கல்வி, தொழில், ஊடகம் ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள்! - திவ்யா, மானசி டாடா, மசபா குப்தா, பிரஜக்தா கோலி

 

 

 

 https://images.assettype.com/fortuneindia/2020-11/d71f82f0-a10a-4341-bee4-5c2133e3e1f8/Divya_Gokulnath.jpg

 

 

 

ஆர்த்தி கில்


துணை நிறுவனர், ஆஸிவியா


பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனல் குறைபாடுகளை போக்குவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறார். நடப்பு ஆண்டில் தனது நிறுவன வருமானத்தை 200 கோடியாக உயர்த்த உழைத்து வருகிறார்.


உலகில் பலருக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் அதனை தொடர்ந்து செல்வதற்கான உழைப்பு இருக்காது. ஆர்த்தி இதற்கு விதிவிலக்கான ஆள். இவர் எம்பிஏ முடித்துவிட்டு ஃபிட்சர்க்கிள் என்ற ஆப்பைத் தொடங்கினார். இதில் ஊட்டச்சத்துகளுக்கான பல்வேறு செய்திகளை வழங்கத் தொடஙகினார். இவருடன் மிஹிர் கடானியும் இணைந்தார். 2014இல் இந்த நிறுவனத்தை இருவரும் தொடங்கினர்.


என்னதான் ஆப்பில் உடல்நலத்திற்கான ஆலோசனைகளை வழங்கினாலும் கூட பிற நிறுவனங்களின் பொருட்களை பயனர்கள் வாங்க வேண்டியிருந்தது. இதில் பல்வேறு செயற்கைப் பொருட்கள் இருந்தன. எனவே, நாமே ஆரோக்கியமான பொருட்களை தயாரித்து விற்கலாமே என ஆர்த்தி முடிவெடுத்தார். எனவே இருபது லட்சம் கடன் வாங்கி முதலில் புரத உணவு, ஆரோக்கிய பானம் ஒன்றைத் தயாரித்தனர். இப்போது இந்த வரிசையில் பதினைந்து பொருட்கள் உள்ளன. இந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆரோக்கிய உணவுப்பொருட்கள் உள்ளன. இவர்களின் நிறுவனத்திற்கு எண்பது சதவீத பயனர்கள் பெண்கள்தான். தற்போது பாலிசிஸ்டிக் ஓவரி, மெனோபாஸ் சார்ந்த ஹார்மோன் பிரச்னைகளுக்கான தீர்வுகளை தேடி வருகின்றனர். நாங்கள் பெண்களுக்கான உணவுகளை தயாரிக்கவில்லை. ஆனால் தூய்மையான உணவுப்பொருட்களை பெண்கள் விரும்புவதால் ஆண்களை விட பெண்களுக்கு எங்களுடைய பொருட்கள் பிடித்துவிட்டன போல என்றார் ஆர்த்தி.


திவ்யா கோகுல்நாத்


துணை நிறுவனர், பைஜூ


பைஜூ ஆப்தான் இப்போது நாட்டில் அதிக மாணவர்களை படிக்க வைக்கிறது. பள்ளிப்படிப்பு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆப் வழியில் மாணவர்களை படிக்க வைப்பதற்கான முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இத்துறையில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும் கூட பைஜூ சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. பள்ளிக்குப்பிறகு படிக்கவேண்டிய பாடங்கள் சார்ந்த துறையில் இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.


சிக்கலான சவாலான சூழ்நிலை எப்போதும் நிறுவனங்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த வகையில் எங்கள் நிறுவனம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது. திவ்யா கோகுல்நாத், பைஜூ நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். இவர் இதனை தன் கணவரான ரவீந்திரனுடன் இணைந்து தொடங்கினார். பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை வழங்கி, இருபது மில்லியன் மாணவர்களை தனது நிறுவனத்திற்கு உள்ளே இழுத்துள்ளது பைஜூ. ஏழு பிராந்திய மொழிகளில் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. மேலும் 2 பில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் மதிப்பு 10.8 பில்லியனாக உள்ளது.


மானசி டாடா


கூடுதல் இயக்குநர், கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ்



மானசி டாடாவிற்கு 31 வயதாகிறது. தான் வேலை செய்யும் குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்து வருகிறார். இவரது குடும்பத்தில் மானசி ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர். சூழல் மாற்றம் தொடர்பாக ஐ.நாவுடன் கிர்லோஸ்கர் குழுமம் இணைந்து செயல்பட்டு வருகிறது. பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பாகவும் மானசி தலைமையிலான நிறுவனம் திட்டங்களை உருவாக்கி வருகிறது. ஒருவரிடம் கிடைக்கும் அதிகாரம் என்பது அவரின் தனிப்பட்ட செயல்களை உருவாக்கவும், சமூகத்திற்காக பங்களிக்கவும் உதவுகிறது என்பது இவரது த த்துவம். பெங்களூருவில் பள்ளிப்படிப்பு முடித்தவர், கவின்கலை படிப்பை தேர்ந்தெடுத்து படித்துள்ளார். பெங்களூருவிலுள்ள பன்னோக்கு மருத்துவமனையில் இவரது வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதோடு இவர் ஓவியரும் கூட.


Masaba Gupta collaborates with Nykaa to launch fragrance ...


மசபா குப்தா


நிறுவனர், ஹவுஸ் ஆப் மசபா


மசபாவின் உடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு இந்தியாவில் பத்து கடைகள் உள்ளன. இன்ஸ்டாகிராமி் லைவ் பேஷன் ஷோ நடத்திய நிறுவனம் இவருடையதுதான். விவியன் ரிச்சர்ட்ஸ், நீனா குப்தா ஆகியோரின் மகள்தான் மசபா குப்தா. இவரதது தொழில்முயற்சி பத்தொன்பது வயதில் தொடங்கிவிட்டது. அதனை லக்மே பேஷன் வீக்கில் தொடங்கினார். பின்னர், 2009இல் தனது சொந்தமான கடையை மும்பையில் தொடங்கினார்.


மசபா குப்தா தனது ஆடை மூலம் ஓரளவு பிரபலமடைந்தார் என்றாலும் நெட்பிளிக்ஸில் கொஞ்சம் புனைவும் நிறைய நிஜமும் கொண்ட மசபா மசபா தொடர் மூலம் அகில உலக புகழ்பெற்றார். அதில் மசபா , மசபாகவே நடித்திருந்தார். இதில் அவரது அம்மாவும் இடம்பெற்றிருந்தார்.


https://starsbiog.com/wp-content/uploads/2018/02/Prajakta-Koli-1.jpg


பிரஜக்தா கோலி


யூட்யூப் நகைச்சுவை நடிகர்


பிரஜக்தா கோலி தனது புதிய வீடியோவை எப்போது பதிவிட்டாலும் யூட்யூபில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அவருக்கு கிடைக்கின்றனர். இரண்டே ஆண்டுகளில் ஒரு மில்லியனிலிருந்து 5 மில்லியனாக உயர்ந்துள்ளது. தற்போது திரைப்படங்களில் நடிக்கவும் தலையசைத்திருக்கிறார். காயாலி புலாவோ எனும் குறும்டடம் வெளியிடப்படவிருக்கிறது. நெட்பிளிக்ஸின் மிஸ்மேட்ச்சுடு தொடரில் நடிக்கவிருக்கிறார். நான் சிறுவயதில் எனக்கு என்ன திறமை இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டேன். அப்போதே நாடகங்களில் நடிக்கவும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் தொடங்கிவிட்டேன். சிறுவயதில் எனது கையெழுத்தை நான் நோட்டுகளில் போட்டுப்பழகிக்கொண்டிருந்தேன். நான் எப்போதும் நடிப்பதை விரு்ம்புகிறேன். 2018இல் கூகுள் பார்ம் ஒன்றைத் தொடங்கினார் கோலி. அதில் பத்தாயிரம் ரசிகர்கள் இணைந்தனர். இவர்களுக்காகவே இடம் ஒன்றை பதிவு செய்து அனைவரையும் சந்தித்தார். அங்கு நான் நான்காயிரம் பேரையேனும் சந்தித்திருப்பேன் என்றார்.


இவரது வீடியோக்கள் தினசரி வாழ்க்கையை பேசுவதாகவே இருக்கும். இவரது நகைச்சுவை பெற்ற புகழ் காரணமாக அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள மிச்செல் ஒபாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெண் கல்விக்கான ஆவணப்படத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். முதலில் எனக்கு கிடைத்த பணத்தை வந்தவுடன் செலவு செய்து வந்தேன். இப்போது அதனை சேமித்து வருகிறேன்.



கருத்துகள்