பொதுமுடக்கத்தில் மனதிற்கு நம்பிக்கையூட்டும் சில நூல்கள்... உங்களுக்காக....
பொதுமுடக்கத்தில் படிப்பதற்கான சில நூல்கள்
தி ஹேப்பியஸ்ட் மேன் ஆப் தி எர்த்
எடி ஜாகு எப்படி யூத இனத்தில் பிறந்து வதை முகாம்களிடையே தப்பித்து ஏழு ஆண்டு கள் வாழ்ந்தார், இந்த நரகமான காலத்தில் வாழும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கச் செய்தது எது, எப்படி தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார் என்பதை புன்னகையுடன் நீங்கள் படித்து ஆறுதல் பெறலாம்.
டீம் கைண்ட்னெஸ் - எ ரிவல்யூஷனரில் கைட் பார் தி வே பார் வீ திங்க், டாக் அண்ட் ஆக்ட் இன் கைண்ட்னெஸ்
உலகம் பல்வேறு சுயநலனுக்காக அரசியலுக்காக பிளவுபட்டு வருகிறது. இந்த இடைவெளியை எப்படி கருணை கொண்டு நிரப்புவது என ஆராய்கிறது இந்த நூல். கருணையை தினசரி நாம் செய்யும் செயல்கள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்துவது, அன்பை பிறருக்கு வழங்குவது எப்படி என நூல் வழிகாட்டுகிறது.
தி பாய் தி மோல், தி பாக்ஸ் அண்ட் தி பாக்ஸ்
நான்கு நண்பர்களின் வாழ்க்கை வழியாக நம்பிக்கையையும், நட்பையும் பரப்பும் நூல் இது. 2019இல் வெளியான நூல் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. நூல் எளிமையாக படிக்கும்படியும், இதிலுள்ள வசனங்கள் அனைத்துமே எழுதி வைத்துக்கொள்ளும் தரத்தில் இருப்பதால் வாசகர்களை ஈர்த்துள்ளது. சிரமமான காலகட்டத்தில் பலருக்கும் உதவும் நூல் இது.
இகிகாய் தி ஜப்பானிஸ் சீக்ரெட் டு எ லாங் அண்ட் ஹேப்பி லைப்
2016இல் வெளியான நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிடிஎப் வடிவிலும் கிடைக்கிறது. நூல் ஜப்பானியர்களின் ஆயுள் அதிகமாக இருக்க என்ன காரணம் என்று கூறி வாழ்விலிருந்து கிடைக்கும் பல்வேறு விஷயங்களை ஆதாரப்பூர்வமாக பேசுகிறது. இதில் ஒருவர் வாழும் சூழல், உணவு, வேலை என பல்வேறு காரணங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். உண்மையில் வாழ்க்கையில் நாம் எதனைத் தேடுகிறோம் என்பதைப் பற்றி யோசிக்க வைக்கும் நூல் இது.
தி மேஜிக் ஆப் பிலீவ்விங்
1948 ஆம் ஆண்டு வெளியான நூல் இது. முதல் உலகப்போரில் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்ந்த கிளாட் எம் பிரிஸ்டல் நெருக்கடியான காலத்தில் தனது வாழ்க்கை எப்படி இருந்தது, நம்பிக்கையைப் பெற்றது எப்படி என விளக்கி சொல்லுகிறார். வெளியான நாள் முதல் இன்றுவரை முக்கியமான நூலாக கருதப்பட்டு வாசிக்கப்படுகிறது.
திங்க் லைக் எ மங்க் ட்ரெய்ன் யுவர் மைண்ட் பார் பீஸ் அண்ட் பர்பஸ் எவரிடே
கடந்த ஆண்டு வெளியான நூலில் ஜே ஷெட்டி மனதை எப்படி பயிற்சிகொடுத்து வளைப்பது என சொல்லித்தருகிறார். துறவியாக பயிற்சி பெற்று வாழ்ந்து பின்னாளில் எழுத்தாளராக மாறியவர் இவர். பேராசை, காமம், பொறாமை, கோபம் ஆகிய உணர்ச்சிகள் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் பாதிப்பை விளக்கி அதனை தவிர்க்கும் உபாயங்களையும் சொல்லியிருக்கிறார்.
ஹேப்பினெஸ் பிகம்ஸ் யூ
திரைப்பட நடிகையான டுனா டர்னர் எழுதியுள்ள சுயசரிதை. தனது வாழ்கையில் எப்படி சவால்களை கடந்து வந்து சாதித்தார் என்பதை நூல் விளக்குகிறது. நூலைப் படிக்கும்போது உங்களுக்குள் உற்சாகம் இமாலய நன்னீர் சுனையாக ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக