உணவு, வாக்கு, உடல்பருமன், தூக்கம் என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்கள்தான்! - பழக்கங்களின் தொடர்ச்சி

 

 

 

 Dna, Genetics, Science, Research, Gene, Chromosome

 

 

 

இயற்கையான முறையும், சூழலின் தாக்கமும்


இந்த இரண்டு வார்த்தைகளும் இப்போது அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது. இன்று கிறிஸ்பிஆர் முறையில் மரபணுவைக் கூட வெட்டி ஒட்டி பிறப்புக்குறைபாடுகளை மாற்றிக்கொள்ளமுடியும். இதற்கான ஆராய்ச்சிகள் தடுப்பூசிகள் தயாரிப்பிலும் கூட பயன்படுகின்றன. பொதுவாக ஒருவரின் குணம், ஆளுமை, சாப்பிடும் பழக்கம், திறன் ஆகியவற்றிலும் கூட அவரின் பரம்பரை, சூழல் என இரண்டின் தாக்கமும் உண்டு. இதனை பலரும் மாற்றி மாற்றி விவாதம் செய்வதுண்டு. அதாவது, அவரின் பரம்பரை அப்படி அதனால் திறமையுடன் இருக்கிறார். மற்றொன்று, பரம்பரையாக இல்லையென்றாலும் சூழலின் அழுத்தத்தில் ஒருவர் தனது திறன்களை வளர்த்துக்கொள்வது. இது இன்றுவரை முடிவில்லாத விவாதமாக செல்கிறது.


ஒருவரின் ஆரோக்கியம், உணவின் முறை என அனைத்துமே மரபணுக்களின் தாக்கம் பெற்றுள்ளது. குற்றவியல் துறையில் பல்வேறு குற்றவாளிகளைத்தான் இந்தவகையில் ஆராய்ந்தனர். அடிக்கடி குற்றம் செய்பவர்களின் மனநிலையையும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும் ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சாப்பிடும் பழக்கத்தில் பலருக்கும் பல்வேறு வித விருப்பங்கள் இருக்கும். ஒருவர் தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார், மற்றொருவர் இறைச்சி தவிர வேறு எந்த உணவுகளையும் விரும்புவதில்லை. ஒருவருக்கு பால் அலர்ஜியாகிறது, இன்னொருவருக்கு குப்தா பவன் பால் ஸ்வீட்டுகள் இல்லையென்றால் இரவு உணவு நிறைவு தருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் மரபணு என பலரும் யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால் இப்போது உலகம் முழக்க செய்யப்படும் ஆராய்ச்சிகளில் உணவின் சுவையைக் கண்டறியும் ரிசெப்டார்களை மரபணுக்கள்தான் கட்டுப்படுத்துகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.


2011 ஆம் ஆண்டு கிரிம்ன் அண்ட் ஸ்டெய்ன்லே ஆய்வு செய்யப்பட்டது. இதில் உடல்பருமன் தொடர்பான விவகாரத்தில் மரபணு கட்டுப்பாடு உள்ளதாக என்பது ஆய்வுப்பொருளாக இருந்தது. இதில் டிஏஎஸ்2ஆர்38 எனும் மரபணுதான் உணவின் கசப்பு சுவையை கணிக்ககிறது. இதனால்தான் பலரும் எளிதாக காய்கறி உணவுகளுக்கு மாறமுடியாமல் போகிறது. பலரும் சிப்ஸ், சாண்ட்விச் என சர்க்கரை அதிகம் கொண்ட குப்பை உணவுகளுக்கு மாறுவதற்கு கூட இந்த மரபணுதான் காரணம்.


சாப்பாடு சாப்பிட்டு திருப்தி கொள்ளாதவர்கள் அதிகம் சாப்பிட்டுத்தான் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு பிடிஎன்எப் என்பதை காரணம் என்கிறார்கள். இதுதான் உணவு உண்ட திருப்தியை தருவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒருவகையில் உடல் பருமனுக்கு நேரடியான காரணமாக மரபணுப் புரதம் காரணமாக உள்ளது. இப்படி உள்ள மரபணு அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லும்போது அவர்களும் தொப்பையைத் தள்ளிக்கொண்டு தடுமாறிக்கொண்டு வாழ்வார்கள். ஒருவர் தூங்கி எழுவதிலும் கூட மரபணுக்களின் தாக்கம் உள்ளது. இதனை உயிரியல் கடிகாரம் ஒழுங்கு செய்கிறது. ஒருவரின் தூக்கத்தை தீர்மானிக்கும் மரபணுவாக பேப்7 உள்ளதாக 2017இல் கார்டன் ஜெர்ட்ஸ்னர் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சிலர் மட்டும் இரவில் என்ன முயற்சி செய்தாலும் பிறரை ஏய்த்துவிட்டு தூங்காமல் வேலை பார்ப்பார்கள். ஆனால் பகலில் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் தினமே இரவில்தான் தொடங்கும். இதற்கும் கிரை1 என்ற மரபணுவுக்கும் தொடர்புண்டு.


இலைக்காக, சூரியனுக்கா எதற்கு ஓட்டு போடுவீர்கள் என பல வீடுகளிலும் வாக்குப்பதிவு தொடர்பாக விவாதம் வந்திருக்கும். பல பகுதிகளிலும் காசு கொடுத்து ஓட்டு வாங்கினார்கள். காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் வழக்கமும், எதற்கு ஓட்டு போட்டு என்னாவது என்றும் கூட சிலர் வாழ்கிறார்கள். இப்படி கூறுவது கூட பாரம்பரிய மரபணுரீதியாக வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் சென்றுகொண்டிருக்கின்றன. படிக்க ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை இப்படித்தான் உள்ளது.


பிபிசி

பீட்டர் பென




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்