இடுகைகள்

கட்டற்ற அறிவு - தொடர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்னுடைய லினக்ஸ் எது? கட்டற்ற அறிவு!

படம்
கட்டற்ற அறிவு -– வின்சென்ட் காபோ லினக்ஸ் வகைகளும் இயக்கமும் Suse Linux ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனத்தின் லினக்ஸ் தயாரிப்பு. சேவை, மென்பொருள் என அனைத்தும் நேர்த்தி.   Slackware/archi linux பெரும்பாலும் சர்வருக்கு பயன்படுத்தும் லினக்ஸ் ஓஎஸ் இது. நாவெல், விஎம்வேர் என கைமாறி தரம் குறையாமல் வெளியாகும் லினக்ஸ் இது. ரெட்ஹேட் இன்ஸ்டாலரை நம்பியுள்ளது மைனஸ். Debian உபுண்டு/ லினக்ஸ் மின்ட் போன்ற லினக்ஸ் போன்ற எளிய லினக்ஸ்தான் இதுவும். லினக்ஸ் வெளியீடு அப்டேட் என்பதை எண்களை வைத்து தீர்மானிக்கும் தவறை பலரும் செய்கிறார்கள். ஸ்லேக்வேரின் எடிஷன் 10 என்பதும் டெபியனின் 4.1 என்பதும் தரத்திலும் அப்டேட்டிலும் இணையானது. லினக்ஸை நிறுவுவதில் டெபியன்(.DEB), ஆர்பிஎம்(.RPM) எனும் பேக்கேஜ்முறைகள் உண்டு. பைனரி பேக்கேஜ், சோர்ஸ் பேக்கேஜ் என இருமுறைகளில் இன்ஸ்டால் செய்வது வழக்கம். பெரும்பாலும் பயனர்கள் பயன்படுத்துவது சோர்ஸ் பேக்கேஜ் முறையையே. இன்ஸ்டால் செய்வதற்கான மென்பொருட்களை Freecode.com இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். லினக்ஸ் இன்டெல் G3,G5, ஏஎம்டி

லினக்ஸில் எது பெஸ்ட்? - கட்டற்ற அறிவு (அத்.10)

கட்டற்ற அறிவு! – - வின்சென்ட் காபோ லினக்ஸில் எது பெஸ்ட்? இன்டெல் புதிய சிப்களின் செயல்பாட்டிற்கான சோதனையை லினக்ஸில் நேரடியாக சோதித்து மேம்படுத்த உதவுவது லினக்ஸின் தன்னிகரற்ற சாதனை. லினக்ஸை இன்ஸ்டால் செய்யும்போது அதில் கெர்னல், ஜிஎன்யு மென்பொருட்கள், பொதுவான வேர்ட்பேட் போன்றவை, நிறுவனத்தின் ஆதரவு, அப்டேட் உள்ளதா என கவனிப்பது அவசியம். விண்டோஸ் மற்றும ்மேக் சிஸ்டங்களில் தனியாக மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யும் அவதி உண்டு. லினக்ஸில் அனைத்தும் காம்போதான். இன்ஸ்டால் செய்யும்போதே தேவையான மென்பொருட்கள் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடும். ஐபிஎம் அண்மையில் ரெட்ஹேட் நிறுவனத்தை 34 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. ஐபிஎம் தொடங்கியதிலிருந்தே லினக்ஸை ஆதரித்து வந்த கணினி நிறுவனம். மேலும் மைக்ரோசாஃப்ட் தன்னுடைய அஸூர் எனும் மேக கணிய கட்டமைப்புக்கு லினக்ஸையே பயன்படுத்தியுள்ளது நம்பிக்கை தருகிற முயற்சி. ரெட்ஹேட் நிறுவனத்திற்கு இந்தியாவில் ரூ.444 கோடி(2017) வருமானம் கிடைக்கிறது. இந்தியாவிலுள்ள பிஎஸ்இ, என்எஸ்இ, வருமானவரித்துறை, ஓய்வூதியத்துறை, இந்தியரயில்வே ஆகிய அரசு துறைகள் ரெட்ஹேட் லின

பொதுசொத்து - கட்டற்ற அறிவு (அத்.9)

படம்
கட்டற்ற அறிவு! – வின்சென்ட் காபோ கட்டற்ற மென்பொருள்: பொது சொத்து! 16 பிட் திறனில் இது முழுக்க கட்டளைகளை எழுதியே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் கறார் கொண்டது. இதற்கடுத்து வெளியான விண்டோஸ் என்டி(1993),95(1995), ஆகியவை மக்களின் விருப்பத்திற்குரியவையாக மாறியது உலகறியும். நாம் அறியவேண்டியது அப்போது யூனிக்ஸ் 32 பிட், 62 பிட் திறனில் பல்வேறு பயனர்கள் இணைந்து பணிபுரியும்படியே இருந்தது என்பதைத்தான். நான் யார்? 1991 ஆம் ஆண்டு. ஃபின்லாந்தின் ஹெலின்ஸ்கி பல்கலையில் கணினி புரோகிராம் படித்துக்கொண்டிருந்த லினஸ் டோர்வால்சுக்கு தன் கணினியின் எம்எஸ்-டாஸ் போரடிக்க தானே புரோகிராம் எழுதி கெர்னல் ஒன்றை உருவாக்கினார். காசு பார்க்க நினைக்காமல் ஹாபியாக உருவாக்கியவர், அதனை எப்படியிருக்கிறது என்று பார்க்க தன் தோஸ்துகள், உறவுகள், உறவுகளின் தொடர்புகள் என உலகினருக்கு விலையில்லா பதிப்பாக்கினார். அது முழுமையான பதிப்பல்ல; ஏனெனில் இதில் இயங்கும்படி எந்த மென்பொருட்களையும் டோர்வால்ஸ் குறிப்பிடவில்லை. அப்போது இந்த அமைப்பிற்கான மென்பொருட்கள் உதவிக்கு நம் கட்டற்ற மென்பொருள்

மைக்ரோசாஃப்ட் உதயம்! - கட்டற்ற அறிவு (அத்.8)

படம்
கட்டற்ற அறிவு – வின்சென்ட் காபோ 8 மைக்ரோசாஃப்ட் உதயம்! ஆனால் இது முழுமையாக ஜிஎன்யுவை குறிக்காது என்றாலும் இது ஓரளவுக்கு கட்டற்ற மென்பொருள் கருத்தை மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வருகிறது. சுதந்திரமா, இலவசமாக என்று வந்தபோது லினக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தார்கள். மென்பொருட்களை காசுகொடுத்து வாங்குவதை விட அது பயனருக்கு அளிக்கும் சுதந்திரத்தை ஸ்டால்மன் முக்கியமாக கருதினார். லினக்ஸின் தொடக்கம் தற்போது பயன்படும் லினக்ஸின் தொடக்கம் 1969 ஆம் ஆண்டு ஏடி&டி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட யூனிக்ஸ் ஓஎஸ் மூலம் தொடங்குகிறது. கட்டணத்திற்கு வெளியிடப்பட்ட இந்த ஓஎஸ்ஸில் பல வெரைட்டிகள் அன்று வெளியாயின. இன்றும் பல்வேறு டெக் நிறுவனங்களில் யூனிக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டில் உள்ளது. இதில் பிரபலமானவை, சன்மைக்ரோ சிஸ்டம்(தற்போது ஆரக்கிள்) சோலாரிஸ், ஹெச்பி(யூஎக்ஸ்), பெர்க்கிலி ப்ரீபிஎஸ்டி ஆகியவை. 1984 ஆம் ஆண்டு ஹியூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் வெளியான யூனிக்ஸ் பதிப்பு. இன்றுவரையும் பயன்பாட்டிலுள்ளது. 1993 ஆம் ஆண்டு வெளியான சோலாரிஸ் யூனிக்ஸ் வ

காப்புரிமை: மனித உரிமை மீறல்! (அத்.7)

படம்
கட்டற்ற அறிவு – - வின்சென்ட் காபோ 7 காப்புரிமை - மனித உரிமை மீறல் காப்புரிமை கொண்ட தனிநபர் பயன்படுத்தும் மென்பொருள்கள், காசு கொடுக்கும் நபரே விரும்பினாலும் ஆதார புரோகிராம்களை பார்க்கவோ, அதனை மாற்றி மேம்படுத்த முடியாது. அதன் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வழங்கும் வரையில் காத்திருந்தேயாக வேண்டும். ரெட்ஹேட் லினக்ஸ், தனியார் நிறுவனங்களுக்கு ஓஎஸ்ஸை இன்ஸ்டால் செய்து அதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெறுகின்றன. இதில் சர்வீஸ் தொகைக்கான ஒப்பந்த தொகை தனி.  லினக்ஸ் பொறியாளர் இதனை மேற்கொள்ளும்போதும் கட்டண நடைமுறை இதேதான். காப்புரிமை மென்பொருட்களில் பிரச்னை என்றால் உடனே சர்வீஸ் சென்டர்களில் சரி செய்துகொள்ளலாம். கட்டற்ற மென்பொருளான லினக்ஸில் கம்யூன் முறையில் பிரச்னைகளை பேசி நாமே சரிசெய்து கொள்ளலாம் என்றாலும் இது கணினி இயங்குவதை தாமதப்படுத்துகிறது. சமூகத்திற்கு நன்மை தரும் மென்பொருட்களை கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்குவது உலகிலுள்ள பலருக்கும் உதவும்.  என்னுடைய அறிவைப்பயன்படுத்தி உருவாக்கியதை எதற்கு இலவசமாக தரவேண்டும்? என கேள்வி எழலாம். பத்து மென்பொர

சுதந்திர உரிமை - கட்டற்ற மென்பொருளுக்கு உண்டு!

படம்
கட்டற்ற அறிவு!- – வின்சென்ட் காபோ 6 சுதந்திர உரிமை! கணினி புரோகிராம்களை பயன்படுத்துபவர்கள் தம் தேவைக்கேற்ப அதனை திருத்தி வெளியிடும் சுதந்திர உரிமத்துடன் மென்பொருட்களை ஸ்டால்மன் வெளியிட்டார். இதனை பிறருக்கு நீங்கள் பிரதி எடுத்து இலவசமாக அல்லது கட்டணத்திற்கோ வழங்கலாம். இதற்கு காப்பிலெஃப்ட் என்று பெயர்.   இவை ஜிஎன்யு திட்டத்தின் கீழ் சட்டரீதியில் காப்புரிமையுடன் வழங்கப்பட்டாலும், புரோகிராம்களை மாற்றிப் பயன்படுத்தும் சுதந்திரம் பயனர்களுக்கு உண்டு. அந்த வித்தியாசத்தை குறிக்கவே காப்பிரைட் என்ற சொல் காப்பிலெஃப்ட் என்று மாற்றி வழங்கப்படுகிறது. உலகில் கணினி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தனக்கென தனி மென்பொருள் வாங்க வைப்பதே பன்னாட்டு கணினி நிறுவனங்களில் லாபவெறி லட்சியம். அப்டேட் விளம்பரங்கள், ஓஎஸ்ஸிற்கான பாதுகாப்பு கோப்புகள் வெளியீடு நிறுத்தம் என்பதெல்லாம் இதையொட்டி வருவதுதான்.   மென்பொருள் உரிமை! சேட்டன்பகத் நாவல்களின் சராசரி விலை ரூ.176. ஆனால் அவரின் புத்தகத்தை கிராஸ்வேர்டு, ஹிக்கின்பாதம்ஸ் கடைகளில் வாங்கினால்தான் இந்த ரேட். தி.நகரிலுள்ள பிளாட்

கட்டற்ற அறிவு 5: காப்பிரைட் கொள்ளை

படம்
கட்டற்ற அறிவு –- வின்சென்ட் காபோ 5 காப்பிரைட் கொள்ளை! லினக்ஸில் கட்டற்ற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து வருவது, அதில் வரும் பிரச்னைகளை தீர்ப்பது ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது அந்த மென்பொருள் குழுக்களுக்கு முக்கியமான வருவாய் வழி. இலவச மென்பொருள் என்ற வார்த்தை அதனை உணர்த்தவில்லை. எனவே கட்டற்ற பொருத்தமான வார்த்தையாக மாறியது.     சுதந்திரம் முக்கியம்! 1984 ஆம் ஆண்டு ஸ்டால்மன் எம்ஐடியிலிருந்து விலகுவதற்கான காரணம்? “நான் அங்கிருந்து ப்ரீ மென்பொருட்களை கண்டுபிடித்தாலும் அதனை அந்நிறுவனம் தன்னுடையது என கட்டுப்படுத்த முயற்சிக்கும் என்பதால் பதவி விலகினேன்” என தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டால்மன். கட்டற்ற மென்பொருள் வழங்குவதில் முக்கியமான சொல் காப்புரிமை. பொதுவாக காப்புரிமை ஒருவரின் தயாரிப்பை, கண்டுபிடிப்பை அனுமதியின்றி/கட்டணமின்றி பிறர் பயன்படுத்துவதை தடை செய்கிறது. இச்சட்டத்தின் முக்கிய பயன், வணிகம். காப்பிரைட் களவு! மருந்துவத்துறையில் அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் மருந்து நிறுவனங்கள் அதனை குறிப்பிட்ட காலம் வரை மட்ட

கட்டற்றஅறிவு 4: கட்டற்ற திறமூல என்ன வேறுபாடு?

கட்டற்ற அறிவு! – வின்சென்ட் காபோ 4 1980 ஆம் ஆண்டு XGP வகையிலான லேசர் பிரிண்டரை ஆதார நிரல்களை மாற்றி பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். பிரிண்டிங் நிறைவடைந்தால் அல்லது பேப்பர் ஜாம் ஆனால் உடனே சம்பந்தப்பட்டவரின் கணினிக்கு செய்தி வரும்படி செட்டிங் அமைத்து அசத்தினார். ஆனால் புதிதாக மாற்றிய XEROX 9700 ஆதார நிரல்களை இப்படி மாற்ற முடியாத   சிக்கல் அவர்களை கட்டற்ற மென்பொருள் செயல்பாடுகளை தூண்டியது.  1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்ஐடி வேலையை விட்டு விலகி ஜிஎன்யு திட்டத்தில் மூழ்கினார் ஸ்டால்மன். 1983 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜிஎன்யு திட்டத்தை அறிவித்தவர், 1985 ஆம் ஆண்டு இதற்கான அறிக்கையை தயாரித்து வெளியிட்டார். “புரோகிராம்களை நம் விருப்பபடி மாற்றி இயங்க செய்வதை உலகம் கொள்ளையர் என்ற அர்த்தத்தில் புரிந்துகொண்டது. ஆனால் புரோகிராம்களின் செயல்பாட்டு எல்லையை தகர்ப்பது என நான் நம்பினேன்” என்கிறார் ஸ்டால்மன்(Free Software Free Society). இந்த நேரத்தில் நாம் அறிவுசார் சொத்துரிமையை பற்றி பேசுவது சரியாக இருக்கும். பொருட்களுக்கு புவிசார் குறியீடு போலிகளை தவிர்க்கிறது அல்லவா? காப்பிரை

கட்டற்ற அறிவு 3: ரிச்சர்ட் ஸ்டால்மன் - ரைசிங் பிகின்ஸ்

படம்
கட்டற்ற அறிவு 3!  –- வின்சென்ட் காபோ கட்டற்ற மென்பொருளை வடிவமைத்து அதனை பிரசாரம் செய்துவரும் ஸ்டால்மனின் சிறுவயது வாழ்க்கையை அறிவது அவரது பிற்கால லட்சியத்தை அறிய உதவும். கலக்கல் கணிதன்! தந்தை டேனியல் அச்சக பணியாளர், தாய் அலைஸ் லிப்மன் ஆசிரியர். டேனியலின் குடிநோயும், வசைகளும் அலைஸ் லிப்மனை வதைக்க, ஸ்டால்மனின் சிறுவயது வாழ்வு கண்ணீரும் வேதனையுமே நிறைந்திருந்தது. வேதனைகளை மருந்து கணித ஈடுபாடும், அதன் விளைவாக வசீகரித்த கணினி புரோகிராம்களும்தான். அதேசமயம் அமெரிக்க உள்நாட்டுப்போர் காட்சிகளை தன் பத்து வயதில் நேரடியாக பார்த்தவர் இவர்.   மிரட்டும் திறனாளன்! பள்ளியின் கோடைக்கால விடுமுறையில் புரோகிராம்களை எழுத கற்றார். “அன்றைய வசதியில் புரோகிராம்களை நோட்டில் எழுதிப்பார்த்துக் கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதை அன்று நினைத்தே பார்க்க முடியாது” என்கிறார் ஸ்டால்மன். அன்றே ஐபிஎம்மின் 7094 கணினியின் பயனர் கையேட்டை படித்து பயன்படுத்த முயற்சித்த ஐக்யூ மனிதர் ஸ்டால்மன். உயிரியல், இயற்பியல் என காக்டெய்ல் ஆர்வம் காட்டியவர், PDP-11 எனும் சிறிய கணினியில் புர

கட்டற்ற அறிவு 2: ஜிஎன்யு லினக்ஸில் என்ன பயன்கள்?

படம்
2 கட்டற்ற அறிவுக்கான லோகோவை வடிவமைக்க நண்பரை அணுகியபோது, கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கினேன். உடனே அவர் கேட்டது, சர்வருக்கு பயன்படுத்துவார்களே அதுதானே! பொதுவாக சர்வருக்கு லினக்ஸ் ஓஎஸ்களை பயன்படுத்துகிறார்கள் என்றாலும் லினக்ஸ்மின்ட், ஃபெடோரா லினக்ஸ் போன்ற ஓஎஸ்களை தனிப்பட்ட உபயோகத்திற்கும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் சிக்கல், நீங்கள் பயன்படுத்தும் கோப்புகளை விண்டோசில் பயன்படுத்த அதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும் அவ்வளவுதான். விண்டோஸ் அல்லது மேக் உள்ளிட்ட ஓஎஸ்களிலில்லாத தனிச்சிறப்பு ஜிஎன்யு லினக்ஸில் என்ன இருக்கிறது? கட்டுப்பாடு: லினக்ஸிலுள்ள புரோகிராம்களை நீங்கள் டெக் வல்லுநராக இருந்தால் மாற்றியமைத்து பயன்படுத்தலாம். இல்லையென்றாலும் காப்பிரைட் மென்பொருள் போல அப்டேட்ஸ் கேட்டு செய்யும் பணியைக் கெடுக்காது. செயல்பாடுகளில நிறுவனத்தில் வரைமுறையற்ற கட்டுப்பாடு இருக்காது. பயிற்சி: ஆதார புரோகிராம்களை எழுதி பழகும் மாணவர்கள், அதிலுள்ள தவறுகளை எளிதில் திருத்தி எழுதிப்பழக வாய்ப்பு கிடைக்கிறது. கற்கும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு லினக்ஸ் கடல்போன்றது. பாதுகாப்

கட்டற்ற அறிவு - கட்டற்ற மென்பொருளின் பிரயோஜனம்!

படம்
2 கட்டற்ற அறிவுக்கான லோகோவை வடிவமைக்க நண்பரை அணுகியபோது, கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கினேன். உடனே அவர் கேட்டது, சர்வருக்கு பயன்படுத்துவார்களே அதுதானே! பொதுவாக சர்வருக்கு லினக்ஸ் ஓஎஸ்களை பயன்படுத்துகிறார்கள் என்றாலும் லினக்ஸ்மின்ட், ஃபெடோரா லினக்ஸ் போன்ற ஓஎஸ்களை தனிப்பட்ட உபயோகத்திற்கும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் சிக்கல், நீங்கள் பயன்படுத்தும் கோப்புகளை விண்டோசில் பயன்படுத்த அதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும் அவ்வளவுதான். விண்டோஸ் அல்லது மேக் உள்ளிட்ட ஓஎஸ்களிலில்லாத தனிச்சிறப்பு ஜிஎன்யு லினக்ஸில் என்ன இருக்கிறது? கட்டுப்பாடு: லினக்ஸிலுள்ள புரோகிராம்களை நீங்கள் டெக் வல்லுநராக இருந்தால் மாற்றியமைத்து பயன்படுத்தலாம். இல்லையென்றாலும் காப்பிரைட் மென்பொருள் போல அப்டேட்ஸ் கேட்டு செய்யும் பணியைக் கெடுக்காது. செயல்பாடுகளில நிறுவனத்தில் வரைமுறையற்ற கட்டுப்பாடு இருக்காது. பயிற்சி: ஆதார புரோகிராம்களை எழுதி பழகும் மாணவர்கள், அதிலுள்ள தவறுகளை எளிதில் திருத்தி எழுதிப்பழக வாய்ப்பு கிடைக்கிறது. கற்கும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு லினக்ஸ் கடல்போன்றது. பா