ஆம்னிஸ்கின்!
பொம்மைகளை இயக்கும் Omniskin!
ஆம்னிஸ்கின் என்பதை பொம்மைகளை
இயக்கும் ரோபோட்டிக் தசை எனலாம். நியூமேட்டிக் ஆக்சுவேட்டர் எனும் முறை இதில் பயன்படுகிறது.
ஆற்றலை இயந்திர முறையில் அசைவுகளாக்குகிறது.
என்ன பிரயோஜனம், சாதாரண பொம்மைகளை
நீங்கள் ஆம்னிஸ்கின்களை பயன்படுத்தி அதற்கு உயிர்கொடுத்து இயக்கலாம். சாதாரண குதிரை
பொம்மை நடக்காது. அதில் ஆம்னி ஸ்கின் கால்களை பொருத்தி நடக்க வைக்கமுடியும்.
ரோபோவுக்கு மனிதர்களைப் போன்ற
இயக்கத்தை அளித்திருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு என்று கூறலாம். உலகெங்கும் தற்போது
இம்முறை பிரபலமாகிவருகிறது. 2017 ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்யும் ரோபோவை பற்றி பலரும்
அறிந்திருப்பீர்கள். ஆம்னிஸ்கின் என்பது உடற்பயிற்சி செய்வது போன்ற சிக்கலான இயக்கங்களை
மனிதர்களைப் போலவே எளிதாக செய்ய உதவுகிறது.