இடுகைகள்

தன்பாலினத்தவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரச்னைகளைத் தீர்க்க எடுத்த முடிவுகளுக்காக வருந்தப்போவதில்லை!

படம்
        நேர்காணல் டேரன் வாக்கர் நீங்கள் ஃபோர்ட் பவுண்டேஷனை விட்டு விரைவில் விலகப்போகிறீர்கள். வரலாற்றில் இந்த நேரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்தில் இக்காலகட்டம் சவாலானது. நம்பிக்கைதான், ஜனநாயகத்திற்கு பிராணவாயு போன்றது. சமத்துவமின்மை, நம்பிக்கைக்கு எதிராக மாறுகிறது. நம்பிக்கையில்லாத மனிதர்கள், இதுவரை சமூகத்தில் இது சாத்தியமா என்று நினைத்துப்பார்க்காத செயல்களை செய்யத் தொடங்கியுள்ளனர். அதுதான் என்னை  கவலையில் ஆழ்த்துகிறது. ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா? நல்ல காற்றை சுவாசிப்பீர்கள், மோசமான உணவை சாப்பிடும் சூழல் நேராது. மனிதர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நகர்வது சற்று வேறுவிதமானது. நான் ஃபோர்டை விட்டு வெளியேறுவதை மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். எனக்கு மிக குறைவாகவே நண்பர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் உண்மையான நண்பர்களோடு சேர்ந்து உணவருந்துவேன். சம்பளத்தில் பாகுபாடு உள்ள சூழ்நிலையில், மக்கள் அதை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹென்றி ஃபோர்ட் போன்றோர் அளிக்கும் பேரளவிலான நிதி என்பது ச...

Time 100 - செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலிலிருந்து மலிவான விலை மருந்து விற்பனையாளர் வரை...

படம்
  டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சீண்டலுக்கு எதிரான போர் - ஜென்னி ஹெர்மோஸா jenni hermosa 2023ஆம்ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றியை விட பரிசு பெறும் மேடையில், நடந்த அவலமான விஷயம் உலகமெங்கும் பிரபலமானது. ஸ்பானிஷ் நாட்டு கால்பந்து கூட்டமைப்பின் தலைவரும், பெண்கள் கால்பந்து அணியின் தலைவருமான லூயிஸ் ரூபியேல்ஸ், கேப்டன் ஜென்னியின் முகத்தை பலவந்தமாக பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். அதை பல நூறு டிவி சேனல்களின் கேமராக்கள் பதிவு செய்தன. அதற்குப் பிறகுதான் லூயிசுக்கு மண்டகப்படி தொடங்கியது. உலகம் முழுக்க பெண் விளையாட்டு வீர ர்கள் மீது பாலியல் சீண்டல்கள், சுரண்டல் நடந்து வருகிறது. நான் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வந்தேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டனான ஜென்னி, தனக்கு நேர்ந்த அச்சம்பவத்தை வெளிப்படையாக கூறி, தனக்கு எதிராக செய்யப்பட்ட தடைகளை உடைத்தார். லூயிசுக்கு எதிராக அவர் உண்மையைப் பேசக்கூடாது என அதிகார மட்டம் பல்வே...