கண்டமேனிக்கு கலாய்க்கும் சமூக வலைத்தள ஆட்கள்! - ட்விட்டர், இன்ஸ்டா பரோடி கணக்குகளில் சிரிப்பு விளையாட்டு
கண்டமேனிக்கு கலாய்ப்போம்
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பிறரை கிண்டல் செய்வது, பகடிக்கு உள்ளாக்குவது என்பது வேற லெவலுக்கு மாறிவிட்டது. சீரியசான அனைத்து விஷயங்களையும் மக்கள் சின்னாபின்னாக்கி சிரிக்கவிட்டு சிதறவிடுகிறார்கள். இப்படியெல்லாம் யோசிக்கமுடியுமா என அசரடிக்கிறார்கள். இப்படி கிண்டல் செய்து கலாய்ப்பதற்கென்றே தனியாக சேனல் ஒன்றை பல்வேறு சமூக வலைத்தளங்களில் தொடங்கி சென்சார் பிரச்னையின்றி கிண்டல் செய்து தள்ளுகிறார்கள். தொடர்புடையவர்களுக்கு பச்சை மிளகாயை நறுக்கென கடித்தபடி இருக்குமாறு காமெடி செய்கிறார்கள் அவர்களைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர் ஹாப்மெயர். இவருக்கு 41 வயது. இவர் பார்சி பொம்மைகளை கிண்டல் செய்து பல்வேறு படங்களை பதிவிடுகிறார். பார்பி பொம்பை எப்படியிருக்கும் என்று உங்களுக்கு தெரியும? கச்சிதமான மார்பகங்கள், உடுக்கு இடை, நீளமான கால்கள் என அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு எதிர்மாறாக ஹாப்மெயர் தனது பார்பியை வடிவமைக்கிறார். படங்கள் பார்த்தாலே இயல்பாக இருக்கும். இவரது நோக்கம். ஒன்றுபோலவே இருக்கும் தன்மையை உடைப்பதுதான். இவரது படங்களைப் பார்த்தாலே கிளிஷே விஷயங்களை எப்படி போட்டுத்தாக்குகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். பாடகி மிலி சிரஸ் இவரது சமூக வலைத்தள கணக்கை பின்தொடரத் தொடங்க மேடமின் புகழ் எங்கோ போய்விட்டது. 2016இல் இவரது இவரது பெயர் போர்ப்ஸ் இதழிலேயே வந்துவிட்டது.
டயட் சபியா என்றொரு இன்ஸ்டா கணக்கை முகம் தெரியாத ஒருவர் நடத்துகிறார். இவரது முக்கியமான வேலை, உலகளவில் புகழ்பெற்ற பிராண்டுகளை எப்படி உள்ளூர் ஆட்கள் காப்பியடிக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களை அசிங்கப்படுத்துவதுதான். புகழ்பெற்ற பிராண்டுகளின் உடைகளில் சின்ன மாறுதல்களை செய்து அறிவுசார் காப்புரிமையை தங்களது பெயருக்கு சிலர் வாங்குகிறார்கள். ஆனால் இணையம் வந்தபிறகு யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. இந்த தளத்தை முன்னணி நடிகைகள், விளையாட்டு வீர ர்கள் பின்பற்றுகிறார்கள். பின்னே அசிங்கப்படாமல் தப்பிக்க வேண்டாமா? இதுவும் கூட வெளிநாட்டில் உள்ள டயட் பிரதா என்ற கணக்கின் இந்திய வெர்ஷன்தான்.
சில கணக்குகளை படித்தால் புன்னகை பூக்கும்படியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிரிப்பு வரும்படியும் சில ட்விட்டர் கணக்குகள் உள்ளன. குயின் எலிசபெத் கணக்கும் அப்படித்தான். ஹாரிக்கு ஆர்ச்சி பிறந்தபோது இவர்கள் பதிவிட்ட புகைப்படங்களும் கமெண்டும் இதற்கு சாட்சி. பிரபலங்களை கிண்டல் செய்ய அவர்களின் பெயரிலேயே தொடங்கப்படும் கணக்குகளை பரோடி கணக்குகள் என்கிறார்கள். இப்படிய டிரம்ப், தலாய் லாமா, சார்லஸ், போரிஸ் ஜான்சன் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயர்களில் கணக்குகள் உள்ளன.
அரசியல் பகடி
இதற்கு உதாரணமாக ட்விட்டரில் உள்ள ஜவாகர்லால் நேரு கணக்கைத்தான் சொல்லவேண்டும். தன்னைத்தானே கிண்டல் செய்வதோடு நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். உடனே பரோடி கணக்குவாசி, என்னுடைய பிறந்தநாளை நீங்கள் மறக்கவில்லை. நாட்டை கடந்த ஆறு ஆண்டுகளாக மறந்துபோனது போல பிறந்தநாளையும் மறந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் என கமெண்ட் அடித்து ஏழைத்தாயின் மகனை நக்கல் அடித்திருந்தார்.
அனைத்தும் நேருவின் தவறு என்று மோடி நாடாளுமன்றத்தில் டீ ஆற்றியபோது, வெளியான நேருவின் அரசியல் பகடி பலரையும் சிரிக்க வைத்தது. அதில் இயற்கையாகவே நான் முட்டாள் என்று ஒரு வார்த்தையை சேர்த்திருப்பார். இவருக்கு அடுத்து ராகுல்காந்தியை அதிகம் பேர் கிண்டல் செய்யத் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படி கிரியேட்டிவாக யோசித்து இதற்காகவே தங்களது ஐடி வேலையை கைவிட்டு இதற்கு வருபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
மிதுன் சக்கரவர்த்தியின் ரசிகரான வினய், பாக்சி என்ற ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார். இதில் அரசியல் தொடர்பான போலிச்செய்திகள் இருக்கும். அல்லது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட சமாச்சாரங்களை இடம்பெறச்செய்கிறார். அவை பலரும் கவர்ந்து இழுத்து வருகிறது. ட்விட்டரைப் பொறுத்தவரை மோடியைப் பார்த்து தன் உரிமையாளர் டோர்சி கைகொடுத்து பேசினாலும் கூட ஜனநாயகத்தை தனது விதிமுறைகள் மூலம் காப்பாற்றித்தான் வருகிறது. ஆனால் அதனால் வழக்குகள் பரோடி கணக்குகள் மூலம் இல்லை என்று கூறமுடியாது. வினயின் பாக்ஸி கணக்கில் புகழ்பெற்ற பீரின் சுவை மனிதர்களின் சிறுநீரோடு ஒப்பிட்டு செய்த வீடியோ முக்கியமான உதாரணம். இதன் காரணமாக பீர் கம்பெனி கோர்ட் படியேறி வீடியோவை அகற்ற நிர்பந்தம் கொடுத்து வென்றது.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
ரியா மெரோத்ரா
https://thefauxy.com/politics/
கருத்துகள்
கருத்துரையிடுக