காங்கிரஸ் கட்சி அரசு ஆளும் மாநிலங்களில் கோவிட் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் - சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்

 

 

 https://images.indianexpress.com/2016/04/sonia-gandhi-759.jpg

 

 

 

சோனியா காந்தி


காங்கிரஸ் கட்சி தலைவர்



ராகுல்காந்தியின் செயல்பாடு தற்போது எப்படியுள்ளது. உங்களது மருமகன் கூட கோவிட் பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளார் அல்லவா?


ராகுலின் செயல்பாடு மேம்பட்டுள்ளது. டாக்டர் மன்மோகன் உட்பட பலரும் பாதிக்கப்பட்டது எனக்கு கவலை அளித்தது உண்மைதான். மக்கள் இந்நோயினை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். மோசமான காலகட்டத்தை நாம் இம்முறையில்தான் கடக்க முடியும்.


மத்திய அரசு நோய்தடுப்பிற்காக காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளை கேட்டால் அதனை ஏற்பீர்களா?


நிச்சயமாக. எனது பதில் ஆமாம் என்றுதான் இருக்கும். அந்த காரணத்தினால்தான் நாங்கள் பிரதமருக்கு கோவிட் பிரச்னையை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தோம். காங்கிரஸ் கட்சி பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல்லாண்டுகள் அனுபவம் கொண்டது.


இப்போதுள்ள நிலையில் அரசுக்கு நீங்கள் கூறவேண்டிய அறிவுறுத்தல்கள் என்ன?


இந்தியா தினசரி 7500 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் இன்று தன்னுடைய மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை தரமுடியவில்லை. எங்கு பிரச்னையுள்ளது என்பதை அரசு கண்டுபிடித்து தனது அத்தனை ஆதாரங்களையும் மக்களுக்காக வழங்கவேண்டும்.


அரசும் தொழில்துறையும் ஒன்றாக சேர்ந்து தேவையான படுக்கைகளை தயார் செய்யவேண்டும். இதனை போர்க்கால அடிப்படையில் அரசு உருவாக்கவேண்டும். நோய்த்தொற்றுக்காக சோதனைகளை அதிகம் செய்யவேண்டும். சோதனை முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். கசப்பான உண்மைகளை மறைக்கிறீர்கள் என்றால் உங்களால் நடக்கும் நிஜத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்.


காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அங்கிருந்து கற்ற பாடங்கள் என்ன?


சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் உபரியாகவே உள்ளது. அவர்கள் பிற மாநிலங்களுக்கு கூட உதவிகளை வழங்கிவருகிறார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி வழங்கி வருகிறார்கள். இவர்கள் முன்கூட்டியே நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை தொடங்கிவிட்டனர். எங்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் கூட்டுறவு முறையில் செயல்படுகிறோம். எங்கும் ஆவேசமாக இதயமற்று நடந்துகொள்ளவில்லை.


காங்கிரஸ் கட்சி கூட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பேரணிகளை நடத்தியதே? நோய்த்தொற்று பாதிப்பு பெருகிய காலத்தில் இது தவறு என தெரியவில்லையா?


நீங்கள் கூறுவது சரிதான். மேடையில் உள்ள தலைவர்கள் சரியானபடி மாஸ்க்குகளை அணிந்தாலும் கூட தொண்டர்கள் அப்படியே அதனைப் பின்பற்றவில்லை. இதனை சில கூட்டங்களுக்கு பிறகு உணர்ந்து எனது சக தலைவர்களுக்கு கூறினேன். ஆனால் தீர்மானிக்கப்பட்ட கூட்டங்களை முழுக்க ரத்து செய்வது கடினமானது. நான் கூறியதை கட்சி தலைவர்கள் ஏற்றாலும் கூட ஒரு கட்சி மட்டும் தேர்தல் கூட்டங்களை ரத்து செய்வது தேவையான விளைவை ஏற்படுத்தாது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


மனோஜ் சி ஜி




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்