இடுகைகள்

விளையாட்டு - மொபைல் -கணினி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விஸ்வரூப விளையாட்டுகளில் கொட்டும் பணம்!

படம்
விஸ்வரூபம் எடுக்கும் விளையாட்டு!  “நாள்பூரா கம்ப்யூட்டரையே பார்த்துக்கிட்டிருக்கியே? அதில் என்னதான் இருக்கோ?” என குடும்பமே எரிச்சலாக பேசிக்கொண்டிருந்தாலும் நியூஜென் இளசுகள் எதையும் கண்டுகொள்ளாமல் வைஃபையில் டீமாக இணைந்து சாகச த்ரில்லுடன் பப்ஜி விளையாடுவதை இனிமேலும் நிறுத்தப்போவதில்லை. கம்ப்யூட்டர்களில் மட்டுமே விளையாடும் வசதி இன்று டேப்லட்டிற்கு நகர்ந்து மெல்ல பட்ஜெட் போன்களிலும் கூட விளையாடலாம் என்றளவிற்கு ஜனரஞ்சகமாகியுள்ளது. இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டான இந்தியாவை கச்சிதமாக மோப்பம் பிடித்த சீன நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா, யூஸூ ஆகியவை இந்தியா மொபைல்விளையாட்டுகளில் முதலீடுகளை கொட்டத்தொடங்கியுள்ள நிலையில்   இந்திய கணினி மற்றும் ஸ்மார்ட்போன் விளையாட்டுத்துறை ராட்சஷ வளர்ச்சி காட்ட முக்கியக்காரணம். தற்போது ரூ.90 கோடி முதலீட்டில் வளர்ந்துவரும் இந்திய விளையாட்டுத்துறை 2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடாக பெறும் என மார்க்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் மாட்டுவண்டியாக இருந்த இணைய வேகம் தற்போது குதிரைப்பாய்ச்சலாக மாறி உலகளவிலான வ