கல்வியில் தொழில்நுட்ப மேம்பாடு தேவை!








அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக முனைவர் பட்டதாரியான, மிச்செல் வில்லியம்ஸ், மாணவர்களுக்கு அறிவியல் துறையில் சாதிக்க ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சாதிக்க உதவுகிறார். 2015 ஆம்ஆண்டு மிச்செல் தொடங்கிய வில்லியம்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், 

பத்தாண்டுகளுக்கு மேலாக கற்பிக்கும் துறையில் உள்ளார்.
வகுப்பறை தாண்டிய கல்வியை உறுதியாக நம்புபவர், தன் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பிராக்டிக்கலாக அறிவியலில் சாதிக்க தொழில்முனைவோர்களுடன் பேசுவது, இணையவடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கற்பித்துவருகிறார்.

 “கல்வியை தொழில்நுட்பம் மூலம் நாங்கள் மேம்படுத்துகிறோம்” என புன்சிரிப்புடன் பேசுகிறார் மிச்செல். ஸ்டெம் எனும் அறிவியல்துறைகளில் மாணவர்களை படிப்பிக்க வேடிக்கையுடன் பாடம் நடத்துபவர், தேசிய அறிவியல் கழகத்தின் CAREER பரிசு பெற்றுள்ளார்.
கல்வி நிறுவனத்தை மேம்படுத்துவதுடன் பல்வேறு எளிய பயன்பாடுகளுக்கான மென்பொருட்களை தயாரிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது என பம்பரமாக சுழன்று வருகிறார் மிச்செல் வில்லியம்ஸ்.