நிகரகுவா பாரஸ்ட் கம்ப்!
அடக்குமுறைக்கு எதிராக ஓட்டம்!
உங்களுடைய தாய்நாடு சிறியதாக இருக்கலாம்;
ஆனால் கனவு பெரியதாக இருக்கலாம் என்று கூறிய நிகரகுவா கவிஞர் ரூபம் டாரியோவின் வரிகளை
சொல்லிக்காட்டியபடி ஓடுகிறார் நிகரகுவாவைச் சேர்ந்த வனேகஸ்.
நிகரகுவா ஆட்சியாளர் ஆர்டேகாவின்
வன்முறை ஆட்சிக்கு எதிராக நூறு டிகிரி வெயிலில் தன் நீரிழிவு நோயையும் பொருட்படுத்தாமல்
ஓடுபவரை போலீஸ் புன்னகையோடு பார்க்கின்றனர். “ஆர்டேகாவின் ஊழல் ஆட்சிக்கு எதிரான என்னுடைய
முயற்சியை மக்களும் வரவேற்கிறார்கள்” எனும் 63 வயதான வனேகஸ், தினசரி 21 கி.மீ ஓடுகிறார்.
அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு முடக்கிய அரசின் மூர்க்கமான
வன்முறையால் 36 பேர் இறந்துபோனதை வனேகஸ் மறக்கமுடியாமல் தவித்து ஃபாரஸ்ட்கம்ப் பட டாம்
ஹேங்க்ஸ் போல ஓட முடிவெடுத்திருக்கிறார். வணிக மேலாண்மையாளராகவும் டிஜேவாகவும் பார்ட்டியில்
பரபரப்பான இருந்தவருக்கு ஏற்பட்ட நிரீழிவு பிரச்னை அவரது வாழ்வை மாற்றியது. பக்கத்து
வீட்டிற்கு கூட பெயர்தெரியாமலிருந்த வனேகஸ் இன்று நிகரகுவாவின் தேசிய நாயகனாக மாறியிருக்கிறார்.
இருமுறை கைது செய்யப்பட்டு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டாலும் அநீதிக்கு எதிரான தன் ஓட்டத்தை
வனேகஸ் நிறுத்துவதாக இல்லை.