கட்டற்ற அறிவு 3: ரிச்சர்ட் ஸ்டால்மன் - ரைசிங் பிகின்ஸ்


கட்டற்ற அறிவு 3! 

–- வின்சென்ட் காபோ





Image result for gnu linux

கட்டற்ற மென்பொருளை வடிவமைத்து அதனை பிரசாரம் செய்துவரும் ஸ்டால்மனின் சிறுவயது வாழ்க்கையை அறிவது அவரது பிற்கால லட்சியத்தை அறிய உதவும்.

கலக்கல் கணிதன்!

தந்தை டேனியல் அச்சக பணியாளர், தாய் அலைஸ் லிப்மன் ஆசிரியர். டேனியலின் குடிநோயும், வசைகளும் அலைஸ் லிப்மனை வதைக்க, ஸ்டால்மனின் சிறுவயது வாழ்வு கண்ணீரும் வேதனையுமே நிறைந்திருந்தது. வேதனைகளை மருந்து கணித ஈடுபாடும், அதன் விளைவாக வசீகரித்த கணினி புரோகிராம்களும்தான். அதேசமயம் அமெரிக்க உள்நாட்டுப்போர் காட்சிகளை தன் பத்து வயதில் நேரடியாக பார்த்தவர் இவர். 

மிரட்டும் திறனாளன்!

பள்ளியின் கோடைக்கால விடுமுறையில் புரோகிராம்களை எழுத கற்றார். “அன்றைய வசதியில் புரோகிராம்களை நோட்டில் எழுதிப்பார்த்துக் கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதை அன்று நினைத்தே பார்க்க முடியாது” என்கிறார் ஸ்டால்மன். அன்றே ஐபிஎம்மின் 7094 கணினியின் பயனர் கையேட்டை படித்து பயன்படுத்த முயற்சித்த ஐக்யூ மனிதர் ஸ்டால்மன். உயிரியல், இயற்பியல் என காக்டெய்ல் ஆர்வம் காட்டியவர், PDP-11 எனும் சிறிய கணினியில் புரோகிராம்களை ஆசிரியரின் வழிகாட்டலில் எழுத தொடங்கினார். 

ஹார்வர்டு யுனிவர்சிட்டியில் தங்கி புரோகிராம்களை எழுதியவர் 1974 ஆம் ஆண்டு இயற்பியல் பட்டதாரியானார். ஆனால் இயற்பியல் முனைவர் படிப்பில் இணைந்து பின்னர் வெளியேறினார். ஹேக்கர் வட்டாரங்களில் ஆர்எம்எஸ் என ஸ்டால்மனின் பெயர் செம பிரபலம்.  
1970 ஆம் ஆண்டு நியூயார்க்கிலுள்ள ஐபிஎம் அறிவியல் மையத்தில் கணினிகளை இயக்கிப் பார்த்தார். மேல்நிலைக்கல்வி பயிலும்போது ஃபோர்டிரான் மொழியில் கணினி புரோகிராமை மூளையில் வியர்வை சுரக்க அரும்பாடுபட்டு எழுதிக்கொண்டிருந்தார். எப்படியோ வெற்றிகரமாக எழுதினாலும் பின்னாளில் “ஃபோர்டிரான் போன்ற மொழியில் இனி எப்போதும் புரோகிராம்களை எழுதமாட்டேன்” என நொந்துபோய் கூறுமளவு அம்மொழியை பயன்படுத்தியிருந்தார் ஸ்டால்மன். எம்ஐடி ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து வேலை செய்துகொண்டிருந்தவர், பேராசிரியர் ஜெர்ரி சுஸ்மனுடன் இணைந்து இமாக்ஸ், இன்டெலிஜென்ட் பேக்ட்ராக்கிங் உள்ளிட்ட மென்பொருள் திட்டம், கருத்தாக்கங்களில் பங்களித்தார்.

யூடர்ன் சம்பவம்!

மென்பொருளில் கட்டுப்பாடு, கடவுச்சொல், காப்பிரைட் என்பதை மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் என பேட்டியில்(2008) கூறுமளவு தீவிரமாக அவற்றை எதிர்த்தவர் ஸ்டால்மன்.



பிரபலமான இடுகைகள்