தலித்துகளின் அரசியல் விடுதலை பற்றி பேசும் நூல்! - புத்தக அறிமுகம்

 

 

 

 

 Dark Interiors

 

 

 

 

புத்தக அறிமுகம்


1232 கி.மீ


வினோத் காப்ரி


ஹார்பர் கோலின்ஸ்


ரூ.295



இந்த நூலில் மத்திய அரசு செய்த முட்டாள்தனத்தால் அதன் இடம்பெயர் குடிமக்கள் எப்படி சாலையில் நடந்து வரும் அவலம் நடைபெற்றது என்பதை துல்லியமாக விவரிக்கிறது. திரைப்பட இயக்குநர் வினோத் காப்ரி இந்த நூலை எழுதியுள்ளார்.


ரிச்சர் வைசர் ஹேப்பியர்


வில்லியம் க்ரீன்


ஹாச்செட்


ரூ.599


அனைத்து நாடுகளிலும் பாராட்டப்படுபவர்களு்ம், தூற்றப்படுபவர்களும் முதலீட்டாளர்கள்தான். ஒருவகையில் சரியான முதலீட்டை செய்து லாபத்தை எடுத்துக்ளகொண்டு மாயமாகி பிற நாடுகளுக்கு ஓடும் இவர்கள் புத்திசாலிகள். எழுத்தாளர் 25 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றியவர். இவர் தனது அனுபவங்களையும், எந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதையும் எழுதியுள்ளார்.


டாடா ஸ்டோரிஸ்


ஹரீஷ் பட்


பெங்குவின் ராண்டம் ஹவுஸ்



டாடா குழுமத்தில் உள்ள தனிநபர்கள், நிகழ்ச்சிகள், இடங்கள் பற்றிய பல்வேறு சிறு கதைகளைக் கொண்ட நூல் இது.


கெட் அவுட் ஆப் யுவர் ஓன் வே


மார்க் கௌல்ஸ்டன் அண்ட் பிலிப் கோல்ட்பெர்க்


ரூபா


ரூ.295


சிறுவயதில் ஏற்படும் மோசமான பாதுகாப்பில்லாத சூழல் ஒருவரின் வாழ்க்கையில் முடிவெடுக்கும் சூழலை பாதிக்கிறதா என்பதை ஆராய்கிறது இந்த நூல். அப்படி பாதித்தால் அதனை எப்படி சரி செய்வது என்று கூறி பல்வேறு யோசனைகளை சொல்லுகிறது. தொழில் சார்ந்த வாழ்க்கையில் வெல்ல இந்த நூல் ஒருவருக்கு உதவும்.


டார்க் இன்டீரியர்ஸ்


ராஜ் கௌதமன்


சேஜ்


தமிழக வரலாற்றில் உள்ள தலித்துகளின் நிலை பற்றி பேசும் கட்டுரைகள் இவை. இதனை ஆங்கிலத்தில் தியடோர் பாஸ்கரன் மொழிபெயர்த்திருக்கிறார். தலித்துகளுக்கான விடுதலை அரசியல் ஏன் இப்போது தேவை என்பதை ஆசிரியர் நியாயப்படுத்தி கட்டுரைகளை எழுதியுள்ளார்.


https://us.sagepub.com/en-us/nam/dark-interiors/book277344

https://www.barnesandnoble.com/w/1232-km-vinod-kapri/1139142651

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்