இடுகைகள்

நெடுங்கதை! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நற்பூதம் பராக் பராக்!- பகுதி 1

படம்
                        1 காதல் கனவு! நடிகை மஹிமா என்னுடைய காதலை கண்களில் கேரளா மழைவெள்ளம் போல ஆசையுடன் ஏற்றுக்கொண்ட ஹோம்லி ஐமேக்ஸ் குவாலிட்டி கனவின்போது, டேய் என்ற குரல் 3டி சர்ரவுண்டிங்கில் ஒலித்தது. மஹிமாவோட அப்பாவா லைட்டாய் கண்விழித்தபோது, ரூம்மேட் செந்தில் ப்ளோரசண்ட் டீஷர்ட், பெர்முடாசில் எரிமலையாய் நின்றிருந்தான். நம்பவே முடியவில்லை. காலையில் எழுந்ததும் கஞ்சா கசக்கிக்கொண்டு இருப்பான். இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்கிறான் என யோசித்துக்கொண்டே பேசினேன். “ஹாய் செந்திலு! ஆபீசுக்கு இவ்வளவு சீக்கிரமே ரெடியாகிட்டே சூப்பர்டா” “துரோகி, எனக்கு செட் பண்றன்னு சொல்லி வித்யாவோட பேசி உம்பேர்லயே பட்டா போட்டுட்டயே இது நியாயமா?” யதார்த்தமான கேள்விதான். கிராண்ட் பார்க் கம்பெனியில் சீப் டிசைனர். மாத இறுதியிலும் பர்ஸ் தளும்பும்படி காசு வைத்திருப்பவனை பெண்கள் மொய்ப்பதில் ஆச்சரியம் என்ன? நேற்று ஹாலிடே இன்னில் நடந்த பார்ட்டியில் வித்யா, வைன் ஹேங்ஓவரில் கிறக்கத்துடன் கன்னம் உரசி என் தோளில் சாய்ந்தாள். அதற்கு பிறகு நானே அவளை அகற்றமுடியாதபடி நெஞ்சிலேயே சுருண்ட