென்னை வேண்டுமா ? சந்தோஷச் சென்னை வேண்டுமா ? சென்னை மாநகரம் தனது 382 ஆம் ஆண்டு பிறந்த தினத்தைத் கொண்டாடுகிறது . இதை இங்கு வாழும் பலரும் நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது . நூற்றாண்டுகளுக்கு முரர் கிழக்கிந்திய கம்பெனி , மெட்ராஸ் எனு்ம் இந்த துண்டு நிலப்பகுதியை வணிகத்திற்காக வாங்கியது . அதில்தான் இன்று கலை , கலாசாரம் , வணிகம் என அனைத்தும் வளர்ந்துள்ளது . நவீன காலத்தில் சென்னையை மேம்படுத்த பலரும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் . பெரும்பாலும் திமுக அரசு என்று உறுதியாக சொல்லலாம் . இந்த கட்சிக்கு சென்னை என்பது தொப்புள்கொடி உறவு என்று கூறலாம் . முன்னர் ராபின்சன் பூங்கா இப்போது அறிஞர் அண்ணா பூங்காவில்தான் சி . என் . அண்ணாதுரை திமுகவைத் தொடங்கினார் . கட்சி பெயரை குடந்தை நீலமேகம் அறிவித்தார் . 1949 ஆம்ஆண்டு செப்டம்பர் 17 அன்று கட்சி தொடங்கப்பட்டது . சென்னையை அழகுபடுத்தும் திட்டமாக சிங்காரச்சென்னை என்பது 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தொடங்கப்பட்டது . இப்போது ஆட்சித்தலைவராக உள்ள ஸ்டாலின் தனது பழைய திட்டத்திற்கு

வணிக நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு உண்டு என்பதை நிரூபித்தவர்! - தி பாடி ஷாப் - அனிதா ரோடிக்

படம்
                சூப்பர் பிஸினஸ்மேன் அனிதா ரோடிக்     அனிதா , தனது வணிக வெற்றியை விட அதனைப் பெற எந்த வழியில் சென்றார் , எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தினார் என்பதற்காக அவரை பலரும் வியந்து போற்றுகின்றனர் . 2007 ஆம் ஆண்டு அனிதா காலமானார் . வணிகம் சார்ந்து சூழலை பாதிக்காமல் வணிகம் செய்வது பேச்சாக இருந்த காலகட்டத்தில் அதனை செயலாக மாற்றியவர் அனிதா . இவர் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில 1942 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார் . இத்தாலியைச் சேர்ந்த அகதிகளாக இவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறியவர்கள் . இவர்கள் இங்கிலாந்தில் கஃபே நடத்திக் கொண்டிருந்தார்கள் . அனிதாவின் அம்மா , அவரது அப்பாவின் தம்பி ஒருவரையே பின்னாளில் திருமணம் செய்துகொண்டார் . ஹென்றி என்ற இவர் , சில ஆண்டுகளிலேயே காலமானார் . கல்வி கற்று இஸ்ரேலில் பணிபுரிந்தார் அனிதா . பிறகு , இவரது அம்மா மூலம் கோடன் ரோடிக் என்பவர் அறிமுகமானார் . அனிதாவுக்கும் ரோடிக்கும் பழக்க வழக்கங்கள் ஒன்றாக இருக்க சில நாட்களிலேயே அவரது வீட்டில் தங்கி ஒன்றாக வாழத் தொடங்கினார் இவர்களது வாழ்க்கை அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் ஒன்றாகவே கழிந

பள்ளிக்காலத் தோழியைத் தேடி அலையும் கஞ்சத்தனமான தொழிலதிபரும், பிடிஎஸ்டி காதலியும்! - மை கேர்ள்

படம்
              மை கேர்ள் சீன டிவி தொடர் எல்எஸ் என்ற அழகுசாதன நிறுவனத்தை நடத்தும் கஞ்சத்தனமான தொழிலதிபருக்கு பிடிஎஸ்டி பிரச்னை கொண்ட காதலி கிடைக்கிறார் . இதனால் அவரது வாழ்க்கை என்னவானது என்பதுதான் கதை . கொரிய , ஜப்பானிய , சீன தொடர்களில் சீரியசாக செல்லும் காட்சிக்ளில் கூட ஜிலீர் காமெடி வந்துவிடுகிறது . இதனால் , தொடரை பெரிதாக வருத்தப்பட்டு பார்த்து கண்ணீர் சிந்தவேண்டியதில்லை . எது நடந்தாலும் லாஸ்டில் சுபமாக முடிச்சுருவாங்கப்பா என நிம்மதியாக பார்க்கலாம் . மை கேர்ள் தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல . ஷென் யி , மென் குயி என்ற இரண்டு பள்ளிப்பருவத் தோழன் , தோழி இருக்கிறார்கள் . இவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள் . அப்போது ஷென் யி வறுமையான நிலையில் இருக்கிறார் . இதனால் பள்ளி பேக் கூட வாங்கமுடியாத நிலை . அவரது அம்மா , தந்தையை விட்டு பிரிந்து வந்து தனியாக வாழ்கிறார் . அவர் நோயாளியும் கூட . ஷென் யிக்கு மதிய உணவு கூட ஒரே மாதிரியாகத்தான் வீட்டில் செய்து தருகிறார்கள் . அவனுக்கு தனது தட்டில் இருந்து உணவை எடுத்து கொடுக்கிறாள் மென் குயி . இப்படித்தொடரும் இவர்கள