மூளையில் சுரக்கும் எக்ஸ்ட்ரா டோபமைன் குற்றத்திற்கு ஆதாரமூலமா?

 

 

 

 https://www.newyorker.com/wp-content/uploads/2015/10/Beale-AnnRulesTedBundybook-1200.jpg

 


குற்றமும் மனமும்


டெட் பண்டியைப் பற்றி நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள். அமெரிக்காவில் பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொல்வதில் புகழ்பெற்றவர். குற்றம் செய்வதில் டாக்சி டிரைவர் ஜெஸ்பர்சனைப் போன்ற மனமுடையவர். முதல் குற்றம், இரண்டாம் குற்றம் என அவரது கொலை செய்வதின் அடிமைத்தனம் கூடிக்கொண்டே சென்றது. டெட் பண்டியைப் பற்றிய குறிப்பிடதக்க அம்சம், செய்த குற்றத்தை புத்திசாலித்தனமாக செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டியதுதான். 1978ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிப்ரவரி மாதம் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் தங்குமிடத்தில் நுழைந்தார். அங்கு நான்கு பெண்களை படுகாயப்படுத்தி இரு பெண்களைக் கொன்றார். 1976ஆம் ஆண்டு டெட்டுக்கு பெண்களை கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போதே அவர் டஜன் கணக்கிலான பெண்களை கொன்றிருந்தார்.ஆனால் அப்போது நீதிமன்றம் அவர் எப்படிப்பட்ட கொலைகாரர் என்பதை அறியவில்லை. பல்வே்று உளவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலிலிருந்து காயங்களைப் பார்த்து கொலை செய்தவர் ஆபத்தான மனிதர் என முடிவுக்கு வந்தனர். இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் அல் கார்லிஸ்லே டெட் பண்டியின் மனதைப் பற்றி வயலன்ட் மைண்ட் என்ற நூலை எழுதினார்.


இப்போது கொலை செய்பவர்களின் மனதைப் பற்றி சிறு விஷயத்தைப் பார்ப்போம்.


1963ஆம் ஆண்டு உளவியலாளர் ஜெ.எம். மேக்டொனால்டு மூன்று அறிகுறிகளை குழந்தைகளிடம் கவனிக்க வேண்டும் என வற்புறுத்துகிறார். சிறு வயதில் குழந்தைகளிடம் ஒருவர் குறிப்பிட்ட அறிகுறிகளைப் பார்த்தால் அவருக்கு சிகிச்சை தேவை என்று கூறுகிறார். அதேசமயம் இதில் உள்ள அறிகுறிகள் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கூறிவிட முடியாது. படுக்கையில் சிறுநீர் கழிப்பது, விலங்குகளிடம் இரக்கமின்றி நடந்துகொள்வது ஆகியவற்றை அடங்கிய இதனை மேக் டொனால்டு டிராயாட் என்று குறிப்பிடுகின்றனர்.


மைண்ட் ஹன்டர் என்ற நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் குற்றங்களைப் பற்றிய தொகுப்பாளர் ஜான் இ டக்ளஸ் பங்கேற்றார். விலங்குகளிடம் ஒருவர் காட்டும் வன்முறை பின்னாளில் அப்படி மனிதர்களிடமும் மாற்றமாகிறது என்றார். படுக்கையில் சிறுநீர் கழிப்பது, நெருப்பை ரசிப்பது தொடர்பான அவமானமும் அவர்களின் மனதில் வன்முறை நுழைவதற்கு வாய்ப்பாக உள்ளது. விதிகள் என்பதை அனைவருக்கும் பொதுவானதாக வகுத்தாலும் இதில் விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஒருவரின் இளமைக்காலம் அவரது ஆளுமையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.


டெட் பண்டியின் கதைக்கு வருவோம். அவர் தனது குற்றவாளி முகத்தை எப்படி வெளியில் மறைத்தார். உண்மையில் அந்த முகத்தை தனது மனதிற்கே தெரியாமல் வைத்திருந்தார் என்பதே உண்மை. தான் எப்படி எங்கு கொலை செய்யப்போகிறோம் என்பதை முதலில் கற்பனை கண்டு உருவாக்கிக்கொண்டார். பிறகு, கொலை செய்வதை தடுக்கும் எண்ணங்களை ஒதுக்கி தனியாக வைத்துக்கொண்டார். அடுத்து தான் கொலையாளி என்பதே மனதிற்கு முழுமையாக தெரியாதவாறு பல்வேறு விஷயங்களை தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டார்.இ தனால் அவரால் கொலைகளை கண்களை இமைக்காமல் செய்ய முடிந்த்து. குற்றவுணர்ச்சியை ஒழிக்க முடிந்தது.


முதலில் தினசரி வேலைகளை சரியாக அமைத்துக்கொண்டவர், பின்னாளில் இருளான எண்ணங்களுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். இதனால் கொலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார். அது கொடுத்த திருப்தியை அவருக்கு தினசரி வேலை கொடுக்காமல் சலிப்பை ஏற்படுத்தியது. இதனால் கொலை மீதான அடிமைப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.


டோபமைன் மூளையில் அதிகம் சுரப்பவர்களும் கூட பழக்கத்திற்கு அடிமையானவர்கள்தான். இந்த முறையில் கட்டாயமாக திருடும் பழக்கம் கொண்டவர்கள், நெருப்பை வீடுகளுக்கு வைப்பவர்கள், சூதாட்டத்தை விளையாடி வெல்பவர்கள் ஆகியோர் இந்த வகையில் வருவார்கள். இவர்களுக்கு ஹெராயினை சுவைத்தவர்கள் போல அடுத்தமுறை ஒரு விஷயத்தை செய்யும்போது இன்னும் கூடுதலான சந்தோஷம் கிடைக்கவேண்டும். அப்படி இல்லாதபோது எளிதாக திருப்தி அடைய மாட்டார்கள்.


பிபிசி


பென் பிக்


கருத்துகள்