இடுகைகள்

சினிமா விமர்சனம், ஆங்கிலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கதேசத்தில் சிறுவனைக் காப்பாற்றச் சென்று சிக்கிக்கொள்ளும் முன்னாள் ராணுவ வீரனின் போராட்டம்! - எக்ஸ்ட்ராக்சன்

படம்
மாஷபில் இந்தியா எக்ஸ்ட்ராக்ஷன் (2020) ஆங்கிலம் இயக்கம்  சாம் ஹர்கிரேவ் ஒளிப்பதிவு தாமஸ் நியூட்டன் சீஜல் இசை ஹென்றி ஜாக்மன், அலெக்ஸ் பிளெட்சர் இந்தியாவில் உள்ள மகாஜன் என்ற போதை மாஃபியா தலைவனின் மகன் ஓவியை வங்கதேசத்தைச் சேர்ந்த ஆசிஃப் என்பவன் கடத்திச்செல்கிறான். தன் மகனை மீட்க முடியாமல் மகாஜன் சிறையில் இருக்கிறான். இந்நிலையில் தன் மகனை பாதுகாக்க சொன்ன சாஜூ என்ற முன்னாள் இந்திய ராணுவ வீரனை, கடுமையாக திட்டுகிறான் மகாஜன். தன் மகனை மீட்டு கொண்டுவரவில்லையெனில் உன்னுடைய மகனை கொன்றுவிடுவேன் என்கிறான். இதற்காக இவர்கள் ஒரு தந்திரம் ஒன்றைச் செய்கிறார்கள். ஓவியை மீட்டுக்கொடுக்க தனியார் அமைப்பு ஒன்றைத் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் ஓவியை  ஆசிஃபிடமிருந்து மீட்டதும் அவர்களைக் கொன்றுவிட்டு சாஜூ ஓவியை கூட்டிவந்து மகாஜனிடம் ஒப்படைப்பது திட்டம். இது பற்றி தனியார் அமைப்பின் நிக் கான், டைலர் ரேக் ஆகியோருக்கு தெரியாது. கிளம்பும்போதே அவர்களுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றுகிறது. ஆனால் டைலர் ரேக்குக்கு தன் மகன் இறந்துபோனதிலிருந்தே வாழ்க்கை விரக்தியாகவே இருக்கிறது. இதனால் அவன் முடிந்தளவு ஆபத்தான திட்டங்களைத் தேர

காதலியை கரம்பிடிக்க போராடும் தனிக்குரல் நகைச்சுவைக் கலைஞனின் கதை! - தி பிக் சிக்

தி பிக் சிக் கதை , திரைக்கதை குமாயில் நினன்சானி , எமிலி வி கார்டன் அமெரிக்க நகைச்சுவை நடிகரான குமாயில் நினன்சானி , பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் . அவர் எப்படி தன் மனைவி எமிலியை திருமணம் செய்தார் என்பதை சொல்லும் படம் இது . தனிக்குரல் கலைஞராக உள்ள குமாயில் , அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் எமிலியைச் சந்திக்கிறார் . பெண்களுக்குத்தான் சிரிக்க வைக்க ஆண்கள் தேவை ஆயிற்றே . சிரித்து பேசுபவர்கள் அன்று நைட்டே ட்யூரக்ஸ் பாக்கெட்டை பிரித்து சமாச்சாரத்தை திருப்தியாக முடிக்கிறார்கள் . குமாயில் தனிக்குரல் கலைஞராக முயன்றுகொண்டே ஊபர் டாக்சி ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார் . அவர் வீட்டில் அவருக்கு பெண் பார்க்கிறார்கள் . ஆனால் அந்தப் பெண் அவருக்கு பிடிக்கிறவள் என்பதை விட முஸ்லீமாகவும் , பாகிஸ்தானைச்சேர்ந்தவராகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள் . குமாயிலை முடிந்தவரை தாடி வைக்க சொல்லுகிறார்கள் . இப்படிப்பட்ட மரபான குடும்பத்தில் பிறந்தவர் , எமிலியை எப்படி கல்யாணம் செய்கிறார் என்பதை நவரசங்களும் கலந்து சொல்லியிருக்கிறார்கள் . ஆஹா தனது மரபான குடும்பம் பற்றித்தான் தனிக்குரல் நகைச்சுவை