கேம் விளையாட ரெடியா?
டெக் புதுசு!
கேம்துறையில் பட்ஜெட் கணினி தரமாக
இருக்கும் என்ற நம்பிக்கையை ஏசர் தன் பிரிடேட்டர் லேப்டாப் மூலம் உருவாக்கியுள்ளது.
15.6 இன்ச் திரையில் ஐ7 சிப்செட்டில் பிற பொதுவான அம்சங்களுடன் 88,402 விலையில் கிடைக்கிறது.
பிற கணினிகளின் விலை 1,47,461 என இருக்கையில் இது புதுமைதானே!
தரமான விளையாட்டு அனுபவத்தை அளிக்கும் ஏசரில் பெரும்பகுதி பிளாஸ்டிக் டிசைனும், திருப்தி
தராத பேட்டரியும் பெரிய மைனஸ் பாய்ண்ட். 144Hz திரையளவு ஸ்க்ரீனை புதுப்பிப்பதால் கேம்
விளையாடுவது அற்புதமாக உள்ளது. 16 ஜிபி ராம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், விண்டோஸ் 10
ஓஎஸ், எடை 3 கி.கி என அனைத்தும் பட்ஜெட்டிற்கேற்ற ஓகே அம்சங்கள்.
வயர்லெஸ் இயர்போன்களில் தரமான
இசை, இயக்கம் என அசத்தினாலும் ரூ.22,273 என்ற அதீதவிலை, மோசமான பேட்டரி விஷயங்களில்
தடுமாறுகிறது மாஸ்டர் டைனமிக் தயாரிப்பு.