இடுகைகள்

ட்விட்ச் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜென் இசட் இளைஞர்களின் ரகசிய வாழ்க்கை! - விக்கர், டிஸ்கார்ட், ட்விட்ச் - என்னதான் நடக்கிறது?

படம்
  டிஸ்கார்ட் ஆப் பெரும்பாலான ஆட்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், தடை கலாசாரம், ட்ரோல்கள் என இதற்கே பொழுது பத்தமாட்டேன்கிறது. ஆனால் ஜென் இசட் இளைஞர்கள் தண்ணீரை விட மேலானது என பச்சைத் தண்ணீர் விற்கும் நிறுவனங்களைப் போல பிரத்யேகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவை பலரையும் ஈர்த்தாலும் கூட இவை ரகசியமான பேச்சுகளுக்கு உதவாது. அங்குதான் ரெட்டிட், டிஸ்கார்ட், விக்கர், ட்விட்ச் போன்ற சமூக வலைத்தளங்களும் உள்ளே வருகின்றன.  இதில் வேகமாக நுழைந்து பல்வேறு ரகசிய செக்ஸ் பேச்சுகளிலும் கணினி விளையாட்டுகளிலும் முன்னேறி வருவது ஜென் இசட்டுகளோடு, 95க்குப் பிறகு பிறந்த ஜூமர் தலைமுறையும்தான். நிஜ உலகில் நண்பர்களைப் பெற முடியாத விரக்தியடைந்தவர்கள் அனைவருமே இங்கு ஒன்றாக கூடி பேசுகிறார்கள்... பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். பேச்சு எப்போதும் பேச்சாக முடியுமா என்ன? மேற்சொன்ன தளங்கள் எதிலும் நாம் பேசும் விஷயம் சார்ந்த விளம்பரங்கள் வருவது போன்ற அல்காரித பிரச்னைகள் கிடையாது. 2005ஆம்  ஆண்டு தொடங்கிய ரெட்டிட், இன்றுவரை பல்வேறு நபர்களின் கணினி முதல்பக்கமாக இருக்கிறது. இவர்கள்