இடுகைகள்

விடுதலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறியப்படாத விடுதலை வீரர்களுக்கு புதிய கௌரவம்! - விடுதலைப் பெருநாள் சிறப்பு திட்டம்

படம்
  இந்திய அஞ்சல்தலை சுதந்திர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் அறியப்படாத உள்ளூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிடும் இந்திய அரசு! எழுபத்தைந்தாவது விடுதலை பெருநாள் விழா தொடர்பான நிறைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியது. அதில் முக்கியமானது, வரலாற்றில் இடம்பெறாத உள்ளூர் விடுதலை வீரர்களை ஆவணப்படுத்துவது இந்த வகையில் இந்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 25 வரலாற்று ஆய்வாளர்களோடு இணைந்து விடுதலை போராட்ட வீரர்களை   கண்டறிய முயன்றது. இந்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள மாநில அரசுகளின் உதவியோடு தொடக்க கட்டமாக 10 ஆயிரம் விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் உருவங்களை இந்திய அரசு அஞ்சல் தலையாக மாற்றி அவர்களை பெருமைப்படுத்தவிருக்கிறது. தனிநபர்கள், குறிப்பிட்ட தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டி அவர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் அதையே அஞ்சல் தலையாக மாற்றித் தரும் செயல்பாடு உள்ளது. அதிலிருந்து விடுதலை வீர ர்களின் அங்கீகாரம் எப்படி மாறுபடுகிறது என தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பிரதாப் சிங். இவர் உள்ளூர் கலை

இந்தியாவின் சாதனைகளைப் பேசும் மின்னூல் இந்தியா 75! - சாதனைகளும் தற்போதைய நிலையும்- அமேஸான் வலைத்தளம்

படம்
  இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த காலகட்டங்களில் இந்தியாவின் வரலாறு அனைவரும் அறியவேண்டியது முக்கியம். தேசிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்தியா 75 என்பதை பல்வேறு சாதனைகளாக அழகுற வடிவமைத்து சிறுசிறு கட்டுரைகளாக வெளியிட்டது. அதுதான் இப்படி நூலை எழுதி தொகுக்க உந்துதல் வழங்கியது. இந்த நூலை வாசிக்கும் ஒருவர் சுருக்கமாக இந்தியா இத்தனை ஆண்டுகளில் சாதித்தது என்ன, தற்போதுள்ள நிலை என்ன ஆகியவற்றை ஓரளவுக்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்தியாவில் சில நாட்கள் ஒருவர் தங்கினால் நூலு்ம், சில வாரங்கள் தங்கினால் கட்டுரையும், அங்கேயே ஆண்டுக்கணக்கில் தங்கினால் எதையும் எழுத முடியாது என ஓஷோ இந்தியா பற்றிய நூலில் கூறியிருப்பார். அது இங்கு நிலவும் பல்வேறு பன்மைத்துவம், முரண்பாடுகளின் கலவையாக முன்வைத்த கருத்து. நூலில் நாம் அறிந்துகொள்வது இந்தியாவைப் பற்றிய சில கோணங்களே. இது முழுமையானதல்ல. இந்தியா என்பது வெறும் வரைபடம் அல்ல. அது ஒரு மனநிலை. யாரையும் ஆளாத, ஆளும் அதிகாரம் கூட மனதில் எழாத ஆன்மாக்கள் வாழும் இ

தலித்துகளின் அரசியல் விடுதலை பற்றி பேசும் நூல்! - புத்தக அறிமுகம்

படம்
                  புத்தக அறிமுகம் 1232 கி . மீ வினோத் காப்ரி ஹார்பர் கோலின்ஸ் ரூ .295 இந்த நூலில் மத்திய அரசு செய்த முட்டாள்தனத்தால் அதன் இடம்பெயர் குடிமக்கள் எப்படி சாலையில் நடந்து வரும் அவலம் நடைபெற்றது என்பதை துல்லியமாக விவரிக்கிறது . திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி இந்த நூலை எழுதியுள்ளார் . ரிச்சர் வைசர் ஹேப்பியர் வில்லியம் க்ரீன் ஹாச்செட் ரூ .599 அனைத்து நாடுகளிலும் பாராட்டப்படுபவர்களு்ம் , தூற்றப்படுபவர்களும் முதலீட்டாளர்கள்தான் . ஒருவகையில் சரியான முதலீட்டை செய்து லாபத்தை எடுத்துக்ளகொண்டு மாயமாகி பிற நாடுகளுக்கு ஓடும் இவர்கள் புத்திசாலிகள் . எழுத்தாளர் 25 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றியவர் . இவர் தனது அனுபவங்களையும் , எந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் எழுதியுள்ளார் . டாடா ஸ்டோரிஸ் ஹரீஷ் பட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் டாடா குழுமத்தில் உள்ள தனிநபர்கள் , நிகழ்ச்சிகள் , இடங்கள் பற்றிய பல்வேறு சிறு கதைகளைக் கொண்ட நூல் இது . கெட் அவுட் ஆப் யுவர் ஓன் வே மார்க் கௌல்ஸ்டன் அண்ட் ப

விடுதலை, சுதந்திரம் பற்றிய உளவியல் குறிப்பு

படம்
Add caption மரணவீட்டின் குறிப்புகள் தாஸ்தாயெவ்ஸ்கி அலெக்சாண்டர் பெட்ரோவிச் என்ற பிரபு ஒருவரின் கதை. அவர் தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ரஷ்யாவின் சைபீரியாவில் மிக பாதுகாப்பான சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், சந்திக்கும் மனிதர்கள்தான் கதை. இதில் முக்கியமானதாக தாஸ்தாயெவ்ஸ்கி விவாதிப்பது, விடுதலை, சுதந்திரம், சிறையின் தன்மை ஆகியவை பற்றித்தான். முதலிலேயே சிறை வாழ்வை அலெக்சாந்தர் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார். ராணுவம் மற்றும் பிற மக்கள் செய்யும் குற்றங்களுக்கும் அச்சிறைவாழ்வுதான் கிடைத்தது. ஆனால் இருபிரிவாக பிரித்து சிறைதண்டனை கைதிகள் வாழ்ந்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளைப் பிரித்து அவர்களுக்கென தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் கைதிதான். நான் எனும் அடையாளத்தில் வரும் கைதிகள் மெல்ல ஒடுங்கி சிறையின் சுவர்களுக்குள் இளமையைத் தொலைத்து வெளிவரும்போது சமூகத்தில் வாழும் தன்மையை தொலைத்தவர்களாக மாறிவிடுவதை அசத்தலாக எழுதி உள்ளார் தாஸ்தாயெவ்ஸ்கி. முழுக்க உளவியல்ரீதியான தன்மையில் சென்று டக்கென கதை முடிந்துவிடுகிறது. அ