இடுகைகள்

இறந்தகாலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார் விபத்தில் இறந்த அம்மாவை காப்பாற்ற கடந்தகாலத்திற்கு செல்லும் மகனின் கதை! ஒக்கே ஒக்க ஜீவிதம்

படம்
  ஒகே ஒக்க ஜீவிதம் தெலுங்கு சர்வானந்த், ரீது வர்மா, வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி இயக்கம் - ஶ்ரீகார்த்திக்   நிகழ்காலத்தை நாம் சந்திக்கும் கஷ்டங்களுக்கு காரணமான இறந்தகாலத்தை நான்கு நாட்களில் மாற்ற முடிந்தால்…. அதுதான் ஒக்கே ஒக்க ஜீவிதம் படத்தின் கதை. படம் அம்மா, மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் டைம் மெஷின் வருகிறது. பார்க்க சரவணபவன் ஹோட்டல் டிபன் கேரியல் போல உள்ளது. நாம் இங்கு பார்க்க வேண்டியது அதை வைத்து காலத்தில் பயணித்து சென்று என்ன செய்கிறார்கள் என்றுதான். நிலவை சுட்டிக்காட்டும்போது எனது விரலைப் பார்க்காதே நிலவைப் பார் என ஓஷோ சொல்லுவார் அல்லவா? 2019ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டிற்கு கால எந்திரத்தில் பயணிக்கிறார்கள் மூன்று நண்பர்கள். அங்கு சென்று இறந்த காலத்தை மாற்ற முயல்கிறார்கள். இதற்கு நிகழ்காலத்தில் உள்ள பிரச்னைகளே காரணம். அவை என்னவென்று பார்க்கலாம். ஆதிக்கு இசைமேல் பைத்தியம். பாடல் பாடலாக வீட்டின் ஸ்டூடியோவில் பாடி கேசட்டாக அடுக்கி வைத்திருக்கலாம். அதெல்லாமே அவரது அம்மா காலத்திலிருந்து பாதுகாத்து வரும் சொத்து. அவரது அம்மாதான் இன்ட்ரோவெர்டான ஆதிக்கு ஒரு

விரட்டும் இறந்தகாலத்தால் தவிக்கும் இளம்பெண்! - கெஹ்ரயான் - சாகுன் பத்ரா

படம்
  கெஹ்ரயான் இந்தி இயக்கம் சாகுன் பத்ரா தீபிகா படுகோன், சித்தானந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே அலிஷா, டியா ஆகியோர் சிறுவயதில் ஒன்றாக வளர்கிறார்கள். ஆனால் அப்போது அவர்கள் குடும்பத்தில் நடக்கும் விரும்பத்தகாத விஷயம் காரணமாக, அலிஷாவின் குடும்பம் நாசிக்கிற்கு இடம்பெயர்கிறது. ஆனால் அங்கு அலிஷாவின் அம்மா தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கான காரணம் என்ன என அலிஷா தனது வாழ்க்கையில் நடக்கும் மோசமான சம்பவம் ஒன்றின் பின்னர் அறிவதே கதை.  அலிஷாவிற்கும் டியாவிற்குமான உறவு என்னவானது என்பதையும் சின்ன திருப்பமாக காட்டி படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.  கடந்தகாலம் ஒருவரை துரத்தி வேட்டையாடினால் அவர் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கும், சற்றும் யோசிக்காமல் அப்போதைய பொழுதைப் பற்றி மட்டுமே யோசித்து சந்தோஷத்தை தேடினால் வாழ்க்கை என்னவாகும் என்பதை சாகுன் பத்ரா கதையாக எழுதி அதை நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து செம்மையாக்கி திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள்.  படத்தில் சிறப்பாக நடித்திருப்பவர் என தீபிகாவையும் சித்தானந்த் சதுர்வேதியையும் கூறலாம். பிற்பகுதியில் நஸ்ரூதின் ஷா நம் கவனத்தை கவர்ந்து விடுகிறார். இத்தனைக