கல்விக்கடன்களை குறைக்க முயலும் அமெரிக்கர்!
கல்வி சீர்திருத்தவாதி!
அமெரிக்காவில் கல்வி கற்க வாங்கிய
கடன்தொகையின் அளவு 1.5 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது. இது கிரடிட் கார்டு கடன்தொகையைக்
காட்டிலும் மிக அதிகம். இதனை தடுக்கவே ஐசக் மோர்ஹவுஸ் முயற்சித்து வருகிறார். ஏனெனில்
2023 ஆம் ஆண்டு இக்கடன்தொகையால் அமெரிக்காவில் 40 சதவிகித மாணவர்கள் கடனாளிகளாக இருப்பார்கள்.
“பிராக்சிஸ் கம்பெனி மூலம் நாங்கள்
நடைமுறை நிஜத்தை தீவிரமாக அமல்படுத்திவருகிறோம்” என கம்பெனி லோகோ டீஷர்ட் –ஜீன்ஸில்
ஜோவியலாக பேசுகிறார் ஐசக்.
2013 ஆம் ஆண்டு தொடங்கிய பாரக்ஸ்
நிறுவனம் பட்டதாரிகளுக்கு விற்பனை தொடர்பான வேலைகளை அளிக்கிறது. 75 நிறுவனங்களில் ஆறுமாத
இன்டர்ன்ஷிப் பெற்றுக்கொடுத்து 14, 400 டாலர்கள் ஊதியம் பெற உதவுகிறார். அமெரிக்காவின்
மிச்சிகனிலுள்ள கலாமசூவில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றவர், பெல்மாண்ட் பல்கலைக்கழக
உதவித்தொகையை மறுத்து பிராக்சிஸ் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். கணினி, போன் வயர்களை
இணைத்து கொடுத்து பகுதிநேர வேலை பார்த்தபடி வகுப்புகளுக்கு சென்றுவந்தார் ஐசக். கல்வியின்
தரம் குறைந்து வேலைவாய்ப்பிழப்பு ஏற்படுபவர்கள் எப்படி கல்வி கடன்களை கட்ட முடியும்?
என்கிறார் ஐசக்.