இதயநோய் அதிகரிப்பு காரணம் என்ன?
முத்தாரம் Mini
அமெரிக்காவில் இதயநோய்களால் இறப்பவர்களின்
அளவு 41% ஆக(1990-2016) குறைந்துள்ளது. அதேவேளையில் இந்நோயின் தாக்கம் இந்தியாவில்
34% அதிகரித்துள்ளதே?
தெற்காசியர்கள் மற்றும் இந்தியர்களுக்கு
ஏற்படும் இதயநோய் சிக்கல்களுக்கு என்ன காரணம் என உண்மையிலேயே தெரியவில்லை. இன்று பெரும்பாலும்
வெளிவரும் ஆய்வுகள் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கானவை. இந்தியர்களை மாவுச்சத்தை
அடிப்படையாக கொண்ட உணவுப்பழக்கம், புகைப்பிடித்தல், அதிகரிக்கும் லிப்போபுரோட்டின்
அளவு ஆகியவற்றை இந்தியர்களின் இதயநோய் பிரச்னைக்கு காரணமாக கூறலாம்.
25 - 30 வயதுக்குள் ஒருவரை இதயநோய் தாக்குவதற்கு என்ன காரணம்?
அமெரிக்கர்களுக்கு பதினாறு வயதில் இதயநோய்களுக்கான அறிகுறிகள்
தொடங்குவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 25-30 வயதுக்குள் இதயநோயால் தாக்கப்படும்
தெற்காசியர்களின் எண்ணிக்கை உலகிலேயே அதிகம். உணவும் வாழ்க்கை முறையும் காரணம் என்றாலும்
துல்லியமான ஆராய்ச்சிகள் கிடையாது என்பதே உண்மை.
இதயமருத்துவத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?
பேஸ்மேக்கர், இதயமாற்று சிகிச்சை, செயற்கை இதயம், ஆஞ்சியோகிராபி
என இதயநோய் தொடர்பான சிகிச்சைகள் மக்களின் இறப்பை பெருமளவு குறைத்துள்ளன.
-மரு.சந்தீப் ஜாஹர், இதயநோய் மருத்துவர்.