தாய்நாட்டிற்கு வாழ்வதற்காக திரும்பும் கோகோ ஆராய்ச்சியாளன் எதிர்கொள்ளும் அனுபவங்கள்!
வேர் தி ரோட் ரன்ஸ் அவுட் ஆங்கிலம் ஈக்வடோரியா கினியா நாட்டைச் சேர்ந்த நாயகன், ஆராய்ச்சியாளராக வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார். அங்கு கிடைக்கும் பணத்தை தனது தாய்நாட்டுக்கு ஆங்கில நண்பர் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கிறார். ஆதரவற்றோர் காப்பகம், ஆராய்ச்சி நிலையம் இரண்டுக்குமான பணத்தை சம்பாதித்து அனுப்புபவர், ஒருநாள் கானாவுக்கு வருகிறார். அங்கு வந்து பார்த்தால் ஆதரவற்றோர் காப்பகம் புதுப்பிக்கப்படாமல் பழையது போலவே இருக்கிறது. ஆராய்ச்சி நிலையமும் உருவாக்கப்படவில்லை. அவரது ஆங்கில நண்பர் பணத்தை சுருட்டிக்கொண்டு மோசடி செய்துவிட்டார் என உணர்ந்துகொள்கிறார். அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பாழடைந்த வீட்டை சீர் செய்து, வசிக்கத் தொடங்குகிறார். நேரம் கிடைக்கும்போது காப்பக பள்ளியில் சென்று கோகோ பற்றிய பாடம் எடுக்கிறார். அப்பள்ளியில் ஆங்கிலேய பெண்ணான கரினாவைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அந்த உறவு மெல்ல காதலாக கனிகிறது. கரினா,ஜார்ஜ் என்ற நாயகி, நாயகன் சந்திக்கும் இடர்ப்பாடுகள், அதிலிருந்து மீளுதலே படத்தின் இறுதிப்பகுதி. ஆப்பிரிக்க கண்டத்தின் வறுமை, பிரச்னைகள், அம்...