இடுகைகள்

நவீன் பட்நாயக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் அபிமானத்தை சம்பாதித்த ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்! - கடிதங்கள்

படம்
  வெற்றிகரமான முதல்வர் நவீன் பட்நாயக் அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? பிரன்ட்லைன் இதழுக்கு சந்தாகட்டி வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். வங்க எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரியின் நேர்காணலை சிறப்பாக எடுத்து எழுதியியுள்ளனர். ரிக்சா ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஆகிவிட்டார். வாழ வழியில்லாத நிலையில் மாநில அரசின் விருது எதற்கு என துணிச்சலாக சொல்லியிருக்கிறார் மனிதர்.  நவீன் பட்நாயக் பற்றிய கட்டுரையும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. ஒடிஷாவில் மத்திய அரசின் திட்டங்களை கைவிட்டுவிட்டு மாநில அரசின் திட்டங்களை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்து மக்களின் அபிமானத்தை சம்பாதித்துள்ளார் என்பதை கட்டுரையில் ஏராளமான தகவல்களை கொண்டு பேசியிருந்தார்கள். இப்போது ஞாயிறு மட்டும் தி இந்து ஆங்கில நாளிதழை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  நிறைய முக்கியமான விஷயங்களை நடுப்பக்க கட்டுரைகளில் எழுதுகிறார்கள். மொழிபெயர்த்து எழுதுவதை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இக்கட்டுரைகளை வாசிப்பதும், தமிழில் மொழிபெயர்ப்பதும் உதவும் என நம்புகிறேன்.  அண்மையில் வடபழனிக்கு சென்று

முதல்வர் பதவி வகிக்கும் மன்னர் - நவீன் பட்நாயக்கின் வெற்றிக்கதை!

படம்
நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர். அதிகபட்சமாக பெண்களை தேர்தலில் பங்கேற்கச்செய்தவர். ஐந்தாவது முறையாக ஒடிஷாவின் முதல்வராக இருக்கையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். பிஜூ ஜனதா தளத்திற்கு எதிராக பாஜக சில இடங்களை வென்றுவந்தாலும், மன்னர் போல ஐந்து முறை ஒடிஷாவில் சாதித்தவர் என்பதற்காகவே இவரைப் பற்றி பேசுகிறோம். 72 வயதாகும் நவீனுக்குப் பிறகு கட்சி என்னாகும் என்ற கவலையும் பிறருக்கு உண்டு. ஆனால் மக்களுக்கான நலன்களே முக்கியம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நவீன் பட்நாயக். பஞ்சாயத்து தேர்தலில் கூட நின்று வென்றிராதவர், ஒரிய மொழி தெரியாதவர் என ஆச்சரியங்களோடு இருக்கிறார் இம்மாநில முதல்வர். 1960 களில் காங்கிரஸ் அரசு, ஒரிய மொழியை கட்டாய ஆட்சிமொழியாக மாற்றியது. ஆனாலும் நவீன் பட்நாயக் அதனை பெரிதாக தொடரவில்லை. காரணம் பழங்குடிகள் வாழும் தேசத்தில் ஒரியமொழியை கட்டாயமாக்கி என்ன பிரயோஜனம் என்று நினைத்ததுதான். அதனால், தமிழ், மராத்தி மொழிகள் போன்று பெரிய பெருமை ஒரியமொழிக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நவீன் பட்நாயக் போன்ற தன்மையான தலைவர் ஒடிஷாவுக்கு கிடைத்திருக்கிறாரே  என மக்கள் சமாதான

2019 தேர்தலில் பெண் எம்.பிக்கள் சாதித்தது எப்படி?

படம்
ரம்யா ஹரிதாஸ்  32 வயதில் எம்.பியாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக வென்றவர் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதன் வழியாக மக்களை அணுகினார். கேரளாவிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் பழங்குடி இன எம்.பி இவரே. இதற்கு 48 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பல சொதப்பல் பிளான்களை இந்த தேர்தலில் செய்தாலும், செய்த உருப்படியான விஷயம் நிறைய பெண் வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்த முயற்சித்த துதான். வென்ற பெண் வேட்பாளர்களில் ரம்யா ஹரிதாசும் ஒருவர். அம்மா, தையல் கலைஞர், அப்பா தினக்கூலி செய்துவருகிறவர். 2011 ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டவர், தற்போது எம்.பியாகி உள்ளார். இதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டிருக்கிறார். தேர்தல் செலவுகளுக்கு க்ரௌடு ஃபண்டிங் மூலம் பத்து லட்சம் நிதிதிரட்டி செலவு செய்த தைரியம் பாராட்டத்தக்கது. அம்மா மகிளா காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றாலும் திறமை மூலமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார் ரம்யா. கேரளாவின் ஒரே பெண் எம்.பி இவர்தான். மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்காக பாடுபடுவேன் என்று கூ

மக்களுக்காக பணியாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை

படம்
நேர்காணல் நவீன் பட்நாயக், ஒடிஷா முதல்வர், ஒடிஷா.  இருபது ஆண்டுகளாக ஓடிஷாவை ஆண்டுவருகிறார் நவீன் பட்நாயக். பிற தலைவர்களைப் போல ஆக்ரோஷமான பேச்சு, சூறாவளிப் பிரசாரம் ஆகியவற்றை இவரிடம் பார்க்க முடியாது. தேர்தலில் எப்படி வெல்கிறார்? மக்கள் இவரை நம்புகிறார்கள். அவ்வளவுதான். இம்முறை தேர்தலில் வென்றால் ஐந்தாம் முறை முதல்வராகும் வாய்ப்புள்ளது. பிஜூ ஜனதா தளம் மக்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. வளர்ச்சி, மேம்பாடு, நலம் ஆகியவற்றை மட்டுமே நாங்கள் முன் வைக்கிறோம். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? பிஜூ பாபுவை மக்கள் விரும்பினார்கள். காரணம், மாநிலத்தில் அரசு சரியாக செயல்பட்டதுதான். ஒடிய மொழியில் சரளமாக பேசுபவரல்ல நீங்கள். மேலும் அமைதியாக வேலைசெய்பவரும் கூட. எப்படி மக்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள். நான் மக்களைப் புரிந்துகொள்கிறேன். மக்கள் என்னைப் புரிந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். இம்முறை தேர்தலில் மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் என்ன? சமூகத்திலுள்ள அனைத்து பிரிவினருக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், விவசாயிகளுக்கு காலியா என்ற திட்டத்தையும், கர